Monday, October 09, 2006

குழந்தைத் தொழிலாளர்களும் அக்டோபர் 10ம்



குழந்தைகளை தொழிற்சாலைகளிலும் அலுவலகங்களிலும் தொழிலாளர்களாகப் பணிபுரிய வைப்பதற்கு எத்தனையோ எதிர்ப்புகள் இருந்த போதிலும், இந்த வழக்கம் காலம் காலமாய் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கின்றது. ஆனால், இம்முறை மத்திய மாநில அரசுகள், குழந்தைத் தொழிலாளர் முறையினைத் தொடர, அக்டோவர் 10ஆம் தேதியினைக் 'கெடு' தேதியாக அறிவித்துள்ளது. இந்த தேதிக்குப் பின்னால், விதியினை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் போவதாக எச்சரித்துள்ளது. குறிப்பாக வீட்டு வேலைகளிலும், உணவு விடுதிகளிலும் 14 வயதுக்குட்பட்ட குழந்தகளைப் பணியிலமர்த்த முடியாது. இப்போது பணியிலிருக்கும் குழந்தைகளின் வாழக்கைக்கு, மாற்று வழி நடைமுறையில் எப்படி இருக்குமென்பது போகப் போகத்தான் தெரியும். உணமையிலேயெ இந்தச் சட்டம் முறையாக அமல்படுத்தப்ப்ட்டால், சம்பதப்ப்ட்டட்வர்கள் பாராட்டுதல்களுக்குறியவர்கள்தான்.
























இந்தப் படங்களில் இருப்பவற்றையெல்லாம்விட மிகக் கொடுமை என்ன தெரியுமா? உங்கள் வீட்டுக்குழந்தைகளின் தேவைகளைக் கவனித்துக் கொள்ள, ஒரு குழந்தையை வேலைக்கு அமர்த்துவதுதான்.

ஆமாம். கடைசியாக உள்ள அந்த வண்ணக் காத்தாடி எதனைக் குறிகின்றது என்று உங்களுக்குத் தெரியுமா?

- சிமுலேஷன்

7 comments:

Boston Bala said...

---அந்த வண்ணக் காத்தாடி எதனைக் குறிகின்றது ---

தெரியவில்லையே!

Simulation said...

பாபா,

மற்றவர்களுக்கும் கொஞ்ச நேரம் வாய்ப்பளித்துவிட்டு, பிறகு விடை தருகின்றேன்.

- சிமுலேஷன்

Unknown said...

வீட்டுக்குழந்தைகளின் தேவைகளைக் கவனித்துக் கொள்ள, ஒரு குழந்தையை வேலைக்கு அமர்த்துவதுதான்.

well said !!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சிமுலேசன்!
குழந்தைகளின் குழந்தைத்தனத்தைத் திருடுவது கயமை!!!!! நம் நாடுகளில் ஜோரா நடக்கும் வியாபாரம்.இவர்கள் திருந்துவார்கள் என எதிர் பர்ப்போம்.
இந்த 5 இதழ்க் காற்றாடி; 5 கண்டத்துக் குழந்தைகளையும் குறிக்கிறது. எனக் கருதுகிறேன்.
யோகன் பாரிஸ்

Simulation said...

ஐந்து வண்ணக் காத்தாடி, உலகக் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினத்திற்கான (ஜூன் 12) லோகோ அது.

யோகன்,
அது ஐந்து கணடத்துக் குழந்தைகளயும்கூடக் குறிக்கலாமென்று நினைக்கின்றேன்.

பாபா, கல்வெட்டு, யோகன் வருகைக்கு நன்றி.

- சிமுலேஷன்

மதுமிதா said...

///இந்தச் சட்டம் முறையாக அமல்படுத்தப்ப்ட்டால், சம்பதப்ப்ட்டட்வர்கள் பாராட்டுதல்களுக்குறியவர்கள்தான்///


சம்பந்தப்பட்டவர்கள் என்று மாற்றுங்கள்
சிமுலேஷன்.

முறையாக செயல்பட்டால்,
முற்றிலும் உண்மை.பாராட்டலாம்.
முறையாக நடக்கிறார்களா பார்ப்போம்.

மெளலி (மதுரையம்பதி) said...

அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.