Sunday, March 26, 2006

உபவாசக் குரங்குகளும் உன்னதத் திட்டமிடலும்

ஒரு நாள் குரங்குக் கூட்டம் ஒன்று உண்ணாவிரதம் இருக்கத் தீர்மானித்தன. கூட்டத்திலுள்ள எல்லாக் குரங்குகளும் அதற்கு ஒத்துக் கொண்டன."உண்ணாவிரதம் முடிக்கும்போது ஏதேனும் சாப்பிட்டுத்தான் விரதத்தை முடிக்க வேண்டும். எனெவே, அதற்குத் தேவையான உணவை இப்போதே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்." என்றது தலைக் குரங்கு. எல்லாக் குரங்குகளும் "ஆமாம்; ஆமாம்" என்றன. குட்டிக் குரங்குக் கூட்டமொன்று உடனே தேடிச் சென்று, பழுத்த, சுவையான வாழைப் பழத்தார் ஒன்றினைக் கொண்டு வந்து சேர்த்தன....

Monday, March 20, 2006

பரிமாற்றப் பகுப்பாய்வு-01

பரிமாற்றப் பகுப்பாய்வு செய்து கொண்டிருக்கின்றேன் என்று யாராவது சொன்னால் பயந்து விடாதீர்கள். நீங்களும், நானும் கூட செய்யலாம். வழக்கம் போல பரிமாற்றப் பகுப்பாய்வு என்றால் என்ன எண்டு முதலில் விளக்கம் தெரிந்து கொள்வோம். பரிமாற்றப் பகுப்பாய்வு என்பது ஆங்கிலத்தில் Transactional Analysis எனப்படுகின்றது. பரிமாற்றப் பகுப்பாய்வு என்பது மானுட நடைமுறைகளை அறிவதன் பொருட்டு, முறைபடுத்தி, வகைப்படுத்தப்பட்ட ஒரு அணுகுமுறையாகும். விரைவாகவே விஷயத்திற்கு வந்து விடுகின்றேன்....

Tuesday, March 14, 2006

எட்டக எண் என்றால் என்ன?

இராம.கி அவர்கள் எழுதிய "புங்கம்" என்ற கட்டுரையில் சுத்திகரிப்பு ஆலை குறித்த சொல்லாடலில் எனக்குப் பிடித்த மொழிபெயர்ப்பு octane numberக்குச் சொல்லப்பட்ட "எட்டக எண்" ஆகும். மற்றவை வருமாறு:-பாறைநெய் (petroleum) நீர்ம எரிவளி (Liquid Petroleum Gas)நடுவத் துளித்தெடுப்புகள் (middle distillates) நெய்தை (naphtha) கன்னெய் - கல்நெய் (petrol or gasoline)மண்ணெய் (kerosene)டீசல் - வளிநெய் (gas-oil). துளித்தெடுத்தம் (distillation) சூழ்அழுத்தத் துளித்தெடுப்பு (atmospheric distillation) வெறுமத் துளித்தெடுத்தம் (vacuum distillation)குறை அழுத்த துளித்தெத்தல் (distilled...

Saturday, March 11, 2006

நிஜமல்ல... கதை

"வாங்க செல்வி. வாங்க. உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களைச் சொல்லுங்கம்மா" "மேடம், எங்களுக்கு கல்யாணம் ஆகி ஆறு வருஷம் ஆகுது. ஆனா, நான் போன ஆறு மாசமாப் படற அவஸ்தை சொன்னாப் புரியாது". "சொன்னாப் புரியாதுன்னு நீயா எப்படிம்மா சொல்ல முடியும்? என்ன கஷ்டப் படறீங்கன்னு, நீங்க வாய்விட்டுச் சொன்னாத்தான் புரியும். தயவு செய்து உங்க மனக்கஷ்டத்தை எல்லார் முன்னாடியும் கொட்டிருங்க. அப்பத்தான் உங்க மனச்சுமை குறையும்." "மேடம், என்னோட கணவர், தினமும் என்னை சிகரெட்டால...