வட மாநிலத்து அரசியல் தலைவர்கள், பொது இடங்களில் சந்திக்கும் போது முகமன் கூறிக் கொள்கிறார்கள் என்றும், பரஸ்பரம் குசலம் விசாரித்துக் கொள்கிறார்கள் என்றும் அப்படிப்பட்ட கலாச்சாரம் தமிழகத்தில் இல்லாதது வருத்தளிக்கும் விஷயம் என்று பல ஊடகங்களில் பல முறை எழுதப்பட்டுள்ளது. கருத்தால் மட்டுமே பிரிந்து நிற்கிறொமென்றால் அது சாத்தியம்; அது எற்கப்படுவத்து கூட.
ஆனால் இன்று நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள் மேடையில் பேசும் போது எதிரணியில் இருப்பவர்களை ஊழல்வாதிகளென்று ஆதாரத்துடன் கூறுவது மட்டுமல்லாது அவரகள் ஜாதி, மத ரீதியாகவும் இழிவு செய்து பேசவும் செய்கிறார்கள்.
அப்படிப்பட்ட...