1. சூல் கொண்ட மேகம் போல் பொழிந்தவன் செய்த சிலேடை என்ன?
விடை: காளமேகப் புலவர் துப்பாக்கிக்கும் ஓலைச் சுருளுக்கும் உள்ள சிலேடையை வைத்து ஒரு பாடல் எழுதியுள்ளார்.
2. என்னாளும் பொன்னாளகட்டும் என்று எழுதுவது எந்தப் புத்தகத்தில்?
விடை: எ.எஸ். பஞ்சாபகேச ஐயரின் காநாம்ருத போதினி
3. ஸ்ரீ தியாக ப்ரம்ம கான சபா (வாணி மஹால் லோகோ) விலுள்ள் சத்குரு தியாகராஜர் சௌக்யமாய்ப் பாடும் பாடல் என்ன? அல்லது என்ன ராகம்?
விடை: சத்குரு தியாகையர் முன்பாக இரண்டு டம்ளர்கள் இருப்பதால் அவர் காபி சாப்பிட்டுவிட்டு, காபி ராகத்தில் "இந்த சவுக்யமு" பாடியிருப்பார் என்பது என் அபிப்ராயம். ஹி ஹி.
4. நடுநாயகமாய் அமர்ந்திருப்பவர் யார்? தென்னாங்கூர் சென்று தேடண்டாம்?
விடை: சுவாமி ஹரிதாஸ் கிரி அவர்கள்.
5. யாதரத்னம் பொன்னுசாமி கம்பெனிக்கும் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனிக்கும் உள்ள ஒற்றுமை என்ன?
விடை: யாதரத்னம் பொன்னுசாமி கம்பெனியில் எம்.ஜி.ஆர் முதன் முதலில் நடிக்கத் துவங்கினார். மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சிவாஜி கணேசன் அவர்கள் முதன் முதலில் நடிக்கத் துவங்கினார்.
4 comments:
pathila marakkaama podungka.. kelvikal pathil solla mudiyaatha alaivu irukku.
>>2. என்னாளும் பொன்னாளகட்டும் என்று எழுதுவது எந்தப் புத்தகத்தில்?
கானாம்ருத போதினி -- சங்கீத பால பாடம் -- A . S பஞ்சாபகேச ஐயர்
>>3. ஸ்ரீ தியாக ப்ரம்ம கான சபா (வாணி மஹால் லோகோ) விலுள்ள் சத்குரு தியாகராஜர் சௌக்யமாய்ப் பாடும் பாடல் என்ன? அல்லது என்ன ராகம்?
சாந்தமுலேகா -- சாமா ராகம்
>>4. நடுநாயகமாய் அமர்ந்திருப்பவர் யார்? தென்னாங்கூர் சென்று தேடண்டாம்?
சுவாமி ஹரிதாஸ் கிரி
மதுரை சரவணன் வருகைக்கு நன்றி.
பால்ஹஅனுமன், 2 கேள்விகளுக்கு சரியான விடை அளித்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.
- சிமுலேஷன்
விடைகளைப் பதிவிலேயே பதிந்துள்ளேன்.
Post a Comment