
1934 ஆம் வருடம். "ஸ்ரீநிவாச கல்யாணம்" என்ற திரைப்படம் தயாராகிக் கொண்டிருக்கின்றது. படப்பிடிப்பும் நடக்கும்போதே, மரத்தடியில் ஆர்கெஸ்ட்ராக கலைஞர்கள் உட்கார்ந்து இசைக் கருவிகளை வாசித்துக் கொண்டிருக்கின்றார்கள். படப்பிடிப்பு நல்ல முறையில் நடை பெற்றாலும், பாடலில் இடையிலோ, இறுதியிலோ ஏதேனும் ஒரு சிறிய தவறு ஏற்பட்டாலும், படப்பிடிப்பை மீண்டும் முதல் சீனிலிருந்து துவங்க வேண்டும். விஷ்ணுவாக முக்கியப் பாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பி.எஸ்.ஸ்ரீநிவாச...