Thursday, December 14, 2006

புகைப்படப் புதிர்-05 - இந்திய இசைக் கருவிகள்

இசை விழா நடக்கும் இந்நாட்களில் இசைக் கருவிகளை வைத்து ஒரு புதிர்.



01. தயிரைக் கடைந்த சர்தார்.

02. எத்தனை முகமெனெ எண்ணினால் போயிற்று.

03. கொத்தமங்கலத்தில் பாணம் விடமுடியுமா?

04. மூஞ்சிக்கும் வீணைக்கும் என்ன முடிச்சு?

05. சூரியகாந்தியில் பீட்டர் விட்ட பாடல்.

06. ஆமாஞ்சாமிகளின் ராஜ்ஜியம்.


07. இதில் சுநாதவினோதினி இராகம் வாசிப்பது சுலபமோ?


08. காஷ்மீர்ப்பெண்ணே. எக்ச்யூஸ் மீ. நீங்க எந்த காலேஜ்?

09. ஒய்.ஜி.எம்மின் மர்மத் தொடர்.




10. ஸ்வரங்களே மண்டலமானால்...

- சிமுலேஷன்


8 comments:

Anonymous said...

1. மோர்சிங்(spelling correct-ஆ?)
3. வில்லு
4. செனாய்(Bismillah Khan என்றும் சொல்லலாம்)
7. கோட்டு வாத்தியம்
8. சந்தூர்
9. ருத்ர வீணை

Anonymous said...

5. தில்ரூபா

கைப்புள்ள said...

1.முகர்சிங்
3. வில்லுப்பாட்டு
4. ஷெனாய்
5. சாரங்கி
6. சரோத்
7. கோட்டு வாத்தியம்
8. சந்தூர்
9. விசித்திர வீணை

இலவசக்கொத்தனார் said...

1) மோர்சிங்
2) பஞ்சமுகம்
3) வில் (வில்லுபாட்டில் உபயோகிப்பது)
4) முகவீணை
5) தில்ரூபா
6)
7)
8) சந்தூர்
9) ருத்ரவீணா
10)

மூணு தெரியலையே...

Simulation said...

வந்துள்ள ஒரு சில விடைகளை விரைவில் வெளிடுகின்றேன்.

- சிமுலேஷன்

Radha Sriram said...

1) Morsing(dont know the right spelling)
4) Shehnai

5) saarangi
7) vichithra veena
8) santoor
9) gottu vaadyam

Radha

Simulation said...

இதுவரை வந்த சரியான விடைகள்.

1. மோர்சிங் அல்லது முகர்சிங்

2. பஞ்சமுக வாத்தியம்

3. வில்லு

4. முக வீணை

5. தில்ரூபா

6. ??????

7. ??????

8. சந்தூர்

9. ருத்ர வீணை

10. ??????

சரியான விடைகளித்த ஹரி, கைப்புள்ள, கொத்ஸ் மற்றும் ராதா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

6, 7 மற்றும் 10 கேள்விகளுக்கு விடையளிக்க இன்னமும் வாய்ப்பு உள்ளது.

- சிமுலேஷன்

Simulation said...

6.7,10 கேள்விகளுக்குச் சரியான விடைகள் வரவ்வில்லை இதுவரை.

சரியான விடைகள் வருமாறு:-

6. "எஸ்ராஜ்" என்பது இந்த இசைக் கருவியின் பெயர்.

7. பெங்களூரிலுள்ள 'ராடெல்' என்ற நிறுவனம் தயாரிக்கும்
"சுனாதவினோதினி" என்ற பெயர் கொண்ட 'எலெக்ட்ரானிக் வீணை' இது.

10. இந்த இசை கருவியின் பெயர் "ஸ்வரமண்டல்"

- சிமுலேஷன்