Wednesday, May 31, 2006

வலைப்பூ குறித்த நூல் ஆய்வுப் பணிக்காக...

"அன்பு வலைப்பதிவாளர்களே!
ஓர் ஆய்வுக்காக இந்தப்பதிவு.வலைப்பூ குறித்த நூல் ஆய்வுப் பணியொன்றில் உள்ளேன்.
வலைப்பதிவாளர்கள் தங்கள் வலைப்பூவினை இந்த ஆய்வுக்காக சேர்த்துக் கொள்ளலாம் என நினைக்கும் பட்சத்தில், ஆய்வுநூலில் தங்கள் வலைப்பதிவினை சேர்த்துக்கொள்ள சம்மதம் தெரிவித்து, கீழே கொடுத்த விபரங்களை பூர்த்தி செய்து, தங்கள் வலைப்பூவில் தனிப்பதிவாக இட்டு, அதன் சுட்டியினை(url) இங்கே பின்னூட்டத்தில் அளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்." என்ற மதுமிதா அவர்களின் வேண்டுகோளினையேற்று...

வலைப்பதிவர் பெயர்: சுந்தரராமன்

வலைப்பூ பெயர்: சிமுலேஷன் படைப்புகள்

சுட்டி(url): http://simulationpadaippugal.blogspot.com

ஊர்: பிறந்தது-மேட்டுப்பாளயம் (கோயமுத்தூர்)-25 வருடங்களுக்கு மேலாக வசிப்பது சென்னை

நாடு: இந்தியா

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: நானேதான்

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம்: 20.08.2005

இது எத்தனையாவது பதிவு: 45

இப்பதிவின் சுட்டி(url): http://www.blogger.com/post-create.g?blogID=13812519

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: ஆரம்பத்தில் மரத்தடியில் உறுப்பினர். அடிக்கடி வலைப்பதிவு என்ற வார்த்தையப் பற்றிக் கேள்விப்பட்டதால் அது என்னவென்று புரிந்து, அதன் அருமை றிந்து, அங்கும் காலடிபதிக்க ஆசை.

சந்தித்த அனுபவங்கள்: அனுபவங்களைப் பகிற்கிறேன்; (மற்றவர்கள்) பகிர்ந்தவற்றை அனுபவிக்கின்றேன்

பெற்ற நண்பர்கள்: ஒரு சிலர் (அடுத்த வலைப்பதிவர் சந்திப்பில் சிலர் பலராகலாம்)

கற்றவை: ஒவ்வொரு நாளும் / ஒவ்வொரு ஆயிரம் நொடிகளிலும் ஒவ்வொரு திசையிலிருந்தும் வரும் புதுப் புது விஷயங்கள்

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: சொல்ல ஒன்றுமில்லை

இனி செய்ய நினைப்பவை: ஆங்கிலத்திலுமோர் வலைப்பதிவு

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: சுத்திகரிப்பு ஆலையில் கெமிகல் எஞ்ஜினீயராகத் துவங்கிய பணி, பின்னர் அங்கேயே மென்பொருள் துறையில் நுழைந்தது - உபயம் சிமுலேஷன் டெக்னாலஜி. தற்போது கற்றவற்றை மறந்துவிடாதபடி எண்ணெய் மற்றும் எரிசக்திக் துறைகளுக்கான மென்பொருள் ஆலோசகர் பணி.

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: பொழுதுபோக்காய் "தமிழ்த் திரைப்பாடல்களில் இராகங்கள்" என்று பல வருடங்களாகத் தொகுத்தவற்றை, புத்தகமாகப் போடக் கிடைத்த தைரியம் மரத்தடியிலும், வலைப்பதிவிலும் எழுதிய பின்னரே கிடைத்தது. குடும்பத்தினர் ஒத்துழைப்பு அடுத்த வலிவான காரணம். மிகவும் ஆச்சரியமான மற்றும் மகிழ்ச்சியான விஷயம் RagaChintamani என்ற பெயரில் ஆங்கிலத்தில் சொந்தச் செலவில் வெளியிட்ட இந்தப் புத்தகத்தின் முதல் பதிப்பு, மூன்றே மாதங்களில் விற்றுத் தீர்ந்தது. 160 இராகங்களில் அமைந்த 1800 பாடல்களின் விபரங்கள் கொண்ட இந்தத் தொகுப்பின் இரண்டாம் பதிப்புக்கு, அலுவலக வேலைப்பளுவினால் தாமதமாகிக் கொண்டிருக்கிறது.

5 comments:

மஞ்சூர் ராசா said...

அட நம்ம ஊர் பக்கம். மரத்தடியில் உங்கள் மடல்களை அடிக்கடி பார்த்திருக்கிறேன். கச்சிதமான அறிமுகம்.

வாழ்த்துக்கள்.

ஓகை said...

சிமுலேஷன்,

மூன்று மாதங்களில் முதல் பதிப்பு முழுவதும் விற்றதற்கு என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் புத்தகம் எங்கள் வீட்டில் அற்புதமாக பயன்படுகிறது. அடுத்த பதிப்பிற்கு வாழ்த்துக்கள். புத்தக முதுகில் பெயர் போடுங்கள். ஜி ராமநாதனுக்காக ஒரு வரி சேருங்கள். நன்றி.

எனது வலைபூவிற்கு ஒரு நடை வந்துபாருங்கள்.

அன்புடன்

நடராஜன்.

Simulation said...

Natarajan,

Thanks for your comments.

I have visited your blog too. The lay out is simple and readable. But the number of posts are less compared to your contributions in Maraththadi. Please write more.
More review later.

(currently typing from a system which isnot having e-kalappai)

- Simulation

ராசுக்குட்டி said...

ஆய்வுப்பணி இன்னும் போய்கிட்டு இருக்கா... எங்கு சுட்டியை கொடுக்க வேண்டும் என்றும் சொல்லுங்களேன்!

Simulation said...

ராசுக்குட்டி,

கீழ்க்காணும் தளத்தில் சென்று விபரம் அறிந்த்து மதுமிதா அவர்களுக்கு மடலிடுங்கள்

http://madhumithaa.blogspot.com/2006/05/2.html

- சிமுலேஷன்