Saturday, January 22, 2011

வ.உ.சியும் வாலேஸ்வரனும்



இந்த மாத "அக்கறை" கூட்டத்துக்குச் சென்றபோது வ.உ.சி அவர்களின் பேரன் சிதம்பரநாதன் அவர்கள், வ.உ.சி அவர்களின் மற்றொரு பேரனாகிய செல்வராமனை அறிமுகப்படுத்தினார். வ.உ.சி அவர்களுக்கு ஏழு குழந்தைகள்.அவர்களில் கடைசியாகப் பிறந்தவரான 'வாலேஸ்வரன்' அவர்களின் புதல்வர்தான் செல்வராமன் அவர்கள்.

அவரை அறிமுகப்படுத்திய பின்பு, செல்வராமன் அவர்களின் அப்பாவான வாலேஸ்வரனுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது என்றும் சிதம்பரநாதன் கூறினார். சுவையாக இருந்தது அந்த விஷயம்.  சென்னையில் மயிலாப்பூரில் உள்ள சப்த சிவஸ்தலங்களான கபாலீஸ்வரர், காரணீஸ்வரர், மல்லீஸ்வரர், விருபாக்ஷீஸ்வரர், தீர்த்தபாலீஸ்வரர், வெள்ளீஸ்வரர் மற்றும் வாலீஸ்வரர் ஆகிய பெயர்களில் ஒன்றான வாலீஸ்வரர் பெயரை வைத்திருப்பாரோ என்று எண்ணியிருந்த வேளையில், அவர் பெயர், வாலீஸ்வரன் அல்ல; வாலேஸ்வரன் என்று உரைத்தது.

ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய வ.உ.சி அவர்கள், வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிக்க வேண்டும் என்றும், சட்டம் பயின்ற அவர் வழக்கு மன்றம் ஏறாமலிருக்கும்படி அவரது ‘சன்னத்’தைப் பறித்தும் ஆங்கிலேய அரசாங்கம் அவருக்குத் தண்டனை அளித்தது. பின்னர் ஒரு நாள் அவரது சிறைத் தண்டனையைக் குறைத்தும் அவர் மீண்டும் வக்கீல் தொழிலில் ஈடுபடவும் வகை செய்து ஒரு ஆங்கிலேய நீதிபதி தீர்ப்பளித்தார். அவர் பெயர் "வாலஸ்". அவர் நினவாக வ.உ.சி அவர்கள் தனது கடைசிக் குழந்தைக்கு இட்ட பெயர்தான் "வாலேஸ்வரன்".
-      
             - சிமுலேஷன்

6 comments:

jeevagv said...

பகைவனுக்கும் அருள்வாய்!

Simulation said...

ஜீவா, வெகு நாட்கள் கழித்து இந்தப் பக்கம். வருகைக்கு நன்றி! - சிமுலேஷன்

Simulation said...

Ganpat சொல்கிறார்:

ஜனவரி 23, 2011 at 5:23 மு.பகல்
பூஜ்யஸ்ரீ வ.உ.சி அவர்கள் பற்றிய ஒரு சுவையான தகவல்.என்னே அம்மகானின் நன்றி மறவாமை!!
மிகவும் நன்றி simulation!

Unknown said...

Dear sir,

Can you give the phone details of the descendants v O C pillai ?

I will be thankful. My email adhi1949@hotmail.com. Or. dadhikesavalu@gmail.com

Prof. D. Adhikesavalu

Unknown said...

Grateful that people of Tamilnadu still remember the great people like V O C and Bharathiar.

Could you please give the contact numbers of some of V O C. 'S. descendants ?

My email id: adhi1949@hotmail.com

Thanks

Prof.Adhikesavalu

Unknown said...

Can any one give me the telephone number or email id of Mr.Chidambaram or Mr.Selvendiran, the grand sons of the greatest patriot of Tamilnadu V O C.


D. Adhikesavalu

email id:adhi1949@hotmail.com