Monday, March 01, 2010

துக்ளக் சோவுக்குச் சில கேள்விகள்


பதின்ம வயதில் பல்வேறு பொழுதுபோக்குகள் இருந்தன. அவற்றில் ஒன்று பத்திரிக்கைகளுக்குக் கேள்விகள், துணுக்குகள் எழுதிப் போடுவது. அதிலும் "துக்ளக்' சோ, குமுதம் அரசு போன்றவர்களுக்கு வில்லங்கமான கேள்விகள் கேட்டு அது பிரசுரம் ஆகின்றதா என்று பார்ப்பது எனக்கும் எனது கஸின் ஹரீஷுக்கும் (தற்போது ஹ்யூஸ்டனில்) ஒரு த்ரில்லான அனுபவம். (அந்தக் காலத்திலும் ஆட்டோ பயம் இருந்தது என்றாலும்). இந்தக் கேள்வி-பதில்கள் படத்துடன் பிரசுரமானால் இரட்டிப்பு சந்தோஷமும் கூட. சில சமயம் இருவரது கேள்விகளும் ஒரே இதழிலும் பிரசுரமாகும்.

அது அந்தக் காலம்!!! (அந்தக் காலத்து மேட்டரைப்பத்திப் பேசினாலே இப்படி சொல்லாமல் இருக்க முடியுமோ?)
- சிமுலேஷன்

2 comments:

Jawahar said...

என் இலக்கியச் சேவை(!) கூட துக்ளக் கேள்வி-பதிலில்தான் தொடங்கியது என்று ஒரு பதிவில் எழுதியிருக்கிறேன்.

http://kgjawarlal.wordpress.com

Simulation said...

Same pinch Jawahar!