
எனது "ராகசிந்தாமணி" புத்தகத்தினைப் படித்துவிட்டு தொலைபேசியில் கருத்துக்களைக் கூறியவர்களில் ரவி சுப்பிரமணியமும் ஒருவர். நாலைந்து முறை பேசிய போதும், நேரில் சந்தித்துப் பேசும் வாய்ப்பு சென்ற வாரம்தான் கிடைத்தது. சாகித்ய அகாடமியின் விருது பெறுபவர்கள் பொதுவாகச் சற்றே பழுத்தவர்களாக இருப்பார்களென்று நான் எண்ணியிருந்த வேளையில், அதன் பரிந்துரைக் கமிட்டியின் உறுப்பினராக இருக்கும் ரவி சுப்பிரமணியம் நடுத்தர வயதினராக இருந்தது சற்றே வியப்பை அளித்தது. கர்நாடக சங்கீதமும்,...