Monday, December 27, 2010

மிஸ்டர் எக்ஸ் கச்சேரிக்குப் போனபோது

மிஸ்டர் எக்ஸ் கச்சேரிக்குப் போனபோது...


1.    1. மிருதங்கம், கடம், கஞ்சிரா எல்லாம் சேர்ந்து வாசிக்கும்போது கூட 'தனி ஆவர்த்தனம்'னு சொல்லறாங்களே! ஏன்?  

2. ஏன் ஒரு கச்சேரிலேகூட ‘மங்களம்’ மொதல்ல பாட மாட்டேங்கறாங்க?

3. சங்கீத முமோர்த்திகள் ஏன் ‘ஜம்பை’ ராகத்தில் ஒரு கீர்த்தனை கூடப் போடல்லே?

4. ‘தம்பூரா கண்ணன்’ ஏன் ‘ஸோலோ’ கச்சேரி செய்யறதில்லே?

5. Portable, Vennai, Portable Thamboor கண்டுபிடிச்சா மாதிரி Portable Flute, Portable Mohrsing ஏன் யாரும் கண்டுபிடிக்கல?

6. நேத்திக்குக் கச்சேரிலே காம்போதி ராகத்திலே வாசிச்ச ‘மல்லாரி’ சூப்பர்!

7. தனி ஆவர்த்தனத்தின் போது எல்லோரும் எந்திரிச்சுப் போயிடராங்களாமே. ஏன் மொதல் அயிட்டமா, தனி ஆவர்த்தனத்தை வச்சுக்கக் கூடாது?

8. பசி நேரத்திலே கேட்கக் கூடாத ராகம் எது? தாளம் எது? 
- காபி ராகம், அட தாளம்                                                                  

9. மரியாதையான ராகங்கள் எது?
- வலஜி, காம்மோஜி

10. மரியாதை இல்லாத ராகங்கள் எவை?
- அடாணா, கானடா, பேகடா

11. மூக்கைப் பிடிச்சுண்டு பாட வேண்டிய ராகம் எது?

- பீலூ

12. கடம் விதவான் மாதிரி, மிருதங்க வித்வானும் ஏன், மிருதங்கத்தைத் தூக்கிப் போட்டுப் பிடிக்க மாட்டேங்கறாரு?

- சிமுலேஷன்

4 comments:

ப.கந்தசாமி said...
This comment has been removed by a blog administrator.
Simulation said...

முதன் முறையாக எம் தளத்துக்கு வந்து கண்ணியமாக கருத்துக்களைத் தந்த கந்தசாமி அவர்களே, நன்றி!

RVS said...

சுந்தர் சார்! இது உங்களுக்கு தோணின கருத்துக்களா?

சுவாரஸ்யம். :-)

Simulation said...

RVS, வேற யார் இப்படி மொக்கையா யோசிச்சிருக்க முடியும்?