Friday, August 11, 2006

கிளைகளற்ற மரங்கள் - தேன் கூடு - உறவுகள் - கவிதைப் போட்டி



"அடுத்த வீட்டு ஆத்ரேயா,

அத்தை, மாமாவுடன் அலைந்தானாம்;

சின்னக் குட்டி ஷில்பாவோ,

சித்தி, சித்தப்பாவுடன் சென்றாளாம்.

எனக்கென்று அப்படி

யாருண்டு இன்றிங்கு?" என்று கேட்ட

பேரப் பிள்ளையிடம்,

பேச்சை மாற்றும் வழி மறந்து,

பேதலித்து நின்றாள்,

முப்பது வருட முன்பாக

முதல் குழந்தையுடன் போதுமென

முடிவெடுத்த

முத்துப் பாட்டி.


- சிமுலேஷன்

9 comments:

Simulation said...

தலைப்பை மட்டும், "கிளைகளற்ற மரங்கள்" என்று திருத்தி வாசிக்கவும்.

- சிமுலேஷன்

VSK said...

பேதலித்து நிற்பானேன்!?

பேசாமல் பேரனிடம் சொல்லி

அம்மாவிடம் தம்பியோ தங்கையோ

கேட்கச் சொன்னால் போயிற்று!

முளைக்காதோ புதுக் கிளைகள்?

வாராதோ புது உறவுகள்!!??

erode soms said...

'நச்' சென்று நாலுவரியில்
உறவுகளும் சிறுகதையாகிக்கொண்டிருக்கும் அவலம் சொன்னீர் வாழ்க!

சிறில் அலெக்ஸ் said...

nice thought

Simulation said...

SK, சித்தன், சிறில் அலெக்ஸ்,

வாசிப்புகளுக்கும், பாராட்டுகளுக்கும் நன்றிகள்!

SK,

"அத்தை, மாமன், சித்தி, சித்த்ப்பா", உறவுகள் கேட்கும் பேரனிடம்,
"தம்பிப் பாப்பா வேணுமா, தங்கைப் பாப்பா வேணுமா", என்று கேட்பது நியாயமா?

- சிமுலேஷன்

Jazeela said...

இந்த கிளையில்லனா வேறு கிளையுமா இல்லை. அப்பா முறையில் உறவில்லாட்டி அம்மா முறை பாட்டியுமா ஒன்னும் சொல்ல முடியாமல் நிற்கிறாள்?

Simulation said...

வாசிப்புக்கு நன்றிகள் ஜெசிலா.

அம்மா முறைப் பாட்டியும், அவ்வாறே முடிவெடுத்தவர்.

&

அம்மா முறைப் பாட்டி ஊருக்குப் போய் விட்டார்.

or

அம்மா முறைப் பாட்டி ஒரு ஊமை

or


அம்மா முறைப் பாட்டி மண்டையைப் போட்டுவிட்டார்.

(ரேட்டிங் ஏத்த வேண்டாமென்றால், மெகா சீரியல் வழியில், யாரையாவது காலிபண்ணினால் தப்பில்லைதானே!)

:-)

கதிர் said...

நல்ல கவிதை!

வாழ்த்துக்கள் சிமுலேஷன்!!

அன்புடன்
தம்பி

Simulation said...

வாசிப்புக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிகள் தம்பி.

- சிமுலேஷன்