Tuesday, February 06, 2007

புனைபெயர்களும் புதிரும்...

புனைபெயரில் எழுதி வந்துள்ள பலரின் உண்மையான பெயர் என்னெவென்று தெரிந்து கொள்ளும் ஆவல் நம்மில் பலருக்கும் இருக்கலாம். சிலருக்கு அவர்கள் யாரென்பது தெரிந்திருக்கலாம். பலருக்குத் தெரியாமலிருக்கலாம்.
தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்குக் சொல்லலாமே.


**** வண்ணத்தில் இருக்கும் பெயர்களுக்கு பின்னூட்ட்டங்கள் மூலம் விடைகள் வந்துவிட்டன.

01. அகஸ்தியன்
02. அகிலன்
03. அசோகமித்திரன்
04. அம்பை
05. ஆதவன்
06. இந்திரா பார்த்தசாரதி
07. ஏ.கே.செட்டியார்
08. கல்கி
09. கல்யாண்ஜி
10. கண்ணதாசன்
11. கடுகு
12. கர்நாடகம்
13. கரிச்சான் குஞ்சு
14. காந்தன்
15. சாவி
16. சாண்டில்யன்
17. சிட்டி
18. சுபா
19. சுஜாதா
20. செம்பியன்
21. சோ
22. ஜெகச்சிற்பியன்
23. ஸ்ரீ வேணுகோபாலன்
24. ஜீவா
25. ஸ்டெல்லா புரூஸ்
26. தமிழ்வாணன்
27. தாமரை மணாளன்
28. துமிலன்
29. தேவன்
30. பசுவய்யா
31. பரணீதரன்
32. பரந்தாமன்
33. பாக்கியம் ராமஸ்வாமி
34. புதுமைப் பித்தன்
35. புஷ்பா தங்கதுரை
36. பூவண்ணன்
37. பொன் வண்ணன்
38. ஞானி
39. ரகமி
40. ராண்டார்கை
41. ராஜெஷ் குமார்
42. மகரம்
43. மதன்
44. மனுஷ்ய புத்திரன்
45. மாயாவி
46. மெரினா
47. மௌனி
48. லஷ்மி
49. நாடோடி
50. வல்லிக் கண்ணன்
51. வண்ணதாசன்
52. வாதூலன்
53. வாண்டு மாமா
54. வாலி
55. விடையவன்

விடைகளும், விடுபட்டவைகளும் வரவேற்கப்படுகின்றன.


- சிமுலேஷன்

30 comments:

சிறில் அலெக்ஸ் said...

டைமிங்கா ஒரு பதிவு.

இலவசக்கொத்தனார் said...

என்னங்க ஒரே இளக்கியமா இருக்கு?! நான் இந்த ஆட்டத்துக்கு வரலை!

Simulation said...

என்ன டைமிங்? ஒண்ணும் புர்யல்யே!

Sridhar Venkat said...

ஏதோ அஞ்சாறு பெயர் கேப்பீங்கன்னு வந்தா பெரிய பட்டியலா இருக்கே. சீக்கிரம் விடையை போட்டிங்கன்னா சேமிச்சு வச்சிக்கிறேன் :-)

ஒருவரே பல புணைப்பெயர்களில் எழுதுவதும் உண்டே

உதாரணம்:-
கல்யாண்ஜி - வண்ணதாசன்
மெரினா - பரணீதரன்
புஷ்பா தங்கதுரை - ஸ்ரீவேணுகோபாலன்
அகஸ்தியன் - கடுகு

அப்புறம் விடுபட்டவைகள்

பாரதியார்
பாரதிதாசன்
சுரதா
எஸ் ஏ பி
ஞாநி (நீங்கள் சொல்லியிருப்பது ஞா'னி')
புனிதன்
லேனா தமிழ்வாணன்
மாலன்
பாலகுமாரன்
கோணங்கி
பிரமிள்
சாரு நிவேதிதா (எதுக்கும் ஜாக்கிரதையாக இருங்க. நெருதா, நீட்ஷே இல்லாத பட்டியல்ல என்னை எப்படி சேர்க்கலாம்னு.. கோச்சுக்க போறார். )
சுந்தர பாகவதர்
குட்டி ரேவதி (இதுவும் புனைப் பெயர்தானே(?!))
தேவிபாலா

வேறு பிரபலங்கள் நினைவுக்கு வந்தால் மீண்டும் வருகிறேன்.

Hariharan # 26491540 said...

எனக்குத் தெரிந்தது

19. ரங்கராஜன்(சுஜாதா)
21. ராமசாமி(சோ)
43. கோவிந்தகுமார் (மதன்)
40. எண்டமூரி வீரேந்திரநாத்(ராண்டார்கை)?

மிச்சமெல்லாம் சீக்கிரம் சொல்லுங்க தெரிஞ்சிக்கலாம் :-))

Johan-Paris said...

எனக்குத் தெரிந்தவை!
கண்ணதாசன் - முத்தையா
கல்கி - கிருஸ்ணமூர்த்தி
சாவி - சா.விஸ்வநாதன்
சுஜாதா - ரங்கராஜன்
சோ - ராமசாமி
வாலி - ரங்கராஜன்!
அத்துடன்; எனக்குத் தெரிய வேண்டிய வேறு விடயம்; வித்வான் பாலமுரளி கிருஸ்ணாவுக்கு "செவலியே"
விருது கிடைத்ததா? அந்த வருடம் என்ன?மின்னஞ்சல் இடவும்.johan54@free.fr
உங்கள் பழைய படமே எனக்கு மிகப் பிடித்தது.
நன்றி
யோகன் பாரிஸ்

Simulation said...

ஹரிஹரன்,

19. ரங்கராஜன்(சுஜாதா)
21. ராமசாமி(சோ)
43. கோவிந்தகுமார் (மதன்)
40. எண்டமூரி வீரேந்திரநாத்(ராண்டார்கை)?

19, 21, 43 சரி

40 தவறு

யோகன்,

10. கண்ணதாசன் - முத்தையா
08. கல்கி - கிருஸ்ணமூர்த்தி
15. சாவி - சா.விஸ்வநாதன்
19. சுஜாதா - ரங்கராஜன்
21. சோ - ராமசாமி
54. வாலி - ரங்கராஜன்!

உங்களின் இந்த எல்லா விடைகளுமே சரியானவை.

விடையளிக்கப்படாத மற்ற கேள்விகளுக்கான விடைகளை முயலலாம்.

- சிமுலேஷன்

பெத்த ராயுடு said...

03. அசோகமித்திரன் - தியாகராஜன்
18. சுபா - சுரேஷ் & பாலா
33. பாக்கியம் ராமஸ்வாமி - ஜ.ரா. சுந்தரேசன்
40. ராண்டார்கை - ரங்கதுரை

Simulation said...

03. அசோகமித்திரன் - தியாகராஜன்
18. சுபா - சுரேஷ் & பாலா
33. பாக்கியம் ராமஸ்வாமி - ஜ.ரா. சுந்தரேசன்
40. ராண்டார்கை - ரங்கதுரை

பெத்தராயுடு,

03,18,33,40 கேள்விகளுக்குச் சரியான விடைகள் கொடுத்துள்ளீர்கள்.

- சிமுலேஷன்

Sridhar Venkat said...

Some problem in my eKalappai. Hence typing in English... Apologies!

You did not add my list... Hence I am walking out from this game :-(((

Sridhar Venkat said...

Okay... let me also try some names that I know

Many of the known names had been provided by other friends.

Kalki - Krishnamurthy
Agasthyan / Kadugu - Ja Ra Sundaresan (?)
Saavi - Sa. Viswanathan
Chandilyan - Baashyam
Suba - Suresh Balakrishnan (two people)
Sujatha - Rangarajan
Cho - Ramasamy (The nickname is not his initial. It is the first name of a popular 'vasavu'. He was 'Chozhan Brahmahathi'. :-) )
Pasuvayya - Sundara Ramasamy
Bharanidharan / Marina - Sridharan (He is the cousin of the famous RK brothers)
Bhagyam Ramaswamy - Ja Ra Sundaresan
Vaali - Rangarajan
Bharathiyar - Subramanya Bharathi
Bharathithasan - Kanaga Subburathinam
S. A. P - S. A. Palaniappan
Lena Tamizvanan - Lakshmanan
Malan - Venkatanarayanan
Charu Nivethitha - Arivazhagan
Sundara Bhagavathar - Ja Ra Sundaresan
Kutty Revathy - Revathy

PRABHU RAJADURAI said...

மனுஷ்யபுத்திரன் = சாகுல் ஹமீது

Sridhar Venkat said...

Looks like I have not described this 'trivia' information properly.

Cho - Ramasamy

His father used to call him as 'Chozhan Brahmahathi', which is a kinda nick name. His family used to call him with the first letter of that name and he started using that as his 'Punai peyar'

Tulsi said...

புனிதன் = சண்முகசுந்தரம்

தி. ரா. ச.(T.R.C.) said...

12) கர்நாடகம்== ரா கிருஷ்ணமூர்த்தி
17சிட்டி== சிட்டிபாபு
26)தமிழ்வாணன்=ராமநாதன் செட்டியார்
29)தேவன்=மஹாதேவன்
31)பரணிதரன்=ஸ்ரீதர், ஸ்ரீலீ
46)மெரீனா=ஸ்ரீதர்
53)வாண்டுமாமா=கௌசிகன்

Simulation said...

பெரும்பாலான கேள்விகளுக்கு சரியான விடைகளித்த வெங்கட்டுக்கும், திராசவுக்கும், பிரபு ராஜதுரைக்கும் நன்றிகள்.

- சிமுலேஷன்

Simulation said...

04. அம்பை - சி.எஸ்.லஷ்மி
48. லஷ்மி - திரிபுர சுந்தரி

கீதா சாம்பசிவம் said...

கடுகு-பி.எஸ்.ரங்கநாதன்
புஷ்பா தங்கதுரை-ஸ்ரீவேணுகோபாலன்

கீதா சாம்பசிவம் said...

செம்பியன் - கி.ராஜேந்திரன்

கீதா சாம்பசிவம் said...

இருங்க, கொஞ்சம் வேலை இருக்கு வரேன்.

Boston Bala said...

6. parthasarathy
17. PG Sundarrajan
27. bhaskaran

தாணு said...

Nice attemt and prompt responses.

Simulation said...

கீதா சாம்பசிவம் மற்றும் பாஸ்டன் பாலா, உங்கள் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.

- சிமுலேஷன்

Ravi said...

02. அகிலன் --> அகிலாண்டம்
09. கல்யாண்ஜி --> கல்யாணசுந்தரம் 13. கரிச்சான் குஞ்சு --> நாராயணசாமி 34. புதுமைப் பித்தன் --> சோ.விருத்தாசலம்
39. ரகமி --> ரங்கசுவாமி
47. மௌனி --> மணி
51. வண்ணதாசன் --> கல்யாணசுந்தரம் (கல்யாண்ஜி is the same person)

Ravi said...

One correction:

Sridhar Venkat says "Sundara Bagavathar" is Ja Ra Sundaresan, but the person who wrote under this pseudonym was "Punidhan" (also a punaippeyar). His real name was Shanmuga Sundaram. You can read about the close association between Ja Ra Su, R.K.R. and Punidhan in RKR's compiled columns.

Simulation said...

விடுபட்டவைகளை யாரேனும் முயற்சிக்க விரும்புகின்றீர்களா?

Kataka said...

அகிலன்-P.V.அகிலாண்டம்

Kataka said...

நாராயணசுவாமி கரிச்சான் குஞ்சு-

Kataka said...

28. துமிலன்-ராமசாமி-
45. மாயாவி-ராமன்
49. நாடோடி-வெங்கடராமன்

அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் said...

53. வாண்டு மாமா

வாண்டுமாமாவின் இயற்பெயர் வி. கிருஷ்ணமூர்த்தி. தமிழ் குழந்தை இலக்கியத்தின் பிதாமகரான வாண்டுமாமாவை பற்றி மேலும் அறிந்து கொள்ள....
http://tamilcomicsulagam.blogspot.com/2010/03/vandu-mama-greatest-ever-story-teller.html