Thursday, August 21, 2008

பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்

"சென்னை தினம்", மற்றும் "சென்னை வார" விழாக்களையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று, நேற்று முன் தினம் தாஜ் ஹோட்டலில் நடைபெற்ற "அனில் ஸ்ரீனிவாஸின்" பியானோ இசை மற்றும் சென்னை இசை குறித்தான 'லெக்டெம்'. காதுக்கு அருமையான விருந்து. கூடப் பாடியவர் சுபிக்ஷா ரங்கராஜன். ("கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி" பாடியவர்) இப்படிக்கூடஒரு காம்பினேஷன் இருக்க முடியுமா என்று முதலில் யோசிக்க வைத்துப் பின்னர் பார்வையாளர் அனைவரையும் பரவசப்படுத்தினார் 'கஞ்சிரா' புருஷோத்தமன். உண்மையிலேயே இந்த பியானோ-கஞ்சிரா காம்பினேஷன் இரசிகர்கள் அனைவரும் கேட்க வேண்டிய ஒன்று. அனில் ஸ்ரீனிவாஸ் சென்னையில் வாழ்ந்த மேல்நாட்டு இசைக் கலைஞர்களின் பங்களிப்பு, சென்னையின் மேல் பாடப்பெற்ற பாடல்களைப் பற்றியும் அலுப்புத் தட்டாமல் பேசினார். இதில் சென்னையில் வாழ்ந்து பன்முகத் திறன் கொண்ட கல்கி அவர்களின் பங்களிப்பும் இடல் பெற்றது. கல்கி அவர்களின் "பூங்குயில் கூவும் பூஞ்சோலை" என்ற பாடல் சுபிக்ஷா ரங்கராஜனால் பாடப்பெற்றது. அந்த்க் காலத்தில் டி.கே.பட்டம்மாள் பாடிய் பாடலென்று நினைக்கின்றேன்.

காபி இராகத்தில் அமைந்த இந்தப் பாடலின் வரிகளும், மெட்டும், இசையும் என்னை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டியது. கூகிளார் உபயத்தில் நித்யஸ்ரீ அவர்கள் இதனைப் பாடியுள்ளதாக அறிந்தேன். நீங்களும் இதனைக் கேளுங்களேன்.



பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்

மாமயில் மீது மாயமாய் வந்தாய்
மாமயில் மீது மாயமாய் வந்தாய்
மாமயில் மீது மாயமாய் வந்தாய்
மாமயில் மீது மாயமாய் வந்தாய்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்...ஒரு நாள்

பொன்முகம் அதனில் புன்னகை பொங்க
பொன்முகம் அதனில் புன்னகை பொங்க
இன்னமுதென்ன என் மொழி பகர்ந்தொரு
இன்னமுதென்ன என் மொழி பகர்ந்தொரு
மின்னலைப்போலே...மறைந்தான்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள் மின்னலைப்போலே...மறைந்தான்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்...ஒரு நாள்

பனி மலரதனில் புது மணம் கண்டேன்
பனி மலரதனில் புது மணம் கண்டேன்
வானில் கடலில் வண்ணங்கள் கண்டேன்
வானில் கடலில் வண்ணங்கள் கண்டேன்
தேனிசை வீணையில் தீஞ்சுவை கண்டேன்
தேனிசை வீணையில் தீஞ்சுவை கண்டேன்
தனிமையில்...இனிமை கண்டேன்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்
தனிமையில்...இனிமை கண்டேன்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில்...ஒரு நாள்

வீரவேல் முருகன் மீண்டும் வருவான்
வீரவேல் முருகன் மீண்டும் வருவான்
வள்ளி மணாளன் என்னையே மறவான்
வள்ளி மணாளன் என்னையே மறவான்
பேரருலாளன் எனக்கருள்வானெனும்
பேரருலாளன் எனக்கருள்வானெனும்
பெருமிதத்தால் மெய் மறந்தேன்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்
பேரருலாளன் எனக்கருள்வானெனும்
பெருமிதத்தால் மெய் மறந்தேன்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்
மாமயில் மீது மாயமாய் வந்தான்
மாமயில் மீது மாயமாய் வந்தான்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள் ஒரு நாள்...ஒரு நாள்...

- சிமுலேஷன்

3 comments:

jeevagv said...

ஆகா, எனக்கு இன்னமும் பிடித்த அருமையான பாடல்!. 'குறிஞ்சி' என்னும் தொகுப்பில் இன்னமும் நன்றாக, மெல்லிசை இடையூடுகள் இல்லாமல், கேட்டிருக்கிறேன் - அதன் சுட்டி இங்கே.

மின்னலைப்போலே.....மறைந்தான் - என்னும் இடம் கிறங்க வைக்கும்!

திரும்பத்திரும்ப வரும் வரிகளை ஒருமுறை மட்டுமே எழுதினால், படிப்பவர்களுக்கு எளிதாக இருக்கும் என நினைக்கிறேன்!

Simulation said...

வருகைக்கு நன்றி ஜீவா,

நீங்கள் குறிப்பிட்ட சுட்டி எனக்கு வேலை செய்யவில்லை.

நீங்கள் குறிப்பிட்டபடி ரிடண்டண்ட் வரிகளை குறைக்கின்றேன்.

- சிமுலேஷன்

jeevagv said...

நல்லது சிமுலேஷன், Music India தளமே இப்போது வேலை செய்யவில்லை, பின்னர் முயற்சிக்கவும்!