Tuesday, November 24, 2009

மறு ஒளிபரப்பு

ராகவனுக்கு படுக்க மணி பதினொன்று ஆகி விட்டது. மைதிலி நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தாள். தண்ணி குடித்து விட்டுப் படுக்கும் சமயம் செல் போன் அடித்தது. இந்த அகாலத்தில் யாராக இருக்கும் என்று பார்த்தார். விஜியிடமிருந்துதான் போன்."என்னம்மா? இந்த நேரத்திலே?""அப்பா; அம்மாவை ஒரு நிமிஷம் எழுப்புங்கோ.""எதுக்கும்மா?""அப்ப்பா. கொஞ்சம் எழுப்புங்கோளேன்.""மைதிலி; பாரு விஜி போன் பண்ணறா. எதோ ஒங்கிட்ட சொல்லணுமாம்""என்னடி விஜி; என்ன விஷயம்? எதுக்குப் போன் பண்னே?""அம்மா டி.வியை ஆன் பண்ணேன். தூர்தர்ஷ்ன் சானல் போடு""எதுக்கு?...""என்னடி இது? என்னோட டான்ஸ்...

வெக்கிலா...வெக்கிலா...கொஞ்சம் சிரி

அந்தக் காலத்தில் உடம்பு ஜுரமாக இருந்தால், டாக்டர் சாமிக்கண்ணுவிடம் போவது பழக்கம். அவரிடம் போய் உட்கார்ந்தவுடன், "வெளிக்கி எப்படிப் போச்சு?" என்றெல்லாம் விபரமாக கேட்டுவிட்டு, மெஜரால் போன்ற மாத்திரைகள் கொடுப்பார். அதனைப் பொடி செய்து தேனில் குழைத்துத் தருவார் அம்மா. ஒரிரு நாட்களில் ஜுரம் சரியாகிவிடும். அதுவரை சாத்துக்குடி, ப்ரெட் என்று சற்று விசேஷக் கவனிப்பு நடக்கும். அதனால அப்பப்ப ஜுரம் வந்தால் கூட நன்றாக இருக்குமே என்று ஒரு நப்பாசை வரும். சாமிக்கண்ணு டாக்டரின் பையன் ஜெயசீலனுக்கும் கிட்டத்தட்ட எங்கள் வயசுதான். ஒரு முறை டாக்டர் வீட்டுக்குப் போயிருக்கும்போது...

Sunday, November 22, 2009

எம்.எஸ்.உதயமூர்த்தியும் தம்பிதுரையும்

80கள். சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை. மேதினக் கூட்டம். சிறப்பு அழைப்பாளர்கள் எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்களும் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை அவர்களும். எம்.எஸ்.உதயமூர்த்தி தனது உரையில் வழக்கம் போல் வாழ்க்கையின் வெற்றிக்கு உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை ஆகியவை எப்படித் தேவை என்றும், எப்படி மக்கள் தங்களைத் தாங்களே மேம்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் ஊக்கம் தரும் உரை ஒன்றினை நிகழ்த்தினார்.அடுத்து பேச வந்த தம்பிதுரை அவர்கள், "ஐயா சொன்னதை அப்படியே நம்ப வேண்டாம். எல்லாத்துக்கும் மேல தேவையானது அதிர்ஷ்டம். அதிர்ஷ்டத்தை நம்பணும். எனக்கு அந்த அதிர்ஷடம்...

ஆதித்யா-அனிருத்

ஆதித்யா- அம்மா, இவனைப் பாருங்கோ! என் கண்ணைக் குத்திட்டான்.அம்மா - ஏண்டா அனிருத், அவன் கண்ணைக் குத்தினே?அனிருத் - இல்ல அம்மா, கன்னத்லே அறையத்தான் போனேன்; நகந்துன்ட்டான்; அதனாலதான் கண்ணுலெ விரல் பட்டுருத்து.--------------அம்மா - அனிருத், அவன் உனக்கு அண்ணா. இனி மேல பேர் சொல்லிக் கூப்பிடக் கூடாது. அண்ணான்னுதான் கூப்பிடணும், தெரியறதா?அனிருத் - சரிம்மா.ஆதித்யாவைத் தனியாகத் தள்ளிக் கொண்டு போய், "யேய். இனிமே நீயும் என்னைத் தம்பின்னுதான் கூப்பிடணும் தெரியு...

Saturday, November 21, 2009

பதிவர்களுக்கு மார்க் போட்டது யாரு?

க்ளாஸ்லே மொத்தம் நாப்பது பேரு! எல்லாரோட மார்க்கும் போட்டுருக்காங்க. நம்மளோட மதிப்பெண்கள் ஆங்கிலம் - 5 தமிழ் - 3 கணக்குக் - 0 விஞ்ஞானம் - 4 வரலாறு - 5 புவியியல் - 2 வணிகம் - 0 கணினி - 0 விளையாட்டு - 0 மொத்த மதிபெண்கள் - 19 ஒன்பது பேருக்கு மேல 54 மார்க் வாங்கி முதலிடம் பிடிக்கிறாங்க. ஆனா பத்து பேருக்கும் மேல ஒத்த இலக்க மதிபெண்கள்தான்தான். உங்களோட மார்க்கையும் பார்க்கணுமா? இங்கே போய்ப் பாருங்க. http://spreadsheets.google.com/pub?key=poYMG16Cp6GAN3WCTwl72TQ&output=html&gid=0&single=t...