பெர்க்ளே யூனிவர்சிட்டியின் அந்த மையமண்டபத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருந்த கூட்டத்தில் கபிலனைக் கண்டு பிடிப்பது அவ்வளவு சிரமாயிருக்கவில்லை வீழிநாதனுக்கு. கபிலனை உணவகத்திகு அழைத்து சென்றார்.“என்ன கபிலன். கேள்விப்பட்டேன். அடுத்த வாரம் சென்னை போகப்போறதா...”“ஆமா ஐயா. என்னுடைய ஆராய்ச்சியை முடிச்சுட்டேன். அடுத்து என்ன பண்ணப் போறதுன்னு யோசிச்சிட்டிருக்கேன்.”“ஏன். உங்கள மாதிரி ஆட்களை எங்களோட கலிபோர்னியா யூனிவர்சிட்டிலே கொத்திக் கொண்டு போய்விட மாட்டோமா? இன்னமும் ரெண்டு நாள்லே உங்களோட பேசறேன் அது சம்பந்தமா. நீங்க இங்க இருந்த அஞ்சு வருஷதுல “தமிழர் பண்பாடு”...