Wednesday, February 08, 2006

அருந்தொண்டாற்றிய தமிழக அந்தணர்கள் - புதிர்கள்

1. "அருந்தொண்டாற்றிய தமிழக அந்தணர்கள்" புத்தகத் தொகுப்பினைத் தலை மீது வைத்து நடந்த்து வந்த ஐந்து வயது அருண்குமாரின் அப்பா ஆச்சரியப்பட்டார். ஏன்?

2. உஷாஸ்ரீயும், தேவாவும் பஸ் ஸ்டாண்டில் தமது பெண் குழந்தைகளுடன் பஸ்ஸ¤க்காகக் காத்திருந்தனர். தேவாவையும், குழந்தைகளைªயும், 'மகளிர் மட்டும்' பஸ்ஸில் ஏற்றி விட்டு, அடுத்த பஸ்ஸில் தான் வருவதாகச் சொல்கிறார் உஷாஸ்ரீ. எப்படி?

3. 1988ல் ரகுராமையா கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில், வெற்றி பெற்றிருந்த அணியில், தானும் இருந்தாக, வினோத் காம்ப்ளி சொன்ன போது, சச்சின் டெண்டுல்கர், விழுந்து விழுந்து சிரித்தார். ஏன்?

4. கார்ப்பொரேஷன் மைதானத்தில் கால்பந்து ஆடிக் கொண்டிருந்த்த, கோல் கீப்பர் கண்ணனுக்கு, பந்து தலையில் பட்டு, மண்டை உடைந்தது. எப்படி?

5. ராம் யாதவ் வளர்த்து வந்த ஒரு கருப்பு ஆடு, கிருஷ்ண யாதவ்வின் கருப்பு ஆட்டு மந்தைக்குள் நுழைந்து விட்டது. ஊனம் ஒன்றுமில்லாத தனது ஆட்டை, நொடியில் கண்டுபிடித்துக் கொண்டு வந்துவிட்டான் ராம் யாதவ். எப்படி?

6 comments:

லதா said...

2. தேவா மகளிர்மட்டும் பேருந்தில் ஓட்டுனராக / நடத்துனராகப் பணிபுரிபவர்

3. ரகுராமையா கோப்பை கிரிக்கெட்டுக்காக அல்ல.

4. கண்ணன் தலையில் வந்து மோதியது கிரிக்கெட் / ஆக்கி பந்து. அல்லது கால் பந்து தலையில்பட்டு கண்ணன் கீழே விழும்போது கோல்போஸ்டில் மண்டை உடையுமளவு இடித்துக்கொண்டார்

Simulation said...

வந்த முதல் மூன்று பதில்களுமே மட்டுறுத்தல் செய்யப்பட்டு னீக்கப்பட்டு விட்டன.

மகேஸ் said...

உஷாஸ்ரீயும், தேவாவும் தோழிகள்

Simulation said...

லதா அவர்களே,

னான்காவது கேள்விக்கான உங்கள் விடை சரியே. கார்பொரேஷன் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த மற்றொரு குழுவிலிருந்து வந்த பந்துதான் கண்ணனது மண்டையைப் பதம் பார்த்து விட்டது.

Simulation said...

மகேஸ், உங்கள் விடை தவறு.

Simulation said...

1. "அருந்தொண்டாற்றிய தமிழக அந்தணர்கள்" புத்தகத் தொகுப்பினைத் தலை மீது வைத்து நடந்த்து வந்த ஐந்து வயது அருண்குமாரின் அப்பா ஆச்சரியப்பட்டார். ஏன்?

ஐந்து புத்தகங்கள் கொண்ட தொகுதி கிட்டத்தட்ட 3-4 கிலோ எடை இருக்கும். அதனைத் தனது ஐந்து வயது மகன் எப்படித் தலையில் தூக்கி வந்த்தான் என்றே அவன் அப்பா ஆச்சரியப்பட்டார்.

2. உஷாஸ்ரீயும், தேவாவும் பஸ் ஸ்டாண்டில் தமது பெண் குழந்தைகளுடன் பஸ்ஸ¤க்காகக் காத்திருந்தனர். தேவாவையும், குழந்தைகளைªயும், 'மகளிர் மட்டும்' பஸ்ஸில் ஏற்றி விட்டு, அடுத்த பஸ்ஸில் தான் வருவதாகச் சொல்கிறார் உஷாஸ்ரீ. எப்படி?

உஷாஸ்ரீ-ஆண். தேவா-பெண். உஷாஸ்ரீயின் மனைவி தேவா. முன்னவர் பெயரில் என்னுடன் ஒரு ஆண் ஊழியர் பணிபுரிந்தார். பின்னவர் பெயரில் ஒரு வானொலித் தொகுப்பாளினி கூட உள்ளார்.

3. 1988ல் ரகுராமையா கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில், வெற்றி பெற்றிருந்த அணியில், தானும் இருந்தாக, வினோத் காம்ப்ளி சொன்ன போது, சச்சின் டெண்டுல்கர், விழுந்து விழுந்து சிரித்தார். ஏன்?

ரகுராமையா கோப்பைக்கான கிரிக்கெட் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே (லோக் சபா மற்றும் ராஜ்யசபா) னடைபெறும் போட்டியாகும்.

4. கார்ப்பொரேஷன் மைதானத்தில் கால்பந்து ஆடிக் கொண்டிருந்த்த, கோல் கீப்பர் கண்ணனுக்கு, பந்து தலையில் பட்டு, மண்டை உடைந்தது. எப்படி?

கார்பொரேஷன் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த மற்றொரு குழுவிலிருந்து வந்த கிரிக்கெட் பந்துதான் கண்ணனது மண்டையைப் பதம் பார்த்து விட்டது.

5. ராம் யாதவ் வளர்த்து வந்த ஒரு கருப்பு ஆடு, கிருஷ்ண யாதவ்வின் கருப்பு ஆட்டு மந்தைக்குள் நுழைந்து விட்டது. ஊனம் ஒன்றுமில்லாத தனது ஆட்டை, நொடியில் கண்டுபிடித்துக் கொண்டு வந்துவிட்டான் ராம் யாதவ். எப்படி?

ராம் யாதவ் வளர்த்த ஆட்டிற்கு Radio Frequency Identification (RFID) Tag போடப்பட்டிருந்தது. RFID scanner துணைகொண்டு தனது ஆட்டை, நொடியில் கண்டுபிடித்துக் கொண்டு வந்துவிட்டான் ராம் யாதவ்.