Wednesday, August 30, 2006

சென்னை குவிஸ்

27.08.2006 ஞாயிறன்று மதியம், மயிலையில், "சென்னை தின விழா" கொண்டாட்டங்களின் நிறைவுப் பகுதியாக, "சென்னை குவிஸ்" ஒன்று பி.எஸ். மேல்நிலைப் பள்ளையில் நடைபெற்றது. இரண்டு பேர் கொண்ட குழு மட்டுமே கலந்து கொள்ள முடியும். தனியாகச் சென்ற நான், சுரேஷ் என்பரிடம், 'ஆன் த ஸ்பாட்' அறிமுகம் செய்து கொண்டு, குழுவாக கலந்து கொண்டேன். நடுநிலைப் பள்ளி மாணவர்களில் ஆரம்பித்து, சீனியர் சிட்டிசன்கள் வரை கலந்துகொண்ட இந்தக் குவிஸ்ஸில், ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி, திரு.இராமமூர்த்தி (முன்னாள் தமிழ் கிரிக்கெட் வர்ணணையாளர்) அவர்களும் குடும்பத்துடன், கலந்து கொண்டார். குவிஸ்ஸை நடத்தியவர் சென்ற வருடம் முதல் பரிசு பெற்ற அவினாஷ் என்பவர்.

ப்ரிலிம்ஸ் எனப்படும் தகுதிச் சுற்றில் 35 கேள்விகள். அதில் 20க்கும் மேற்பட்ட மதிபெண்கள் பெற்று அதிக மதிபெண்கள் பெற்ற ஆறு குழுக்கள் மட்டுமே இறுதி சுற்றுக்குச் சென்றன. நாங்கள் பெற்ற மதிபெண்கள் 14. தகுதிச் சுற்றில் கேட்கப்பட்ட கேள்விகள் சிலவற்றைக் கொடுத்திருக்கின்றேன் (சொந்த வாக்கியங்களில்). பதில் தெரிந்தால் சொல்லுங்கள். கேட்கப்பட்ட கேள்விகள பலவற்றையும் நினவுபடுத்தித் தர இயலாததால், சொந்தச் சரக்கு சிலவற்றையும் இங்கு இணைத்து உங்களைப் படுத்திவிட இருக்கின்றேன். (இறுதி சுற்றின்போது நான் அங்கு இல்லாததால் இந்தக் கேள்விகள்கூடக் கேட்கப்பட்டிருக்கலாம் என்று எண்ணுகின்றேன்.) முடிவுகளை, வார இறுதியில் தெரிவிக்கின்றேன்.

1. சிந்தாதறிப் பேட்டை - பெயர்வரக் காரணம் என்ன?
2. மறைந்த பிரபல இசைக் கலைஞர், எம். எல். வசந்தகுமாரி அவர்களின் முழுப் பெயர் (expansion of initials) என்ன?
3. சென்னையின் பழம்பெரும் சங்கீத சபா எது?
4. சென்னையிலுள்ள ஒச்சர் ஸ்டுடியோஸின் (Ocher Studios) நிர்வாக இயக்குநர் யார்?
5. சென்னை-மைசூர் எக்ஸ்பிரஸ்ஸின் பெயரை, வேறொரு பெயருக்கு மாற்ற வேண்டுமென்று, கர்னாடக ஆளுநர் சதுர்வேதி, இரயில்வேத் துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அது என்ன புதுப் பெயர்? காரணம் என்ன?
6. மவுண்ட் ரோடிலுள்ள, இன்றும் இயங்கும் பழம்பெரும் நிறிவனம் எது?
7. வை மேக்ஸ் (wi-max) என்ற நிறுவனம், எந்தெந்த நிறுவனங்களின் கூட்டு முயற்சி?
8. சென்னையில் காணப்படும் புள்ளி மாஙளின் மற்றொரு பெயர் என்ன?
9. மாயா, கௌதம், நிகில், அனிதா - இவர்களுக்குள்ள ஒற்றுமை என்ன?
10. பெரிய ஆள், வல்லுனர் என்பதற்குக் கூறப்படும், புரதம் நிறைந்த இந்த உணவுப் பொருடகளின் பெயர் என்ன?

சொந்தச் சரக்கு

1. 'மாம்பலம்' என்ற இடத்திற்கு இந்தப் பெயர்வரக் காரணம் என்ன?
2. இந்தியாவில் முதன்முதலாக முறையான தொழிற்சங்கம் (Trade Union) எங்கு தொடங்கப்பட்டது?
3. மணலி இராமகிருஷ்ண முதலியார், தான் தினமும் காலையில் ஆற்றில் நீராடிய பின்னர், ஆலயம் செல்லும் வழக்கம் கொண்டிருந்ததாக எழுதியுள்ளார். அவர் குறிப்பிட்ட ஆறு எது?
4. சென்னையில் 'ப்ரோடீஸ் காசல் சாலை' (Broadies Castle Road) எங்குள்ளது?
5. 'கெல்லீஸ்' என்ற இடத்தின் பழைய பெயர் என்ன?
6. மயிலாப்பூர் கபாலி கோவில், முதன் முதலில் எங்கிருந்தது?
7. உலகப் புகழ் பெற்ற "யேல்" பல்கலைக் கழகத்திற்கும், சென்னைக்கும் என்ன தொடர்பு?
8. சென்னையிலுள்ள "பாடல் பெற்ற ஸ்தலங்கள்" என்னென்ன? பாடியவர்கள் யார்?
9. செனடோஃப் சாலைக்கு (Cenotaph Road) அப்பெயர் வரக் காரணம் என்ன?
10. ஆர்மீனியன் சாலையிலுள்ள, ஆர்மீனியன் சர்ச் தவிர, சென்னையில் ஆர்மீனியர்கள் கட்டிய ஒரு முக்கிய படைப்பு எது?

- சிமுலேஷன்

19 comments:

கைப்புள்ள said...

நல்ல கேள்விகளாகக் கேட்டிருக்கிறீர்கள். கூகிளில் தேடாமல் முயன்றவை.
Chennai Quiz Questions
1. சின்ன தறிகளைப் போட்டு நெசவுத் தொழில் நடத்திய பேட்டை - சின்ன + தறி + பேட்டை = சிந்தாதிரிப்பேட்டை
3. நாரத கான சபா
5. ஒரு யூகம் - ராணி சென்னம்மா எக்ஸ்பிரஸ். காரணம் தெரியல்லீங்க
6. P-Orr and Sons

Unga Kelvigal
1. மா + பாலம் = மாம்பலம். மா பாலம் என்ற பேரில் அங்கு ஒரு பாலம் இருந்தது.
3. கூவம்
4. வேப்பேரி
5. கிள்ளியூர்
7. யேல் பல்கலைக்கழக நிறுவனர் எலிகூ யேல்(Elihu Yale), சென்னையில் பிறந்தவர்.

கைப்புள்ள said...

சென்னை குவிஸ் கேள்வி
10. பிஸ்தா

கைப்புள்ள said...

Chennai Quiz
8. கலை மான்

கைப்புள்ள said...

Sondha Sarakku
4. Broadies Castle Road is in Raja Annamalai Puram (Greenways Road)

கைப்புள்ள said...

//9. மாயா, கௌதம், நிகில், அனிதா - இவர்களுக்குள்ள ஒற்றுமை என்ன?//

9. நால்வரும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் போட்டியில் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு பெற்றுள்ளார்கள்.

கைப்புள்ள said...

9. லார்டு கார்ன்வாலிஸ் நினைவாக ஒரு செனோடேப் என்ற ஒரு மண்டபம் இருந்தது. அது இருந்த சாலை செனோடேப் சாலை.

Simulation said...

20 கேள்விகளில், 6க்கு சரியான விடை கொடுத்துள்ளீர்கள். மற்றவற்றையும் முயற்சிக்கவும் வருகைக்கு நன்றி.

- சிமுலேஷன்

கப்பி | Kappi said...

4.Ocher Studios MD - செளந்தர்யா ரஜினிகாந்த்

7. wi-max - மத்திய தகவல் தொடர்பு அமைச்சகமும் அல்காட்டெல் நிறுவனமும்

சொந்தசரக்கு>>
2. AITUC சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது..இது தானா?

10. சைதாப்பேட்டையில் அடையாறு குறுக்கே மறைமலையடிகள் பாலம்

Simulation said...

கப்பிப்பய,

இரண்டு கேள்விகளுக்குச் சரியாகவும்,
இரண்டு கேள்விகளுக்கு மையமாகவும் பதிலளித்துள்ளீர்கள்.

- சிமுலேஷன்

கப்பி | Kappi said...

விடைகள் எப்போ ரிலீஸ்?? ;)

Simulation said...

கப்பிப்பய, விடைகள் வார இறுதியில் என்று ஏற்கெனவே சொல்லியிருக்கின்றேன்.

வேண்டுமானால் சில க்ளூக்கள்:

01. விடை வந்து விட்டது.
02. சென்னைக்கு தொடர்பு இல்லாக் கேள்வியா இங்கு?
03. தேரோட்டும் கண்ணனின் கானமழை, திரு அல்லிக்கேணியிலே
04. விடை வந்து விட்டது.
05. மஞ்சுனாத் மற்றும் தூரதர்ஷன் என்றால் புரியுமா அல்லது குழம்புமா?
06. காம்ரேடுகளின் சிந்தனை குசேலர் மீது
07. விடை வந்து விட்டது பாதி
08. ஐ.ஐ.டி மக்களின் திருவிழா
09. விடை வந்து விட்டது.
10. விடை வந்து விட்டது பாதி

சொந்தச் சரக்கு
01. கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்
02. இது சென்னை குவிஸ்பா...
03. விடை வந்து விட்டது.
04. விடை வந்து விட்டது.
05. விடை வந்து விட்டது.
06. கடலோரம் வாங்கிய காற்று...
07. யேல் பிறந்தது இங்கில்லை. வந்தாரை வாழவைக்கும் சென்னையே...
08. சரியான க்ளூ நாளை தருகிறேன்.
09. விடை வந்து விட்டது.
10. விடை வந்து விட்டது.

கைப்புள்ள said...

//08. ஐ.ஐ.டி மக்களின் திருவிழா//

சாரங். ஆனா இதுக்கும் புள்ளிமானுக்கும் என்ன தொடர்பு

//07. யேல் பிறந்தது இங்கில்லை. வந்தாரை வாழவைக்கும் சென்னையே...//
யேல் கிழக்கிந்திய கம்பெனியின் கவர்னர் ஜெனரலாக இருந்தார்.

கைப்புள்ள said...

//03. தேரோட்டும் கண்ணனின் கானமழை, திரு அல்லிக்கேணியிலே//

பார்த்தசாரதி கான சபா?

கைப்புள்ள said...

//5. சென்னை-மைசூர் எக்ஸ்பிரஸ்ஸின் பெயரை, வேறொரு பெயருக்கு மாற்ற வேண்டுமென்று, கர்னாடக ஆளுநர் சதுர்வேதி, இரயில்வேத் துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அது என்ன புதுப் பெயர்? காரணம் என்ன?//

மால்குடி எக்ஸ்பிரஸ், எழுத்தாளர் ஆர்.கே.நாராயணன் நினைவாக.

கைப்புள்ள said...

//10. பெரிய ஆள், வல்லுனர் என்பதற்குக் கூறப்படும், புரதம் நிறைந்த இந்த உணவுப் பொருடகளின் பெயர் என்ன?//

முழு விடை - பிஸ்தா பருப்பு?

கைப்புள்ள said...

//06. காம்ரேடுகளின் சிந்தனை குசேலர் மீது//

அமல்கமேசன்ஸ் க்ரூப்??

கப்பி | Kappi said...

//விடைகள் வார இறுதியில் என்று ஏற்கெனவே சொல்லியிருக்கின்றேன்.
//
ஓ..மன்னிக்க.

//தேரோட்டும் கண்ணனின் கானமழை, திரு அல்லிக்கேணியிலே
//

3. பார்த்தசாரதி சபா

//ஐ.ஐ.டி மக்களின் திருவிழா
//

8.சாரங்க்

Simulation said...

1. சிந்தாதறிப் பேட்டை - பெயர்வரக் காரணம் என்ன?

சின்ன தறிகளைப் போட்டு நெசவுத் தொழில் நடத்திய பேட்டை - சின்ன + தறி + பேட்டை = சிந்தாதிரிப்பேட்டை

2. மறைந்த பிரபல இசைக் கலைஞர், எம். எல். வசந்தகுமாரி அவர்களின் முழுப் பெயர் (expansion of initials) என்ன?

மெட்ராஸ் லலிதாங்கி வசந்தகுமாரி

3. சென்னையின் பழம்பெரும் சங்கீத சபா எது?

பார்த்தசாரதி சபா

4. சென்னையிலுள்ள ஒச்சர் ஸ்டுடியோஸின் (Ocher Studios) நிர்வாக இயக்குநர் யார்?

சௌந்தர்யா ரஜினிகாந்த்

5. சென்னை-மைசூர் எக்ஸ்பிரஸ்ஸின் பெயரை, வேறொரு பெயருக்கு மாற்ற வேண்டுமென்று, கர்னாடக ஆளுநர் சதுர்வேதி, இரயில்வேத் துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அது என்ன புதுப் பெயர்? காரணம் என்ன?

மால்குடி எக்ஸ்பிரஸ் - சென்னையில் பிறந்து, மைசூரில் இருந்த ஆர்.கே.நாராயணன் அவர்களது 'மால்குடி டேஸ்' என்ற படைப்பின் நினைவாக.
.

6. மவுண்ட் ரோடிலுள்ள, இன்றும் இயங்கும் பழம்பெரும் நிறிவனம் எது?

சிம்சன் அண்ட் கோ

7. வை மேக்ஸ் (wi-max) என்ற நிறுவனம், எந்தெந்த நிறுவனங்களின் கூட்டு முயற்சி?

சி-டாட் மற்றும் அல்காடெல்

8. சென்னையில் காணப்படும் புள்ளி மாஙளின் மற்றொரு பெயர் என்ன?

ஸாரங்

9. மாயா, கௌதம், நிகில், அனிதா - இவர்களுக்குள்ள ஒற்றுமை என்ன?

ஏர்டெல் சூப்பர் சிங்கர் போட்டியில் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு பெற்றவர்கள்

10. பெரிய ஆள், வல்லுனர் என்பதற்குக் கூறப்படும், புரதம் நிறைந்த இந்த உணவுப் பொருடகளின் பெயர் என்ன?

பருப்ப், பிஸ்தா

சொந்தச் சரக்கு

1. 'மாம்பலம்' என்ற இடத்திற்கு இந்தப் பெயர்வரக் காரணம் என்ன?

விடையின் ஆதாரத்தைத் தொலைத்து விட்டேன். எனவே விடை பிறகு. இடையில் யாரேனும் முயற்சிக்கலாம்.

2. இந்தியாவில் முதன்முதலாக முறையான தொழிற்சங்கம் (Trade Union) எங்கு தொடங்கப்பட்டது?

சென்னையில் துவங்கப்பட்ட மெட்ராஸ் லேபர் யூனியன்

3. மணலி இராமகிருஷ்ண முதலியார், தான் தினமும் காலையில் ஆற்றில் நீராடிய பின்னர், ஆலயம் செல்லும் வழக்கம் கொண்டிருந்ததாக எழுதியுள்ளார். அவர் குறிப்பிட்ட ஆறு எது?

கூவம்

4. சென்னையில் 'ப்ரோடீஸ் காசல் சாலை' (Broadies Castle Road) எங்குள்ளது?

மந்தைவெளியையும் அடையாரையும் இணைக்கும் சாலை. இசைக்கல்லூரிக்கு எதிர்ப்புரத்தில் உள்ளது. இந்தச் சாலையில், வீடுகளோ, கடைகளோ இல்லாத்தால் இதன் பெயர் பலருக்கும் தெரிந்திருக்காது.

5. 'கெல்லீஸ்' என்ற இடத்தின் பழைய பெயர் என்ன?

கிள்ளியூர்

6. மயிலாப்பூர் கபாலி கோவில், முதன் முதலில் எங்கிருந்தது?

சுமார் முன்னூறு வருடங்களுக்கு முன்பு தற்போதுள்ள செயிண்ட் தாமஸ் சர்ச் அருகே இந்தக் கோயில் இருந்தது.

7. உலகப் புகழ் பெற்ற "யேல்" பல்கலைக் கழகத்திற்கும், சென்னைக்கும் என்ன தொடர்பு?

கிழக்கிந்தியக் கம்பெனியின் 'எழுத்தராக' வந்த Elihu Yale என்பார் 27 வருடங்கள் சென்னையில் இருந்து எக்கச்சக்கமான சொத்துக்கள் சேர்த்து விட்டார். இப்படி சென்னையில் சேர்த்த
சொத்துக்களில் கணிசமானவற்றை இந்தப் பல்கலைக் கழகத்திற்குக் நன்கொடையாகக் கொடுத்ததனால் அவர் பெயரே வைக்கப்பட்டது.

8. சென்னையிலுள்ள "பாடல் பெற்ற ஸ்தலங்கள்" என்னென்ன? பாடியவர்கள் யார்?

திருவலிதாயம்-பாடி வல்லீஸ்வரசுவாமி ஆலயம் - சம்பந்தர்

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயம் -அப்பர், சம்பந்தர்

திருவொற்றியூர் - தியாகராஜசுவாமி ஆலயம் - அப்பர், சம்பந்தர், சுந்தரர்

திருமயிலாப்பூர் - கபாலீஸ்வரர் ஆலயம் - சம்பந்தர்

திருவேற்காடு - வேதபுரீஸ்வரர் ஆலயம் - சம்பந்தர்

திருமுல்லைவாசல் முல்லைவனநாதர்ஆலயம் -சம்பந்தர்

9. செனடோஃப் சாலைக்கு (Cenotaph Road) அப்பெயர் வரக் காரணம் என்ன?

காரன்வாலிஸ் பிரபுவின் நினைவுச் சின்னம் ஒன்று அந்தச்சாலையில் இருந்தது. செனடோஃப் என்றால் நினைவுச் சின்னம் என்று பொருள்.

10. ஆர்மீனியன் சாலையிலுள்ள, ஆர்மீனியன் சர்ச் தவிர, சென்னையில் ஆர்மீனியர்கள் கட்டிய ஒரு முக்கிய படைப்பு எது?

சைதாப்பேட்டையில் தற்போது
மறைமலையடிகள் பால்ம் என்றழைக்கப்படும் பாலம்.

- சிமுலேஷன்

தி. ரா. ச.(T.R.C.) said...

kasi viswanathar kovilai anthakalathil maa- ambalam enru kuuruvaarkal . athuve surunki maabalam enru aakivittathu.