நேற்றைய தினம் சென்னை ம்யூசிக் அகாடெமியில், "ஒடிசி குவிஸ்" நடை பெற்றது. 'ஒடிசி' சென்னையில் உள்ள ஒரு புகழ்பெற்ற புத்த்கக் நிறுவனம். இந்த நிறுவனம் ஆண்டுதோறும, பெரிய குவிஸ் நிகழ்ச்சிகளை நடத்திப் பல பரிசுகளையும் வழங்குகின்றது. நேற்றைய நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட பரிசுகளின் மதிப்பு சுமார் ஒரு லட்சம் இந்திய ரூபாயாகும். சில மாதிரிக் கேள்விகள் இங்கே. உங்களுக்கு விடை தெரிந்தால் சொல்லுங்கள்.
01. மேலே உள்ள படத்தில் இருப்பவர் யார்? இந்தப் படத்தின் சிறப்பு என்ன?
02. இந்தக் கொடியினை நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்றியவர் யார்?
03. இந்த விலங்கின் பெயர் என்ன? எந்த அமைப்ப, இந்த விலங்கினை தனது சின்னமாகக் (Logo) கொண்டுள்ளது?
04. இந்த வரைபடத்தில் உள்ள நாட்டிற்கும், நாம் சாப்பிடும் ஒரு உணவுப் பொருளுக்கும் தொடர்பு உண்டு. அது என்ன?
05. இந்தப் படத்தில் உள்ள கட்டிடத்திற்கும்
இந்தப் படத்தில் உள்ள கட்டிடத்திற்கும் உள்ள ஒற்றுமை என்ன?
- சிமுலேஷன்
Saturday, January 27, 2007
ஒடிசி குவிஸ் 2007
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
2. Dadabhai Naoroji?
3. Okapi
3. Okapi, International Society for Cryptozoology
வருக கைப்புள்ள. வழக்கம் போல் நமது பதிவில், முதன்முதலில் வந்து ஆஜர் ஆகியுள்ளீர்கள்.
மூன்றாவது கேள்விக்கான உங்கள் விடை சரியே. மற்றவற்றையும் முயலவும்.
கடைசிப் படம் அறுபடை வீடுகளிலொன்றென்று அறிவீர்களா?
1. அல்ஜீரியாவில் நேஷனல் ஜியோகிராபிக் புகைப்படக்காரர் ஒருவரால் எடுக்கப்பட்ட பெடொவின்(Bedouin) பெண்ணின் படம் இது. வெகுளித்தனமும், பயமும் ஒரு சேர அந்தப் பெண்ணின் முகத்தில் தெரிவதால் இது ஒரு மிகவும் வரவேற்கப்பெற்றப் படம். பர்தா(Veil) இல்லாமல் ஒரு orthodox இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தப் பெண்ணைப் புகைப்படம் எடுத்தது இப்படத்தின் சிறப்பு என்று நினைக்கிறேன். படம் எடுத்து 25 வருடங்கள் கழித்து மறுபடியும் அப்பெண்ணைத் தேடிக் கண்டுபிடித்து போஸ் கொடுத்த வைத்திருக்கிறார்கள். என் நினைவிலிருந்த வரை கூகிளில் தேடாமல் சொல்லியிருக்கிறேன்.
:)
//கடைசிப் படம் அறுபடை வீடுகளிலொன்றென்று அறிவீர்களா?//
அப்படியா? எனக்குத் தெரியாதே. சரி கடைசி கேள்விக்கு ஒரு வைல்ட் கெஸ். படிச்சிட்டு சிரிக்கப்படாது. இரண்டு கட்டிடங்களிலும் ஏதோ ஒரு வகையில் கணபதி ஸ்தபதி சம்பந்தப் பட்டிருக்கிறாரா?
:)
1.ஆப்கான்பெண்.போரின்போது எடுத்தபடம் புத்தகத்தில்.
முதல் படம் ஆப்கானிஸ்தானில் ஒரு பிரபல போட்டோகிராபர் எடுத்த சிறுமியின் போட்டோவை, அவளே வயதான பிறகு போட்டோவில் நிற்கிறாள்.
இரண்டாவது படம் மேடம் காமா அவர்கள் குவிட் இண்டியா மூவ்மெண்டுக்காக மும்பை சி.பி.டாங்க் ஏரியாவில் ஏற்றிய கொடி. லாகூட் காங்கிரஸ் மாநாட்டில் இந்திய தேசியக் கொடியாக அங்கீகரிக்கப்பட்டது.
என்ன சரியா ?
மெலட்டூர். இரா. நடராஜன்
1. மிகவும் பிரபலமான "Afghan Girl" புகைப்படம். நேஷனல் ஜியாகிரபிக் பத்திரிகையின் அட்டைப்படத்தில் 20 ஆண்டுகளுக்கூ முன்னர் வந்தவள். பிறகு சுமார் 20 ஆண்டுகளாக அவளைத் தேடித் தேடிக் கடைசியில் அவள் யாரென்று கண்டுபிடித்துவிட்டார்கள் (என்று கருதுகிறார்கள்!) அந்தப் பெண் தான் அந்தப் புகழ்பெற்ற படத்தை அட்டையில் கொண்ட பத்திரிகையைக் கையில் வைத்துக்கொண்டு போஸ் கொடுக்கிறாள். நேஷனல் ஜியாகிரபிக் அளித்த இந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்திருக்கிறேன்.
முதல் கேள்விக்குக் கிட்டத்தட்ட சரியான விடை அளித்தவர்கள்
கைப்புள்ள
லட்சுமி
மெலட்டூர் மற்றும்
சேதுக்கரசி
ஆனால், அந்தப் பெண்ணின் பெயரை யாரும் சரியாகச் சொல்லவில்லை.
அப்புறம் கைப்புள்ள, கடோசிக் கேள்விக்குண்டான படங்களில் நீங்கள் சொன்ன மாதிரி கணபதி ஸ்தபதி ஏதும் சம்பந்தப்படவில்லை. படிப்படியாக யோசித்தால் விடை கிடைக்கும்.
//அந்தப் பெண்ணின் பெயரை யாரும் சரியாகச் சொல்லவில்லை//
கூகுளாண்டவர் உதவியுடன் Afghan girl என்று தேடினால் போதுமே :-) அவள் பெயர் ஷட்பத் குலா (Sharbat Gula)
//ஷட்பத் குலா// ஷர்பத் குலா :)
சேதுக்கரசி, கூகிளாண்டவர் துணையுடன், பெண்ணின் பெயரைக் கண்டுபிடித்துவிட்டீர்கள்.
கைப்புள்ள, நீங்கள் கூகுள் துணை நாடவில்லை என்பதை எப்படி நம்புவது?
//கைப்புள்ள, நீங்கள் கூகுள் துணை நாடவில்லை என்பதை எப்படி நம்புவது?//
//1. அல்ஜீரியாவில் நேஷனல் ஜியோகிராபிக் புகைப்படக்காரர் ஒருவரால் எடுக்கப்பட்ட பெடொவின்(Bedouin) பெண்ணின் படம் இது//
ஆஃப்கனை அல்ஜீரியன்னு தப்பா சொன்னதுக்கப்புறமும் நம்பிக்கை வரலீங்களா?
:)
4. ரொம்ப கஷ்டமா இருக்குங்க. எதாவது க்ளூ? எந்த கண்டம்னு சொல்ல முடியுமா?
5. ரெண்டு கட்டிடங்களும் மலை மீது அமைந்திருக்கின்றன என்பது ஒற்றுமை. சரியா?
4. ஆப்பிரிக்கக் கண்டம்.
5. படிகள்
//5. படிகள்//
இதுதானுங்களா ஒற்றுமை???????
சேதுக்கரசி, முதலில் இவை என்ன கட்டிடங்கள் என்று கூறுங்கள்.
சுவாமிமலை - 60 படிக்கட்டுகள் ?
கடைசிக் கேள்வியில் காண்பிக்கப்பட்டுள்ள "திருத்தணிக் கோவிலிலும், "கேவிடல் ஹில்" எனப்படும் அந்தக் கட்டிடத்திலும் உள்ள படிகளின் எண்ணிக்கை 365ஆம்.
இது, சரியான தகவலா என்று அறியமுடியவில்ல்லை.
- சிமுலேஷன்
Post a Comment