கடந்த சில வருடங்களாக "கர்னாடிகா.காம்" (Carnatica.com) என்ற அமைப்பு ஆங்கில வருட புத்தாண்டு துவங்கும் வேளையில் சென்னை மியூசிக் அகாடெமியில் கர்னாடக இசையின் அடிப்படையில் அமைந்த பல புதுமையான நிகழ்ச்சிகள் நடத்துவதுவும் வழக்கம். நானும் குடும்பத்துடன் இந்த நிகழ்ச்சிக்குத் தவறாமல் செல்வது வழக்கம். 2010 வருடத் துவக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குறிப்பிட்டுச் சொல்லும்படி அமைந்தது Dr.கடம் கார்த்திக்கின் மிமிக்ரி நிகழ்ச்சியாகும். அவர் பெரிதும் மதிக்கும் Dr.பாலமுரளி் கிருஷ்ணா அவர்களும் சேஷகோபாலன் அவர்களும் சேர்ந்து ஒரு ஜுகல்பந்தி நிகழ்ச்சி கொடுத்தால் எப்படியிருக்கும்...