Saturday, October 24, 2009

அக்கறை-100

தமிழ் வாசகர்களிடையே மிகவும் பிரபலமான "அப்புசாமியையும், சீதாப்பாட்டியையும்" வடிவமைத்தவரும், குமுதம் "அரசு" பதில்கள் தருபவரில் ஒருவருமான ஜ.ரா.சுந்தரேசன் என்ற பாக்யம் ராமஸ்வாமி "அக்கறை" என்ற குழுவினை நடத்தி வருகின்றார். ஒவ்வொரு மாதமும் மூன்றாம் ஞாயிற்றுக் கிழமை, தனது அலுவலகத்தில் ஒத்த கருத்துடைய பத்திரிகையாளர், இதழாளர்கள், எழுத்தாளர்கள், திரைக் கலைஞர்கள், நாடகக் கலைஞர்கள், ஆன்மிக அன்பர்கள், சமூக சேவர்கர்கள் என பல்தரப்பட்ட மனிதர்களும் அளவளாவ ஏற்பாடு செய்துள்ளார். பாக்யம் ராமஸ்வாமியின் புதல்வர் (லோகேஷ் (?) இந்தக் கூட்டங்கள் அனைத்திற்கும் உறுதுணையாக உள்ளார்.

இந்தக் குழுவில் உள்ளவர்களில் சிலர், எழுத்தாளர்கள் ராணி மைந்தன், ஜே.எஸ்.ராகவன், அறந்தை மணியன், நகுபோலியன், இனியவன், லேனா தமிழ் வாணன், பி.எஸ்.ரங்கநாதன் (கடுகு-அகஸ்தியன்), திருப்பூர் கிருஷ்ணன், வாதூலன், தூர்தர்ஷன் நடராஜன், மானஸா (எஸ்.சந்திரமௌலி), விஸ்வபாலா (பாலா விஸ்வநாதன்), காந்தலக்ஷ்மி சந்திரமௌலி, சியாமளா சுவாமிநாதன், மெலட்டூர் நடராஜன், இசைக்கலைஞர்கள் கௌசல்யா சிவக்குமார், நகைச்சுவை நடிகர் எஸ்,வி.சேகர், நாடக நடிகர்கள் குருகுலம் எம்.பி.மூர்த்தி, பம்பாய் கண்ணன், திரைப்படத் தயாரிப்பாளர் கலைமாமணி எஸ்.எம்.உமர், மக்கள் தொடர்பு ஈ.வெ.ரா.மோகன் ஆகியோர்

நண்பர் மெலட்டூர் நடராஜன் அவர்களது அறிமுகத்தால் இந்தக் குழுவில் நானும் ஒரு அங்கமானேன். கூட்டங்களில் குழுவில் உள்ள அனைவரும் எந்தத் தலைப்பிலும் தங்களது கருத்துக்களை வெளியிடலாம்.

இந்த அக்கறை அமைப்பின் நூறாவது கூட்டமும் எட்டாவது ஆண்டு விழாவும், நேற்றைய தினம் (24.10.2009) காஸ்மாபோலிட்டன் க்ளப் பல்லவா ஹாலில் நடந்தது. பல் வேறு சுவையான நிகச்சிகள் நடைபெற்றன.

மங்களகரமான கடவுள் வாழ்த்துடன் நிகழ்ச்சியை துவக்கிய மாஸ்டர் "அஜீத்(?)"

"திரும்பிப் பார்க்கிறோம்" என்ற தலைப்பில் அக்கறையின் கடந்தகால கூட்டங்களை அசை போடுகிறார் ஜ.ரா.சுந்தரேசன் (பாக்யம் ராமஸ்வாமி)

நகைச்சுவை எழுத்தாளர் ஜே.எஸ்.ராகவனும் திரும்பிப் பார்க்கின்றார்

ஜி.எஸ்.சுப்பிரமணியன் நடத்திய "செஞ்சுரி அடியுங்க" வினாடி வினா

"தமிழ்த் திரை - 100" என்ற தலைப்பிலே சுவையான வினாடி வினா நடத்திய அறந்தை மணியன்.

"தமிழ்த் திரை - 100" வினாடி வினாவில் பங்கு பெற்ற கூட்டத்தினர்

ஜி.எஸ்.சுப்பிரமணியன் நடத்திய மற்றுமொரு வேடிக்கை விளையாட்டு

பாக்யம் ராமஸ்வாமி எழுதிய "ஒரு கணவன்-ஒரு மனைவி -ஒருமுதுகு" என்ற நகைச்சுவை நாடகத்தை நடித்து பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியவர்கள் குருகுலம் எம்.பி.மூர்த்தி குழுவினர்.

எந்த ஒரு கூட்டத்தையும் காலத்தே முடிக்க அனவைரையும் பழக்கி, விழாவினைச் சுவையாகவும், விறுவிறுப்பாகவும் நடத்தி ஒரு மனதாக அனைவரது பாராட்டுதல்களையும் பெற்ற ராணி மைந்தன்

அக்கறை நண்பர்களுக்கு அளிக்கப்பட்ட அன்புப் பரிசு

விழாவின் சிறப்பு அம்சமான அக்கறை நண்பர்களின் முகவரி கையேடு.

ஒவ்வொரு உறுப்பினர்களின் புனை பெயர், ஆர்வம், முகவரி முதலான விவரங்கள நேர்த்தியாக அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டதற்கான பாராட்டுதல்கள மீண்டும் பெறுபவர் ராணி மைந்தன்.

- சிமுலேஷன்

10 comments:

Jaisakthivel said...

Thanks for the wonderful coverage

Unknown said...

thanks for the mail and blog msg.
e mail is fast.but u have done in fastest manner.nice coverage.

Unknown said...

thanks for the super fast coverage. e mail is fast but u have made it fastest. e ve ra mohan

Unknown said...

வணக்கம். சுறுசுறுப்பான கவரேஜ். ஜ.ரா.சு, ஜே.எஸ்.ரா, ராணி மைந்தன், அறந்தை, ஜி.எஸ்.எஸ். மற்றும் ஈரோடு அக்கறை நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. முகவரி புத்தகத்தை முழுப் பொறுப்பேற்று அற்புதமாக வெளிக்கொண்டு வந்த ராணி மைந்தனுக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.
எஸ். சந்திர மௌலி

N.Balasubramanian said...

It has been the third SATURDAY - not Sunday.

nahupoliyan

N.Balasubramanian said...

It has been the third SATURDAY, not Sunday

nahupoliyan
nbalu_nbalu@yahoo.com

Unknown said...

What a wonderful evening - 24th Oct. 2009 with a feast for ears and mouth!!!
Hats off for an excellent and thoughtful gift - hand diary with details about the members.
Alarmelu Rishi

Simulation said...

அப்புசாமி.காமில் இந்த நிகழ்ச்சி பற்றிய பதிவு இங்கே

http://www.appusami.com/v2/Default.asp?colsName=2&colsvalue=5177&hidtxtvid=150&catid=81

நா. கணேசன் said...

Dear Balu sir,


Please ask your friends http://www.appusami.com to convert
to Unicode fonts, when they can.
http://www.appusami.com/v2/index.asp

Kumudam, Vikatan, Dinamani, Dinamalar, Kalachuvadu,... are in unicode fonts.

Thanks,
N. Ganesan

Kanags said...

அக்கறை பற்றிய விக்கிக் கட்டுரையூடாக இங்கு வந்தேன். அப்புசாமி.கொம் பக்கத்தில் எதையும் படிக்க முடியவில்லையே. எந்த எழுத்துருவில் தந்திருக்கிறார்கள். தயவு செய்து அவர்களிடம் எடுத்துக் கூறுங்கள். ஒருங்குறியில் இருப்பது நல்லது. நன்றி.--~~~~