Friday, February 17, 2006

இழிது இழிது ஈயெனெ இரத்தல் இழிது; அதனினும் இழிது.....

நியூயார்க் 'பென்' (Penn) ஸ்டேஷனில், ஆங்காங்கு அறிவிப்புப் பலகைகளில், "தட்டு ஏந்துபவர்களை ஊக்குவிக்காதீர்கள்; அவர்களைக் கவனித்துக் கொள்ள தொண்டு நிறுவனங்கள் உள்ளன" (Do not encourage pan-handlers; Charities are there to take care of them), என்று எழுதி வைக்கப்பட்டிருக்கும். இந்த அமெரிக்கவாசிகள், மாதா மாதம் ஒரு தொண்டு நிறுவனத்திற்கு, டாலர்களை நன்கொடையாகக் கொடுத்து விட்டுக் குற்ற உணர்ச்சியிலிருந்து தப்பித்து விடுகிறார்கள். ஆனால், நம்ம பாடு கஷ்டம்தான். அது போன்ற ஒழுங்குடன் உருப்படியாக அமைப்புகள் ஏதும் இருக்காது. எங்கு திரும்பினாலும், பிச்சைக்கார்கள் மயம்தான். கோவில் வாசலில் பிச்சை, ஹோட்டல் வாசலில் பிச்சை, டிராபிக் சிக்னலில் பிச்சை. அவர்களுக்குப் பிச்சை போடாவிட்டால், மனித நேயம் இல்லாத மனிதனா நீ என்று மனசாட்சி கேள்வி கேட்க ஆரம்பித்து விடும். போடுவது ஒரு ரூபாயோ, ஐம்பது பைசாவோ பிச்சை இட்டாலோ, பிச்சைக்காரர்களை ஊக்குவித்து ஒரு சோம்பேறிச் சமுதாயத்தை வளர்க்க நாமும் ஒரு காரணகர்த்தாவாக இருக்கிறோமோ என்ற ஒரு குற்ற உணர்ச்சி ஏற்படும்.

டிராபிக் சிக்னலில், பாதுகாப்பு விதிகளை மீறி, வண்டிகளுக்கு நடுவே பூந்து புறப்பட்டுப் பிச்சையெடுப்பவர்களைப் பார்த்தால் பற்றிக் கொண்டு வரும். ஒரு வாரக் கடைசியில் குடும்பத்துடன், ஹோட்டலுக்குச் சென்று ஒரு பிடி பிடித்துவிட்டு, வெளியே வந்தவுடன், உடனே ஹோட்டல் வாசலில், நாலைந்து கைகள் நீளும். இதில் எந்தக் கை உண்மையிலேயே தானம் பெறத் தகுதியான கை என்று உங்களுக்குத் தெரியாது. உண்மையாலுமே பசியால் வாடும் பார்ட்டியாக இருக்கலாம். அல்லது, உழைக்காமலே சோம்பேறித்தனமாகவே உட்கார்ந்து சாப்பிடப் பிறந்த ஜென்மமாகக்கூட இருக்கலாம். ஒவ்வொரும் முறையும், பிச்சை போடக் கூடாது என்று முடிவு செய்து, பின்னர், அவர்களின் பாவப்பட்ட முகங்களப் பார்த்தவுடன், பிச்சை போட்டு விடுவது வழக்கம்.

கமல் நடித்த 'பேசும் படம்' என்ற ஒரு படத்தில் ஒரு பிச்சைக்காரனது பாத்திரம் வரும். இறுதியில்தான் தெரியும், கோஷ்டி, படு வெயிட்டான பார்ட்டி ஒன்று என்று. இது போல, புகழ் பெற்ற கோவில்களின் வாசல்களில், பிச்சை எடுப்பதையே வாழ்நாள் முழுவதும், முழுநேரத் தொழிலாகக் கொண்டோர் பல பேரைப் பார்த்திருக்கின்றேன். இவர்களுக்கு ஒருக்காலமும் உதவி செய்வதில்லை என்று தீர்மானித்ததுண்டு. ஆனால் இதே கோவில் வாசல்களில், உண்மையிலேயே பரிதாபத்துக்குரிய சிலரைப் பார்க்கலாம். அவர்களுக்கு உதவி செய்யாமலிருக்க மனசு வராது.

பெரும்பாலான மதங்கள், தானம் கொடுப்பதை, (பிச்சை போடுவதை) ஊக்குவிக்கின்றன. ஆனால் அது, அந்தக் காலத்துக்கு ஏற்றதாக இருந்திருக்கலாம்.தற்காலத்தில் இது சரியா? தெரியவில்லை. பசியோடு வந்து பிச்சை கேட்கும் ஒரு சிறுவனிடம், "ஏண்டா, உழைத்துச் சம்பாதிக்க மாட்டேங்கிறாய்? நான் வேலை வாங்கித் தரட்டா?", என்று சில பேர் ப்ளேடு போட்டுக் கொண்டிருப்பார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை.

"போடுவது ஐம்பது பைசாவோ அல்லது ஒரு ரூபாயோ. இதற்காகவென்று ஒரு பதிவு வேறு தேவையா?" என்று நீங்கள்கூடக் கேட்கலாம். பிரச்னை அதுவல்ல. பிச்சைக்காரர்களை ஊக்குவிக்கலாமா அல்லது கூடாதா என்பதுதான் இங்கு வாதம். உங்கள் கருத்து என்னெவென்று சொல்லுங்கள்.

3 comments:

NONO said...

இந்தக் கேள்வியை நானும் எணக்குள் பல முறை கேட்டிருக்கிறேன்!!சரியா? பிழையா? நேரடி பதில் என்னிடம் இல்லை! பசிக்கிறது என்று யாராவது கேட்டால் தயங்காமல் வேண்டிக்குடுப்பேன்!! காசு முடிந்தவரை குடுப்பது இல்லை என்பது எனது முடிவு!!! முழு அழவில் ஊணம் உள்ளவர்கள், அல்லது வாடிய முகத்துடன் தோற்றம் அழிக்கும் பெண்ணாகும் பச்சத்தில் காசாய் பெறும் சந்தர்ப்பம் அதிகம்!!!

அதே நேரம் நானாய் வலிய போய்(கிட்டத்தட்ட நடைபாதையில் கூடாரம் அமைத்து வாழ்த) ஒரு ஏழை குடும்பத்துக்கு ஒரு தொகை வழங்க நினைத்து அவர்கள் என்ன நினைப்பார்களே, அல்லது அவர்களை அவமாணபடுத்து வதாக உணர்வார்களோ என நினைத்து திரும்பி வந்ததும் நடந்துள்ளது!!!

Simulation said...

லாஸ் ஏஞ்சல்ஸ் சுவாமிநாதன் அவர்கள்
----------------------------------
மரத்தடியில் இட்ட மறுமொழி
--------------------------

'இழிது இழிது ஈயென இரத்தல் இழிது'.....

இது என்ன கலைஞர் தோழமைக் கட்சிகள் "வயத்தில அடிக்காமப்
பாத்துப் போட்டு, தேர்தல்ல போட்டியிடத் தொகுதி கொடுங்க"னு
கேட்ட போது கலைஞர் சொன்னதா?

கலைஞர் வசனம் எழுதிய பராசக்தி படத்தில் எSஎSஆர்
பிச்சைக்காரர்களைத் திரட்டி மானாடு நடத்துவதாய் ஒரு காட்சி வரும்.
கலைஞர் பதவி ஏற புதிசில் சீர்காழியில் ஒரு பிச்சைக்காரர் விடுதி
கட்டப்பட்டு திறப்பு விழா செய்ததுண்டு. பிச்சைக்காரர்கள் யாரும்
கோயில் கடைத்தெருவை விட்டு விடுதிக்கு வர பிரியப்படாததால்
துப்பாக்கி முனையில் காவல் துறை சிலரை அழைத்து வந்து திறப்பு விழா
இனிது நிறைவேறியதாம். "ஏனயா விடுதிக்கு வரக் கசப்பு. இலவச உணவு,
தங்க இடம் கிடைக்குதில்ல" என்று போலீS கேட்க, பிசைக்காரர்கள்
சொன்னார்களாம்,"பெரிய சாப்பாடு. ரெண்டு வேலைக்கு சோறு போடறீங்கனு
இங்க வந்து தங்கிட்டா கோயில், மார்க்கட்டுல வர வருமானம் போயிடுமில்ல.
அதை யார் தருவாங்க" என்றார்களாம்.

கன்ணை விழித்து, தட்டில் போட்ட காசை எடுத்துப்பார்த்து "குருட்டுப் பிச்சைக்காரன்னு
செல்லாக் காசை போடறான் பாரு கஞ்சப்பய" என்று வைதாராம் ஒரு
பிச்சைக்காரர்.

பிச்சையெடுத்தே லட்சாதிபதியானவர்களும் உண்டு. "செல்போன் பணம் கட்டணும்.
அம்பது ரூபா போடுங்க சாமி" என்று பிச்சை எடுப்பவர்களும் உண்டாம்.

"ஏம்பா இப்பல்லாம் நீ மேலத்தெருல பிச்சை எடுக்க வரதில்ல" என்று
கேட்டவருக்கு " அந்தத் தெருல பிச்சை எடுக்குற உரிமைய என் மருமகனுக்கு
வரதட்சிணையாக் கொடுத்திட்டேன்" என்றாராம் ஒரு பிச்சைக்காரர்.

இங்கு சூப்பர் மார்க்கட் வாசலில் "சாப்பிடக் காசில்லை" என்று ஒரு
பெண்மணி பிச்சை எடுப்பாள். ஒரு நாள் நான் அவளுக்குப் பணம் போட,
கடைக்காரப்பெண்மணி என்னிடம் வந்து தனியாகச் சொன்னாள், "இவளுக்குக்
காசு போடாதே. இவள் போதைப்பொருளுக்கு அடிமை. போதை ஊசிகுத்திக்கொள்ள
காசு கேட்கிறாள். இதை ஆதரிக்காதே".

கொடுக்கிற பணத்தை அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்க முடியாது.
காசு போடாமல் குழம்பு சாதமா போடமுடியும் ? இரவில் ஒரு குடும்பத்தலைவிக்கு
போன் வந்ததாம் ராப்பிச்சையிடமிருந்து "பழங்கொழம்பு வேணாம். அய்யா வெச்சதுன்னா
வேணாம். நீங்க புதிசா பண்ணியிருந்தா என் செல் நம்பருக்கு ஒரு கால் போடுங்க,
வந்து வாங்கிக்கறேன்".

பிச்சை போட பர்சைத் திறந்தால் பறித்துக் கொண்டு ஓடும் பிச்சைக்காரர்கள்
உண்டு. "டாலர் நோட்டு கண்ணுக்குத் தெரியுதே. ஏன் சில்லரையைத் தேடி நோண்டி எனக்குப்
போடறே" என்று இடித்துரைப்பவர்களும் உண்டு. மும்பை விமான நிலையத்தில்
தர்மம் கேட்ட ?ரே கிரு?ண இயக்க வெள்ளைக்காரப் பெண்மணிக்கு, இங்கிருந்து விடுமுறைக்குப்
போன இந்திய நண்பர் அஞ்சு ரூவாய் போட, அவள் "இந்தியன் நீ. உனக்குத் தெரியாதா
இந்த அஞ்சு ரூபாய்க்கு இங்க எதுவும் கிடைக்காதுன்னு. நூறு ரூவா போடு"ன்னு பொரிஞ்சுதள்ள,
சுத்திக் கூட்டம் கூட, இருநூறு ரூபாய் போட்டுவிட்டு ஓடிய கதையை அறிவேன்.
பார்க்கப் பாவமாயிருக்கிறான் என்று பரிதாபப்பட்டு ஒரு பெண்மணி ஐம்பது பைசா தர்மம்
போடப்போக, அவள் காசு போடுமுன்,
அவளுக்குத் தன் கையிலிருந்து ஒரு ரூபாயைக் கொடுத்து "என்னம்மா உங்க தலையில்
இவ்ளோ பொடுகு. இந்த ரூபாய்க்கு ஒரு "¡ம்பூ பாக்கிட் வாங்கித் தலைக்கு தேச்சுக் குளிங்க"
என்று அறிவுரை கொடுத்தாராம் ஒரு பிச்சைக்காரர்.

பாத்திரமறிந்து பிச்சையிடு என்பது பழமொழி..சரி..கையறிந்து பிச்சை கேட்டலும் நலம்.

"ஏன் அந்த அமைச்சர்கிட்ட நீ பிச்சை கேட்கலே"

"அவரே பெரிய அளவில பிச்சை எடுக்க வெளிநாடு போறாரேன்னு விட்டுட்டேன்"

ஐயமிட்டு உண் என்று பிச்சையிடுதலை ஊக்கினார்கள். ஏற்பது இகழ்ச்சி என்று
பிச்சை வாங்குவதை இடித்துரைத்தார்கள். கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும்
கற்கை நன்றே என்று கோடி காட்டினார்கள். கல்வி கற்கக் கேட்பவர்களுக்கு கொடுப்பதில்
தப்பில்லை என்று தோன்றுகிறது. தேவைகள் மாறி பிச்சையெடுப்பதே மாறிவிடலாம்...
"அய்யா.....f¡வா படிக்க ரூவா போடுங்கோ" .


சுவாமிநாதன்
லாS ஏஞ்சலS

supersubra said...

தேர்தல் நேரத்தில் நீங்கள் இப்படி பிச்சை போடவேண்டாம் என்று தீர்மானம் செய்தால் அரசியல் வாதிகள் பாவம் உங்களை சேரும்