
ஜீன்ஸ், லெகிங்ஸ், டிரவுசர் போன்ற ஆடைகள் அணிந்து வருபவர்களை பாரம்பரியமிக்க கோயில்களுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று அறநிலையத் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்த ஆடைக் கட்டுப்பாடு வரும் ஜனவரி 1-ம் தேதி அமலுக்கு வருகிறது.
உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெற்றியில் திருநீறோ, குங்குமமோ, சந்தனமோ, திருமண்ணோ இட்டுக் கொள்வது என்பது இந்துப் பாரம்பரியத்தின் முக்கிய அடையாளம். எனவே, இந்துக் கோயிலுக்கு...