Friday, December 30, 2005

இரட்டை வயலினில் இராகப் ப்ரவாகம்

இரட்டை வயலினில் இராகப் ப்ரவாகம் ------------------------------------------------- எம்.ஜி.ஆர் அவர்கள் ஒர் சிறந்த இசை இரசிகர் என்பது அவர்தம் படப் பாடல்களினாலேயே விளங்கும். ஒரு முறை அவர் தூரதர்ஷனில் வயலின் இசைக் கச்சேரி ஒன்று கேட்டுவிட்டு, அந்த வயலின் கலைஞர்களுக்கு ஓர் பாராட்டுக் கடிதம் எழுதினார். சில நாட்களில் அவர்களை தமிழக அரசின் அரசவைக் கலைஞர்களாகவும் நியமனம் செய்தார். அப்புகழுக்குரியவர்கள் யாரென்றால், பிறவிக் கலஞர்களான (prodigy) கணேஷ், குமரேஷ் சகோதரர்ளாகும். னேற்றைய தினம், நாரத கான சபாவில், கணேஷ், குமரேஷ் இரட்டை வயலின் கச்சேரி சென்னை இரசிகர்களை...

நடு இரவில் இசை - புத்தாண்டை வரவேற்க

கர்னாடிகா.காம் மற்றும் ம்யூசிக் அகாடெயின் ஆதரவில் இன்று இசை நிகழ்ச்சிகளுடன், புத்தாண்டு வரவேற்கப்படவிருக்கின்றது. குழு இசையும், ஒலி, ஒளிக் காட்சிகளும், வினாடி வினா போன்ற நிகழ்ச்சிகளும் இடல் பெறும் இந்த இசை நிகழ்ச்சியில், கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட பிரபலங்கள் பங்கேற்பதாகக் தெரிகின்றது. இடம்: சென்னை ம்யூசிக் அக்கடெமி னேரம்: 11 pm. - 1 am மேலதிக விபரங்களுக்கு: 42124130 / 98400 15013 இது ஒரு ALL AR WELCOME நிகழ்ச...

Tuesday, December 27, 2005

கர்னாடக இசைக் கலைஞர்களை வைத்து ஒரு ஆர்கெஸ்ட்ரா

கர்னாடக இசைக் கலைஞர்களை வைத்து ஒரு ஆர்கெஸ்ட்ரா யாராவது செய்தால் எப்படி இருக்கும் அன்று அடிக்கடி எண்ணிக் கொள்வேன். வெற்றிகரமாகவும், புதுமையாகவும், ஏதேனும் செய்து வரும் முத்ரா பாஸ்கர் உபயத்தால் நேற்று அந்த ஆசை நிறைவேறியது. நேற்று வள்ளுவர் கோட்டம் அருகேயுள்ள ப்ரீடம் ஹாலில் நடைபெற்ற இந்த கர்னாடிக் ஜுகல் பந்தி நிகஷ்ச்சியில், குழல், கீ போர்ட், சிதார், தபலா உதவியுடன் 8 பாடகர்கள் திரு.எல்.கிருஷணன் இசை அமைத்த 24 பாடல்களை பாடினர். உங்களில் பலருக்கும் தெரிந்த பாடல்கள்தான். பாடல்களின் விபரமும், பாடியவர்கள் பெயரும் தருகின்றேன். 1. பச்சை மாமலை போல் மேனி -...

Sunday, December 25, 2005

பாமரனுக்கும் இசை சேர வேண்டுமா?

புரிந்து கொள்வது என்பது வேறு. இரசிப்பது என்பது வேறு. புரிந்து கொண்டால் மேலும் இரசிக்க முடியும் என்பதும் உண்மை. "கர்னாடக இசை எனக்குப் புரியவே மாட்டேன் என்கிறது. ஏன் பாமரனை அடையும் படியாக பாட யாரும் பாட முயற்சி செய்ய மாட்டேன் என்கிறார்கள்" என்று பலரும் அடிக்கடி கூறுகிறார்கள். எதற்காக இந்த உயர்ந்த கலை மட்டும் பாமரனைச் சென்றடைய வேண்டும், அந்தப் பாமரன் தனது அறிவையும், இரசனைத்தன்மையயும் உயர்த்திக் கொள்ள மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும் பட்சத்தில். னேர் நேர் தேமா; நிரை நேர் புளிமா; நேர் நிரை கூவிளம்; நிரை நி¨ரி கரு விளம் என்றெல்லாம் அலகிட்டு...

Saturday, December 24, 2005

கர்னாடக இசையில் தமிழ்த் திரைப் பாடல்கள்

கர்னாடக இசையில் தமிழ்த் திரைப் பாடல்கள் தமிழ்த் திரைப் பாடல்களில் கர்னாடக இசை இராகங்கள் என்ற கருத்தைக் கொண்டு, 'ராகசிந்தாமணி" என்ற தலைப்பில் நான் வெளியிட்டிருந்த புத்தகம் குறித்து, திரு.சுஜாதா அவர்கள், இந்த வார ஆனந்த விகடனில் 'கற்றதும் பெற்றதும்" கட்டுரையில் குறிப்பிட்டது அறிந்து வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றி. தமிழ்த் திரைப் பாடல்களில் கர்னாடக இசை ஒரு புறமிருக்க, கர்னாடக இசையில் தமிழ்த் திரைப் பாடல்கள் பற்றிப் பார்ப்போம். கர்னாடக இசையில், பாரதி பாடல்கள், பாரதிதாசன் பாடல்கள், சிலப்பதிகாரப் பாடல்கள் அதிகம் பாடப்பட வேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர்....

Friday, December 09, 2005

புயலுக்குப் என்ன பெயர்?

புயலுக்குப் என்ன பெயர்?மேற்கத்திய நாடுகளின் மரபை ஒட்டி, நாமும் புயலுக்குப் பெயர் வைக்க ஆரம்பித்துவிட்டோம். ஆனால் பெயரில் என்ன? (What is in a name?) என்று அசட்டையாக இருந்து விடக் கூடாது. பாஜ் என்றும் பனூஸ் என்றும் யோசனையின்றிப் பெயர் வைப்பது ஆபத்தையே விளைவிக்கும். fanoos என்பதன் கூட்டுத் தொகை 6 ஆகும். இதனால் அதிக சேதங்கள் ஏற்படல்லாம். அதற்குப் பதிலாக fanoosh என்று ஒரு h சேர்த்துக் கொண்டால் சேதங்கள் குறைய வாய்ப்புண்டு. அமெரிக்காவில் ரீட்டா என்ற புயல்லால் ஏற்பட்ட சேதங்கள் ஏராளம். காரணம் புயலுக்கு மட்டும் ர, ரா, ரி, ரீ என்று ரன்னகரத்தில் துவங்குமாறு...