
அது ஒரு சனிக்கிழமை மாலை! மனைவியையும்,
அம்மாவையும் கபாலி கோயில்
வாசலில் இறக்கிவிட்டு விட்டு வாகனத்தை நிறுத்த, வாகான இடம்
தேடினேன். அதிஷ்டவசமாக, அந்த
பிச்சுப்பிள்ளை தெரு எனப்படும் குட்டிச் சந்தில், காரை நிறுத்த
இடம் கிடைத்தது. காரை விட்டு இறங்கலாமென நினைக்கையிலேதான் அந்த ஆளைப் பார்த்தேன்.
பார்த்தேன் என்றால் நேருக்கு நேர் அல்ல…..காரின் ரியர்-வியூ மிர்ரர் வழியாகத்தான் பார்த்தேன். நல்ல ஆறடி
உயரம்…. தடியான தேகம்…. இன்சர்ட் செய்யப்பட்ட
சட்டை…. ஐம்பது...