Thursday, February 23, 2006

அனைவரையும் கவரும் ஐயப்பன் ஆலயம்சமீபத்தில் திருச்சி சென்ற போது, அங்குள்ள கன்டோன்மென்ட் ஐயப்பன் ஆலயத்திற்குச் சென்றிருந்தோம். இந்த ஆலயத்தில் என்னையும் மற்றும் பெரும்பாலோனரையும் கவர்ந்த அம்சங்கள் வருமாறு:-

1. எந்த மதத்தினரும் ஆலயத்தில் நுழையலாம்.

2. ஆண்டவன் பெயரிலே மட்டுமே அர்ச்சனை செய்யப்படுகிறது.

3. அமைதிக்கு முக்கியத்துவம் தந்து, "அமைதியாய் இருக்கலாமே!", "மெளனமாய் தரிசிக்கலாமே!" என்று ஆங்காங்கே பலகைகள். இப்படிப் பல்வேறு அறிவுரைப் பலகைகள். ஆனால் எதுவுமே வலிந்து பேசாதவை. உ-ம்;"அருகம்புல் கூட அனுமதி பெற்றே பறிக்கலாமே".

4. காமிரா, மொபைல் போன் அனுமதியில்லை.

5. குறிப்பிட்ட இடம் தவிர,எந்த இடத்திலும் சூடம், விளக்கு எற்றக் கூடாது.

6. உண்டியல் கிடையாது.

7. தட்டில் காசு போடுதல் கிடையாது.

8. கேசட், ஸ்பீக்கர் கொண்டு பாடல்களை அலற வைக்கும் வழக்கம் இல்லை. மென்மையான சங்கீதம் காற்றில் தவழ்ந்து வருகின்றது.

9. புல்வெளிகளும், பூங்காக்களும் பச்சைப் பசேலென்று பராமரிக்கப்படுகின்றன.

10. மலஜலம் கழித்துவிடக் கூடிய கைக்குழந்தைகளைத் தவிர்க்குமாறு தாய்மார்கள் வேண்டப்படுகின்றார்கள்,

11. பக்தர்கள் தாங்கள் விரும்பும் நேரம் வரை அமைதியாய் அமர்ந்து தியானம் செய்ய, தியான மண்டபம் உள்ளது.

12. பக்தர்கள் அனைவரும் கண்ணியமான உடை அணிந்து வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆண்கள் பெர்முடாஸ், லுங்கி, ஜீன்ஸ் முதலியனவற்றைத் தவிர்க்க வேண்டும். பெண்களும் அவ்வாறே. துப்பட்டாவுடன் கூடிய சூடிதார் மட்டுமே அணிய வேண்டும். துப்பட்டா இல்லாதவற்கு, ஆலயத்தின் வாயிலில் துப்பட்டா வழங்கப்படுகின்றது. இதனையும் கண்ணியமாக அணிவது எப்படி எனவும் ஓர் பலகை விளக்குகின்றது.

6 comments:

Boston Bala said...

---ஆண்கள் பெர்முடாஸ், லுங்கி, ஜீன்ஸ் ---

Whats ur take on this :-)

My 2 cents...
If 'shorts'/bermudas is barred, then even the kids should be instructed to wear full-pants. If lungi is not of taste, then Dhoti should also be given the same yardstick.

Whats the diff between Jeans, corduroys, trousers... Do they specify the clothing material like 70% polyester :P

Simulation said...

பாலா,

பெர்முடா போட அனுமதிப்பதில்லை என்பதனை நீங்கள் இரசிக்கவில்லை என்றே நினைக்கின்றேன். என்னைப் பொறுத்தவரையில், பெர்முடாஸ், ஜீன்ஸ், லுங்கி ஆகி¢யவற்றைக் கோவில்களில் தடை செய்வது சரியென்றே நினைக்கின்றேன்.

ஒரு முறை சென்னை பெசண்ட்நகரிலுள்ள புகழ்பெற்ற கோவிலினுள் ஒரு என்.ஆர்.ஐ குடும்பம் தங்கரதம் இழுத்துக் கொண்டிருந்தது. குடும்பதிலுள்ள ஆண், பெண் அனைவரும் பெர்முடாஸ் அணிந்து கொண்டு தங்கரதம் இழுத்த காட்சியைக் கண்டு, கணேசப் பெருமான், தனது தம்பியான, பழனியாண்டியின் பக்தர்கள் வழி மாறி வந்து விட்டார்களோ என்றெண்ணியிருப்பார்.

சரி. உங்கள் அலுவலகங்களில், வெள்ளி தவிர மற்ற நாட்களில் ஜீன்ஸ் அணிய அனுமதியுண்டா? இல்லையெனில் காரணம் என்ன?

Boston Bala said...

---வெள்ளி தவிர மற்ற நாட்களில் ஜீன்ஸ்----

Some offices do have that principle. In our place, we can come in shorts even on weekdays :-) (but weather has a different enforcement tale ;-))

In US we are enforced to wear suit/tie, if we had direct interaction with the client. It is good to maintain professional attire, when U present (sometimes stupid) ideas to strangers. Its like a powerpoint presentation of self (the formal dress).

When one is before God, if I start noticing others' dresses, I have other problems to worry :D

Simulation said...

05-07-2006 தேதியிட்ட இன்றைய 'துக்ளக்' இதழில், 'நெஞ்சில் ஓர் ஆலயம்' என்ற தலைப்பில், இந்த ஆலயம் குறித்து, சத்யா ஒரு சிறிய கட்டுரை வரைந்துள்ளார்.

- சிமுலேஷன்

Johan-Paris said...

என்ன சிமுலேசன்! பகிடி விடலைதானே!
உண்டியலில்லாத கோவிலா??? என்னைக் கிள்ளிப் பாத்தேனுங்க! கல்லுக்கு முன் கூட உண்டியல் வைப்பாங்களே! தட்டிலும் காசு போடத் தேவையில்லையா?? ஐயோ!!! ஐயர் நிச்சயமா,? புழுவைப் போல பாக்கமாட்டார் தானே! நம்பக் கஸ்டமா இருக்குங்க!
சாமியே சரணம் ஐயப்பா!
யோகன் பாரிஸ்

Johan-Paris said...

அன்புடன் போஸ்ரன் பாலாவுக்கு!
தங்களுக்குத் தமிழ் வாசிக்க முடியுமென நினைக்கிறேன். உங்களுக்குப் புரியும் படி எழுதும் ஆங்கில அறிவு எனக்கில்லை. கட்டைக் காற்சட்டைகள் கோவில்களில் தடை செய்வது சரியே!எந்த வழிபாட்டுத்தலத்திலும் இது தடை செய்யப் படவேண்டியதே! செய்கிறார்கள்; பிரான்சில் பிரபல மாதாகோவில்;(வேளாங்கன்னிக்கு நிகரானது) லூட்சில் 1 கிலோ மீற்றருக்குள்ளேயே அனுமதியில்லை.இலங்கையில் எந்த விகாரையுள்ளும் அனுமதியில்லை.துருக்கி சென்ற போது எந்த
மயூதியுள்ளும் அனுமதி இல்லை. அந்த உடுப்புடன் வரும் சுற்றுலாப் பயணிகள் மனம் கோணாது; சுற்றிக்கட்டத் துண்டு கொடுக்கிறார்கள். பாரிசில் பிரபல நாட்டிய நாடக அரங்கு OPERA ; இதன் பற்றுச்சீட்டில் ; மண்டப நிர்வாகிகளைத் திருப்திப் படுத்தும் உடையுடன் வந்தாலே உள் அனுமதி எனச் சிவப்பில் கொட்டை எழுத்தில் எழுதி நடைமுறைப் படுத்துகிறார்கள். ஆகக் கூடுதலான விலை 100 யூரோ நுளைவுச் சீட்டு வாங்கியிருந்தாலும்; சுதந்திரம் என்பது அடுத்தவன் மூக்கு நுனிமட்டு மெனக் கருதுகிறார்கள்.
உங்கள் கருத்துப்படி குழந்தைகளை அனுமதிப்பதால்;பெரியோரையும் அனுமதிக்க வேன்டுமென்கிறீர்கள். இது எப்படி இருக்கென்றால் "சில நேரம் சிறுவர் கோவிலுள் ஒண்ணுக்குப் போயிடுவாங்க! அதைப் பெருசு படுத்துவதில்லை. அதனால் பெரியவர்களையும் விடனுமென்கிறீங்களா?? புரியலீங்க!!!
எங்கே; எவருக்கு- எந்த உடை என்பதைப் பழகுவோம்;புரிவோம்.
மன்னிக்கவும், உங்கள் ஆங்கிலத்தை இப்படித்தான் நான் புரிந்தேன்.
யோகன் பாரிஸ்