Tuesday, December 18, 2007

பேஷ்...பேஷ்...காபின்னா இதான் காபி

"பேஷ்..பேஷ்... காபின்னா, இதான் காபி" "என்ன அத்திம்பேர்.இந்த மினிஹால்லே, கான்டீன்னும் கெடையாது. காபியும் கெடையாது. எங்க போய் காபி சாப்பிட்ட்டேள்?" "டேய் குடிச்சாதான் காபியா? கேட்டாக் காபியில்லையா? அபிஷேக் ராகுராம்னு ஒரு பையன் காபி ராகம் பாடினான் பாரு. அட்டகாசம்." "அத்திம்பேர். மோகனம், கல்யாணின்னு சொன்னாப் புரியறது. சங்கராபரண்ம்னு சொன்னாப் புரியறது. காபின்னா என்ன? தமிழ்ப் பேரா?" "அதெல்லாம் தெர்யலையேப்பா. வடநாட்லே kaafiனு சொல்றா. நாம் காபி, இல்லாட்டி காப்பி அப்டீங்கறோம்." "குடிக்க்ற காப்பிலெ கும்பகோணம் டிகிரி,பீபரி, ரொபஸ்டா, சிக்கரி கலந்த காபின்னு...

Thursday, December 06, 2007

ரசிகப்ரியா...ரசிக்கும்படியா...

னகர்நாடக இசையில் "மேளகர்த்தா" சொன்னா, என்னதுன்னு சில பேர் முழிக்கலாம். நெறையப் பேருக்குத் தெரிஞ்சுருக்கும். அது ஒண்ணுமில்லை. "ஜனக" அல்லது "தாய்" இராகங்கள்ன்னு சொல்ற 72 ராகங்களைத்தான் மேளகர்த்தாங்றோம். மத்த ஆயிரக்கணக்கான ராகங்களும் இந்த மேளகர்த்தாவிலிருந்துதான் தோணித்துன்னும் சொல்றோம். மேளகர்த்தா ராகங்களோட வரிசையில் கடோசி ராகம்தான் நாம் இன்னிக்கிப் பேசப் போற, இல்ல, இல்ல, கேட்கப்போற "ரசிகப்ரியா" ராகமாகும். ரசிகப்ரியா ராகம் ஒரு "விவாதி" ராகம். அதாவது...

Thursday, June 14, 2007

சிவாஜி - பஞ்ச் டயலாக்ஸ்

அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை, தமிழ் சினிமாக்களில் "பஞ்ச்" வசனங்களுக்குப் பஞ்சமேயில்ல. "சிவாஜி" மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன? ஆவலுடன் நீங்கள் எதிர்பார்க்கும் சிவாஜி பஞ்ச் டயலாக்ஸ் இதோ .......................................................................... "வயலுக்கு வந்தாயா? விதை விதைத்தாயா? நாற்று நட்டாயா? எங்கள் குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா? சீ! மானங்கெட்டவனே!" - வீரபாண்டிய கட்டபொம்மன் "கோயிலில் கலகம் செய்தேன். உண்மைதான் கோயில்கூடாது என்பதற்காக அல்ல, கோயில் கொடியவர்களின் கூடாரமாக மாறிவிடக் கூடாது என்பதற்காகத்தான்"...

Thursday, June 07, 2007

அண்ணலின் ஆணையேந்தி...

பல்லவி அண்ணலின் ஆணையேந்தி அன்னை ஜானகியைத் தேடி அலைகடல் கடந்தாய் அன்றே அஞ்சனைத் தவப் புதல்வா! அனுபல்லவி அசோகவனம் அழித்தாய் அக்சனை அங்கே மாய்த்தாய் இலங்கையை கடைந்தெரிந்தாய் இடர்களைக் களைந்தெரிந்தாய் இத்தனை செயல் புரிந்தும் இறுமாப்பே இல்லையானாய் எத்தனை எட்டினாலும் ஐய நின் நிகருமுண்டோ சரணம் ஒப்பிலா வலிமை பெற்றாய் ஓதுவோம் உந்தன் நாமம் இராகம்: கல்யாண வசந்தம் தாளம்: ஆதி பாடியவர்: ஆதித்யா மிருதங்கம்: குரு. நெய்வேலி கணேஷ் ...

Tuesday, February 06, 2007

புனைபெயர்களும் புதிரும்...

புனைபெயரில் எழுதி வந்துள்ள பலரின் உண்மையான பெயர் என்னெவென்று தெரிந்து கொள்ளும் ஆவல் நம்மில் பலருக்கும் இருக்கலாம். சிலருக்கு அவர்கள் யாரென்பது தெரிந்திருக்கலாம். பலருக்குத் தெரியாமலிருக்கலாம்.தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்குக் சொல்லலாமே.**** வண்ணத்தில் இருக்கும் பெயர்களுக்கு பின்னூட்ட்டங்கள் மூலம் விடைகள் வந்துவிட்டன.01. அகஸ்தியன்02. அகிலன்03. அசோகமித்திரன்04. அம்பை05. ஆதவன்06. இந்திரா பார்த்தசாரதி07. ஏ.கே.செட்டியார்08. கல்கி09. கல்யாண்ஜி10. கண்ணதாசன்11. கடுகு12. கர்நாடகம்13. கரிச்சான் குஞ்சு14. காந்தன்15. சாவி16. சாண்டில்யன்17. சிட்டி18. சுபா19....

Saturday, January 27, 2007

ஒடிசி குவிஸ் 2007 (2)

1. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்காட்லாண்டைச் சேர்ந்த இருவர், துவக்கி இன்றும் சென்னையில் வெற்றிகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற நிறுவனம் எது? (காலத்தை வென்று செயல்படுவதும் சாதனையல்லவா?) 2. 1914ல் மேக்ஸ் வான் லா மற்றும் ஜேம்ஸ் ப்ஃராங்க் என்ற இரு விஞ்ஞானிகள் எக்ஸ் கதிர்கள் குறித்த அவர்களது ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றார்கள். தங்க மெடல் பெற்ற இருவருக்கும் சில வருடங்கள் கழித்து, நோபல் சொசைட்டி தங்கப் பதக்கங்களை மீண்டும் வழங்கியது ஏன்? (கரையாத மனமும் உண்டோ?) 3. 1980ஆம் ஆண்டு கனடா நாட்டில் நடைபெற்ற 'நேஷனல் ஹாக்கி லீக்' போட்டிகளின் போது தற்செயலாகக்...

ஒடிசி குவிஸ் 2007

நேற்றைய தினம் சென்னை ம்யூசிக் அகாடெமியில், "ஒடிசி குவிஸ்" நடை பெற்றது. 'ஒடிசி' சென்னையில் உள்ள ஒரு புகழ்பெற்ற புத்த்கக் நிறுவனம். இந்த நிறுவனம் ஆண்டுதோறும, பெரிய குவிஸ் நிகழ்ச்சிகளை நடத்திப் பல பரிசுகளையும் வழங்குகின்றது. நேற்றைய நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட பரிசுகளின் மதிப்பு சுமார் ஒரு லட்சம் இந்திய ரூபாயாகும். சில மாதிரிக் கேள்விகள் இங்கே. உங்களுக்கு விடை தெரிந்தால் சொல்லுங்கள்.01. மேலே உள்ள படத்தில் இருப்பவர் யார்? இந்தப் படத்தின் சிறப்பு என்ன?02....

Thursday, January 25, 2007

பால்நினைத் தூட்டும் தாயினுஞ்சாலப் பரிந்து

பால்நினைத் தூட்டும் தாயினுஞ்சாலப் பரிந்துநீ பாவியே னுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய தேனினைச் சொரிந்து புறம்புறந்திரிந்த செல்வமே சிவபெருமானே யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. மாணிக்கவாசகரின் திருவாசகம் பிடித்த பத்து - முத்திக்கலப்புரைத்தல் (திருத்தோணிபுரத்தில் அருளியது - எழுசீர் ஆசிரிய விருத்தம்) இராகம்: பாகேஸ்ரீ பாடியவர்: ஆதித...

Friday, January 05, 2007

பாட்டுக் கேட்கப் போனார்...படம் வரைந்து வந்தார்

இசை விழாக்களுக்குச் செல்லும் பலரும், கச்சேரிகளைக் கேட்பது மட்டுமின்றி, அரட்டை அடிப்பது, கேன்டீனில் ரவுண்டு கட்டுவது போன்ற இன்ன பிறவும் செய்வதுண்டு. ஆனால், ஆள்வார்ப்பேட்டை சீத்தம்மா காலனியைச் சேர்ந்த, ஓய்வு பெற்ற தணிக்கை அதிகாரியும், வருமானவரி ஆலோசகருமான வி.சுப்பிரமணியன், புதுமையான பொழுதுபோக்கு ஒன்றினை வைத்துள்ளார். கச்சேரிகளுக்கு செல்லும் போது, வெற்றுத்தாள்களும், வண்ணப் பென்சில்களும் கொண்ட ஒரு 'கிட்'டினை எடுத்துச் செல்கிறார். வசதியான ஒரு...