Saturday, March 11, 2006

நிஜமல்ல... கதை



"வாங்க செல்வி. வாங்க. உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களைச் சொல்லுங்கம்மா"

"மேடம், எங்களுக்கு கல்யாணம் ஆகி ஆறு வருஷம் ஆகுது. ஆனா, நான் போன ஆறு மாசமாப் படற அவஸ்தை சொன்னாப் புரியாது".

"சொன்னாப் புரியாதுன்னு நீயா எப்படிம்மா சொல்ல முடியும்? என்ன கஷ்டப் படறீங்கன்னு, நீங்க வாய்விட்டுச் சொன்னாத்தான் புரியும். தயவு செய்து உங்க மனக்கஷ்டத்தை எல்லார் முன்னாடியும் கொட்டிருங்க. அப்பத்தான் உங்க மனச்சுமை குறையும்."

"மேடம், என்னோட கணவர், தினமும் என்னை சிகரெட்டால சுட்டு, இம்சை பண்ணறார்!."

"என்னது!. தினமும் சிகரெட்டால சுடுவாரா? என்னமோ டெய்லி காபி குடிக்கிற மாதிரி சொல்றீங்க!."

"ஆமாம். மேடம். ஒரு நாள் விடாம, தினமும் இந்தக் கொடுமை நடக்கும்"

"நேயர்களே. செல்விக்கு நடக்கிற இந்தக் கொடுமையைப் பார்த்தீங்களா. இந்த மாதிரி கொடுமை செல்விக்கு மாத்திரமல்ல. இந்த நாட்டிலே பல பெண்களுக்கு ஏற்பட்டுகிட்டிருக்கு. ஆனா, இந்த மாதிரி கொடுமை ஏன் நடக்கிறது? அவர்கள் கணவர்கள் ஏன் இப்படி நடந்துக்கிறாங்க? சரி, செல்வியின் கணவர் கிருஷ்ணனும் இங்க வந்திருக்கிறார். அவரையே கேப்போம்."

"வாங்க, கிருஷ்ணன், செல்வி சொல்றது உண்மையா? நீங்க அவங்களை சிகரெட்டால
சூடு வப்பிங்களாமே."

"ஆமாம்." கிருஷ்ணன் தலையக் கவிழ்ந்து கொள்கிறார்.

"என்ன கிருஷ்ணன். இப்படி செய்யிறதுக்கு ஒங்களுக்கு வெக்கமாயில்லையா? ஏன் இப்படிப் பண்ணறீங்க?"

"மேடம். எனக்கும் அதுதான் தெரியலை. என்னயும் அறியாமப் பண்ணிடறேன்."

"கிருஷ்ணன். நீங்க பேசுறது எனக்குப் புரியவேயில்லை. அறியாம எப்படி இந்த மாதிரிப் பண்ண முடியும்?... ஒரு நிமிஷம் இருங்க. கிருஷ்ணன் ஒரு போன் கால் வருது."

"ஹலோ"

"ஹலோ!. மேடம் நான் தாம்பரத்திலேர்ந்து ராஜகோபால் பேசறேன்."

"சொல்லுங்க ராஜகோபால்"

"மேடம், இந்தப் ப்ரொக்ராமை டி.வியிலே பார்த்துகிட்டு இருக்கேன். நான் செல்வி, கிருஷ்ணன் இவங்க பக்கத்து வீட்லதான் குடியிருக்கேன்."

"அப்படியா ராஜகோபால். இவங்களை உங்களுக்குத் தெரியுமா? இந்த விஷயமும் தெரியுமா?"

"நெறையவே தெரியும் மேடம். இவங்க இரண்டு பேரும் நல்லாவே பொய் சொல்லறாங்க. இவங்க சொல்றது போல எதுவுமே நடப்பதில்லை. இவங்க இரண்டு பேரும் அவங்க மூஞ்சி டிவியிலே தெரியுணும்னு இப்படி நாடகம் ஆடறாங்க. ஆமாம் நான் சொல்றது உண்மைதான் மேடம். எப்படி நடிக்கணும்னு இவங்க போனவாரம் வீட்ல பேசிக்கிட்டிருந்ததை நானும் கேட்டிக்கிட்டுதான் இருந்தேன். ஆனா அவங்க, தாங்க இந்த மாதிரி திட்டம் போட்டது யாருக்கும் தெரியாதுன்னு நெனைச்சுக்கிட்டிருக்காங்க."

செல்வி விக்கி விக்கி அழுகின்றார்.

"ஓகே. ராஜகோபால். எங்களுக்குப் போன் பண்ணி உண்மையைச் சொன்னதுக்கு ரொம்பத் தாங்ஸ். நிகழ்ச்சியத் தொடர்ந்து கவனியுங்க"

"செல்வி எதுக்கு இப்படி அழறீங்க. ராஜகோபால் சொன்னது உண்மதானா?"

"ஆமாம் மேடம். உண்மைதான்"

"எதுக்காக இப்படிப் பண்ணிட்டீங்க"

"இல்லை மேடம். என்னோட வொய்புக்கு டி.வியிலே வரணும்னு, குறிப்பா சீரியல்லே வரணும்னு ரொம்ப ஆசை. அதுக்காக நாங்க என்னென்னவோ முயற்சி செய்து பார்த்துட்டோம். ஒரு சான்ஸ் கூட கெடைக்கல. ஏதாவது பிரச்னை அப்படீன்னு சொல்லிகிட்டு இங்க வந்தா. அட்லீஸ்ட் ஒரு இருபது நினிஷம் டி.வியிலே வரலாமேன்னுதான் இப்படித் திட்டம் போட்டோம்."

"மேடம், எங்களை மன்னிச்சிடுங்க. எங்க மூஞ்சியும் டி.வியிலே வரணும்னு ஒரு வெறியிலே இப்படிப் பண்ணிடோம்."

"ஹலோ"

"ஹலோ"

"மேடம் நான் பிலிம் இன்ஸ்ட்டிட்யூட் ஸ்டூடன்ட் கார்த்தி பேசறேன்"

"சொல்லுங்க கார்த்தி"

"மேடம். இப்ப டி.வியிலே வந்தாங்களே செல்வி. அவங்க அட்ரஸ் வேணும் மேடம்."

"எதுக்கு"

"அவங்க நடிப்பு நல்லா இருந்தது. இந்த மாதிரி இயல்பா நடிக்கிறவங்களைத்தான் நானும் ரொம்ப நாளாத் தேடிக்கிட்டுருந்தேன். அவங்க ஹஸ்பெண்டுக்கு ஆட்சேபணை இல்¨லன்னா, அவங்களை எங்கள் முதல் சினிமாவுக்கு ஹீரோயினா புக் பண்ண விரும்பறோம்."

செல்வியும், கிருஷ்னனும் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைகின்றனர்.

"கார்த்தி சார், ரொம்ப தாங்ஸ். உங்களுக்கு எங்க ப்ரொக்ரோம் மூலமா ஒரு ஹீரோயின் கிடைச்சது எங்களுக்கு ஒரு பெருமை."

"நேயர்களே, செல்வி பாருங்க. என்ன ஒரு தன்னம்பிக்கை! தன்னுடைய முகம் டி.வியி§லா, சினிமாவிலோ தெரியணும்கிறதுக்காக எப்படி கஷ்டப்பட்டு ஐடியா போட்டுகிட்டு வந்திருக்காங்க! அதுக்கு அவங்க கணவர் கிருஷ்ணனும் முழு ஒத்துழைப்பும் கொடுத்திருக்கார். புது டைரக்டர் கார்த்தியோட அறிமுகமாகப் போகிற செல்விக்கு நம்ம சமூகம் வாழ்த்துகளைத் தெரிவிச்சே ஆகணும். சமூகம்னா யாருங்க? நீங்களும், நானும்தான். நாளைக்கு இன்னொரு நிஜத்துடன் சந்திப்போம்."

----0-----

11 comments:

RS said...

பிரமாதம் போங்க.

Dr.Srishiv said...

ஹா ஹா ஹா
அருமையான வடிவம், இப்படித்தான் இன்றைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சென்றுகொண்டிருக்கின்றன சிமு:)
ஸ்ரீஷிவ்

Simulation said...

ராம்ஸ், ஷிவ் உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி

பினாத்தல் சுரேஷ் said...

மனம் மகிழ்ந்து சிரிக்க முடிந்தது சிமுலேஷன். குறிப்பாக - "சமூகம் என்பது யாருங்க? நீங்களும் நானும்தான்" - ஐந்து நிமிடம் விடாமல் சிரித்துக்கொண்டிருந்தேன்!

மஞ்சூர் ராசா said...

நிதர்சனமான உண்மை. நன்றாக நகைச்சுவை சொட்டும் வண்ணம் எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

பொன்ஸ்~~Poorna said...

நல்லா இருக்குங்க.. கடைசி ட்விஸ்ட் எதிர்பார்க்கவே இல்லை :)

Ananya Mahadevan said...

சிமுலேஷன்
சூப்பர்ங்க.. ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது. ஊர் வம்புன்னா நம்ம பெண்களுக்கு என்னா இண்ட்ரெஸ்டு! ஸ்பா.. முடியல..
நான் ஸ்டாப் காமெடி.. அதுவும் சினிமா சான்ஸ்!!! அல்டிமேட் போங்க..

Simulation said...

அநன்யா மஹாதேவன்,

முதன் முறையாக எனது வலைமனைக்கு வருகை தந்ததற்கும், பாராட்டிக்களுக்கும் நன்றி.

- சிமுலேஷன்

Simulation said...

அன்புள்ள பினாத்தலார், மஞ்சூர் ராசா, பொன்ச் பூர்ணா எல்லோருக்கும் பிலேட்டட் நன்றிகள்.

- சிமுலேஷன்

அன்புடன் அருணா said...

நல்லாருக்கு கதை!

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஹா... ஹா.... இந்தக் கதையே நல்லா இருக்கு,