Saturday, February 18, 2006

தமிழ்த் தாத்தா உ.வே.சா

காவேரி வாய்ப்படவும், கறையான் வாய்ப்படவும், இருந்த கடைக்கழக நூல் ஏட்டுச் சுவடிகளை, ஊரூராகவும், தெருத்தெருவாகவும், வீடு வீடாகவும், திரிந்து தேடியும், விறகுத் தலையன்போல் தலையிற் சுமந்து கொணர்ந்தும், அல்லும் பகலும் கண்பார்வை ¦கெடக் கூர்ந்து நோக்கிப் படித்தும், அரிய ஆராய்ச்சிக் குறிப்புகளும், ஒப்புமைப் பகுதிகளும் வரைந்தும், ஆராய்ச்சியாளர்களுக்குப் பேருதவியாகவும், பிறர்க்குப் பெரும் பயன்படவும், வெளியிட்டவர் தென்கலைச் செல்வர் பெரும்பேராசிரியர், பண்டாரகர், உ.வே.சாமினாதயரே (1855-1942) என்று தமிழ்ப் பேராசிரியர் தேவநேயப் பாவாணர் எழுதி இருந்த போதும், "தமிழ்த் தாத்தா" என்ற பெயருக்கான காரணம் புரிபடவில்லை, அன்னாரின் தமிழ் பதிப்புப் பணிப் பட்டியலைப் பார்க்கும் வரை.




ஆண்டு வயது பதிப்பு
------ ----- ------
1878 23 வேணுவனலிங்க விலாசச் சிறப்பு (க.தொ)
1885 30 மத்தியார்ச்சுன மான்மியம் (உ)
1887 32 சீவக சிந்தாமணி
1889 34 பத்துப் பாட்டு
1892 37 சிலப்பதிகாரம்
1894 39 புறநானூறு
1895 40 புறப்பொருள் வெண்பாமாலை
1897 42 திருப்பெருந்துறைப் புராணம்
1998 43 மணிமேகலை
பௌத்த மும்மணிகள் (உ)
மணிமேகலைக் கதைச் சுருக்கம் (உ)
1999 44 மணிமேகலைக் கதைச் சுருக்கம் (ப.2)
1900 45 பௌத்த மும்மணிகள் (ப.2)
1901 46 மணிமேகலைக் கதைச் சுருக்கம் (ப.3)
1902 47 பௌத்த மும்மணிகள் (ப.3)
1903 48 ஐங்குறுநூறு
வீரவனப் புராணம்
சீகாழிக் கோவை
திருவாவடுதுறைக் கோவை
1904 49 பதிற்றுப் பத்து
சூரை மாநகர்ப் புராணம்
திருக்காளத்தி நாதருலா
திருப்பூவண நாதருலா
1905 50 திருவாரூர்த் தியாகராஜ லீலை
மணிமேகலைக் கதைச் சுருக்கம் (ப.4)
1906 51 திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம்
திருவிளையாடற் புராண பயங்கர மாலை
திருவுசாத்தான நான்மணி மாலை
கடம்புவன புராணம் (ஒரு பகுதியுடன்)
1907 52 சீவக சிந்தாமணி (ப.2)
தனியூர்ப் புராணம்
மண்ணிப் படிக்கரைப் புராணம்
தேவையுலா
1908 53 பௌத்த மும்மணிகள் (ப.4)
1909 54 மணிமேகலைக் கதைச் சுருக்கம் (ப.5)
1910 55 திருவாரூருலா
மகாவித்துவான் திரிசிபுரம் ஸ்ரீமீனாட்சி சுந்தரம் பிள்ளை
அவர்கள் பிரபந்தத் திரட்டு
1911 56 பௌத்த மும்மணிகள் (ப.5)
மணிமேகலைக் கதைச் சுருக்கம் (ப.6)
1912 57 திருக்காளத்திப் புராணம்
1913 58 திருக்காளத்திப் புராணம் (ப.2)
1914 59 திருத்தணிகை திருவிருத்தம்
1915 60 புறப்பொருள் வெண்பாமாலை (ப.2)
1917 62 மணிமேகலைக் கதைச் சுருக்கம் (ப.7)
1918 63 பத்துப் பாட்டு (ப.2)
பரிபாடல்
திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம்
நன்னூல் மயிலை நாதருரையுடன்
1919 64 திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம் (ப.2)
1920 65 சிலப்பதிகாரம் (ப.2)
ஐங்குறுநூறு (ப.2)
பதிற்றுப்பத்து (ப.2)
பெருங்கதை
1921 66 மணிமேகலை (ப.2)
1922 67 சீவக சிந்தாமணி (ப.3)
1923 68 மணிமேகலைக் கதைச் சுருக்கம் (ப.8)
1924 69 புறநானூறு (ப.2)
1925 70 நன்னூல் சங்கர நமச்சிவாயர் உரையுடன்
1926 71 உதயணன் கதைச் சுருக்கம்
மகாவித்துவான் திரிசிபுரம் ஸ்ரீமீனாட்சி சுந்தரம் பிள்ளை
அவர்கள் பிரபந்தத் திரட்டு
1927 72 சிலப்பதிகாரம் (ப.3)
பூண்டி அரங்கநாத முதலியார் (உ)
1928 73 கமலை ஞானப் பிரகாசர் (உ)
1929 74 சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும் (உ)
பௌத்த மும்மணிகள் (ப.6)
1930 75 மதுரைச் சொக்கநாதர் தமிழ்விடு தூது
திரிமயிலை திரிபந்தாதி
தக்கயாகப் பரணி
கோபாலகிருஷ்ண பாரதியார் (உ)
1931 76 பத்துப் பாட்டு (ப.3)
மணிமேகலை (ப.3)
மதுரைச் சொக்கநாதருலா
ஆனத்தருத்ரேசர் வண்டு விடுதூது
1932 77 கடம்பர் கோயிலுலா
பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது
கொட்டையூர் ஸ்ரீசிவக் கொழுந்து தேசிகர் பிரபந்தங்கள்
மதுரை மும்மணிக்கோவை
பழனி இரட்டைமணி மாலை
பழனி பிள்ளைத் தமிழ்
1933 78 சங்கர நயினார் கோயில் சங்கரலிங்க உலா
திருக்கழுக்குன்றச் சிலேடை வெண்பா
மயிலை யமக அந்தாதி
பாசவதைப் பரணி
மகாவித்துவான் ஸ்ரீமீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் -
சரித்திரம் (முதற்பாகம்) (உ)
1934 79 விளத்தொட்டிப் புராணம்
ஸ்ரீதியாராஜ செட்டியார் பிரபந்தங்கள்
சங்கர நயினார் கோயிலந்தாதி
வலிவுல மும்மணிக் கோவை
சத்யவாசகர் இரட்டை மணிமாலை
புறப்பொருள் வெண்பா மாலை (ப.4)
மகாவித்துவான் ஸ்ரீமீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் -
சரித்திரம் (இரண்டாம்பாகம்) (உ)
1935 80 புறநானூறு (ப.3)
பரிபாடல் (ப.2)
பெருங்கதை (மூலம் குறிப்புரை மட்டும்)
ஆற்றூர்ப்புராணம்
திருஇலஞ்சி முருகனுரை
பழமலைக் கோவை
கலசைக் கோவை
உதயண குமார காவியம்
நன்னூல் சங்கர நமச்சிவாயம் உரையுடன் (ப.2)
1936 81 புறநானூறு (மூலம் அரும்பத உரையுடன்)
மண்விடு தூது
கோபால கிருஷ்ண பாரதியார் (உ)
மகாவைத்யநாதையர் (உ)
நான் கண்டதும் கேட்டதும்
பழையதும் புதியதும் (உ)
திருவள்ளுவரும் திருக்குறளும் (உ)
1937 82 குறுந்தொகை
சிராமலைக் கோவை
திருவாரூர்க் கோவை
தமிழ் நெறி விளக்கம்
நல்லூர்க் கோவை (முதற்பாகம்) (உ)
1938 83 திருக்கழுக்குன்றத்து உலா
அழகர் கிள்ளை விடு தூது
சிவசிவ வெண்பா
திருமலை ஆண்டவர் குறவஞ்சி
திருக்காளத்தி நாதர் இட்ட காம்ய மாலை
நல்லுரைக் கோவை (இரண்டாம் பாகம்) (உ)
1939 84 தணிகாசலப் புராணம்
புகையிலை விடுதூது
ஸ்ரீகுமர குருபர் சுவாமிகள் பிரபந்தங்கள்
திருப்பேரை மகர நெடுங் குழைக் காதர் பாமாலை
1940 85 வில்லைப் புராணம்
திருக்குற்றாலச் சிலேடை வெண்பா
நினைவு மஞ்சரி (உ)
1951 86 பதிற்றுப் பத்து (ப.3)
மணிமேகலை கதைச் சுருக்கம் (ப.10)
1952 87 வித்துவான் தியாகராஜச் செட்டியார் (உ)
நினைவு மஞ்சரி (இரண்டாம் பாகம்)
செவ்வைச் சூடுவார் பாகவதம் (பதிப்புப் பணி ஏற்பு மட்டும்)
சீவக சிந்தாமணி (ப.4)
ப - பதிப்பு
உ - உரை நடை நூல்

5 comments:

Simulation said...

தமிழ்த் தாத்தா என்று அவர் வாழ்ந்த காலத்திலா அழைக்கப்பட்டார்? அது மக்கள் தந்த பட்டம். அவர் வாழ்ந்த காலத்துக்குப் பிறகு. அவர் இருந்த காலத்தில் அவரைத் தமிழ்த் தாத்தா என்று அழைத்ததுண்டா?

நிதியறியோம் இவ்வுலகத்து ஒருகோடியின் பலவகை நித்தம் துய்க்கும் கதியறியோம் என்று மனம் வருந்தற்க குடந்தைநகர்க் கலைஞர் கோவே! பொதியமலைப் பிறந்தமொழி வாழ்வறியும் காலமெல்லாம் புலவர் வாயில் துதியறிவாய் அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய்; இறப்பின்றித் துலங்குவாயே. என்று பாரதி பாடிய சந்தர்ப்பத்தில் அவருக்குத் தரப்பட்டது மஹா மஹோபத்தியாய என்ற பட்டம். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பாரதியே பாடியது. 'அந்தப் பாடல்கள் எல்லாமே ஆபாசக் களஞ்சியம்' என்று உவேசா சொன்னதாக பாரதியிடம் யாரோ சொல்லி வைக்க, மனம் வருந்தி பாரதி அந்த இடத்தை விட்டே போய்விட, தன் உரையின் தொடக்கத்தில் உவேசா, 'இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் படிக்கப்பட்ட பாடல்கள் அற்புதச் சுவைகொண்டவை. அவற்றை மீண்டுமொரு முறை கேட்க விரும்புகிறேன்' என்று சொல்ல, வந்து மேடையேறிப் படிக்க அங்கே பாரதி இல்லாமல்
போக....

தமிழ்த் தாத்தா என்று அவர் அறியப்படுவது அவர் காலத்துக்குப் பிறகு. இப்படித்தான் நினைக்கிறேன்.

அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.
http://www.harimozhi.com

G.Ragavan said...

வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம். காணமல் போக இருந்த தமிழ்த்தாயை மீண்டும் தேடித் தேடிக் கண்டு பெற்றதால் அவர் தமிழன்னைக்குத் தந்தை போன்றவர். ஆகையால்தான் தமிழர்க்குத் தாத்தா என்னும் தமிழ்த் தாத்தா என்னும் பட்டம்.

தமிழ் தமிழ் என்று மேடையேறி முழங்கவில்லை. தெருத்தெருவாக ஊரூராகச் சென்று தமிழ்ச் செல்வங்கங்களைத் தேடித் தந்த பெருமகனார். அவர்தம் புகழ் வாழ்க. பெருமை வாழ்க. தமிழர்கள் நெஞ்சில் என்றும் வாழ்க.

Muthu said...

அருமை..தமிழ் தாத்தா இல்லையென்றால் பல பண்டைய இலக்கியங்களை இழந்திருப்போம்.தமிழ் இருக்கும் வரை அவர் பெயர் நிலைத்திருக்கும்.

Pas S. Pasupathy said...

உ.வே.சா -விற்குத் 'தமிழ்த் தாத்தா' என்ற பட்டத்தைச் சூட்டியவர் 'கல்கி' கிருஷ்ணமுர்த்தி. உ.வே.சா -வின் சதாபிஷேகத்தின் (1935) போது 'விகடனில்' வெளியிட்ட ஒரு கடிதத்தில் தான் அந்தப் பெயர் முதலில் வந்தது. இதைப் பற்றி மேலும் அறிய 'சுந்தா' எழுதிய 'பொன்னியின் புதல்வர்', , அத்தியாயம் 39-இல் பார்க்கவும். 'தமிழ்த் தாத்தா' என்ற பெயர் எப்படிப் பொருந்தும் என்றும், இரண்டு 'த்' நீக்கினால் 'தமிழ் தாதா', தமிழ் தா! தா!' என்றெல்லாம் விளையாடி இருக்கிறார் 'கல்கி' அந்த 1935- விகடனில் வந்த கடிதத்தில் .

'விகடனில்' வந்த 'என் சரித்திர'த்தின் இரு பக்கங்களைப் பார்க்க,

http://groups.google.com/group/yAppulagam/

சென்று , 'Pictures' þ¨Æ¢ø ¯ûÇ ¸¨¼º¢ (10) Á¼¨Äô À¡÷ì¸×õ.

¯.§Å.º¡ ÀüÈ¢ ¿¡ý '¸¨ÄÁ¸Ù'ìÌ ±Ø¾¢Â ´Õ À¡¼¨Ä

http://www.thinnai.com/poems/pm0504037.html

-þø À¡÷ì¸Ä¡õ.



ÀÍÀ¾¢

சிவபாலன் said...

நல்ல பதிவு!

வாழ்த்துக்கள்!