Sunday, September 04, 2011

வண்ணநிலவனும் திராவிட மாயையும்

http://simulationpadaippugal.blogspot.com/2011/02/blog-post_19.html


"நகர்ந்து செல்லும் நாட்கள்" என்ற தலைப்பில் கல்கி வார இதழில் 'வண்ணநிலவன்' அவர்கள் கடந்த 6 இதழ்களாக பல்வேறு தலைப்புகளில் எழுதி வருகின்றார். இந்த இதழில் 'சுப்பு' அவர்களின் "திராவிட மாயை" என்ற புத்தகம் பற்றி எழுதியுள்ளார்.

இந்தப் புத்தகம் குறித்த எனது ஆயாசத்தினை இந்தப் பதிவில் தெரிவிதிருந்தேன். வண்ணநிலவன் கருத்துக்களும் இதையே சுட்டுகின்றது.

- சிமுலேஷன்

1 comments:

காவ்யா said...

//திராவிடக் கட்சிகளைப்பற்றிக் கூறவந்த ஆசிரியர், அடிக்கடி கிறிஸ்தவ, முஸ்லீம் பிரச்சாகர்களைப்பற்றிக் கூற ஆரம்பித்து விடுவதேன் என்று புரியவில்லை. ஒருவேளை திராவிட இயக்கங்களின் ஒருதலைப்பட்சமான மத இணக்கத்தினை சுட்டிக் காட்டுவதற்கோ?
//

Hav read ur review of Diraavida maayai in the link. U hav written the above Quote there. my response:

இதற்குக் காரணம் சுப்பு இத்தொடரை எழுதிய தமிழ்.ஹிந்து.காம் வலைபதிவே. இசுலாம்,கிருத்துவம் மதங்களை இழித்துப்பேசி, அம்மதங்கள் பொய்; அதில் சேர்ந்தால் ஆன்மிகவே வராது; (சமீபத்திய கட்டுரையில் அத்தள பிரதம எழுத்தாளர் மலர்மன்னன் இவ்வாறு எழுதியிருக்கிறார்); அம்மதத் தலைவர்கள் புரட்டு பண்ணி மக்களை இழுக்கிறார்கள்; போனற‌ கொள்கைகளைக்கொண்ட இத்தளம் தன்வாசகர்களுக்காகவே இக்கட்டுரைத் தொடரைத் வெளியிட்டது. எனவே சுப்புவும் இசுலாம், கிருத்துவம் மதங்களைப் பழித்தார். பின்னர் நூலாகி அத்தளத்தில் இன்று விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.

ஆரிய‌ மாயையுக்குத் திராவிட‌ மாயை என்ப‌து ச‌ரி. ஆனால் அது ஒரு ந‌ல்ல‌ விவாத‌மாக‌ இருக்க‌வேண்டும். 'எடுத்தேன் க‌விழ்த்தேன்' என்றிருக்க‌க்கூடாது. இதை சுட்டிக்காட்டியிருக்கிறார் வண்ண நிலவன். உங்க‌ள் விம‌ர்ச‌ன‌மும் அதே.
இப்ப‌டிப்ப‌ட்ட‌ நூல்க‌ள் ஒரு சாராருக்கு ம‌ட்டுமே சுய‌ இன்ப‌ம் த‌ருவ‌த‌ற்காக‌ எழுதப்ப‌டுப‌வை. அவை ப‌ர‌வ‌லாகப் ப‌டிக்க‌ப்ப‌டும்போது பிர‌ச்சினையாகிற‌து. சி.என்.ஏ ஆரிய மாயை ப‌ர‌வ‌லாகப் ப‌டிக்க‌ப்ப‌ட்ட‌து. ஆனால் ஒரு சாராருக்கே பிர‌ச்சார பீர‌ங்கியாக‌ வேண்டுமென்று எழுத‌ப்ப‌ட்ட‌து. அந் நூலாவது ஒரு திற‌மையான‌ எழுத்தாளானால் க‌வ‌ர்ச்சிக‌ர‌மாக‌ எழுதப்பட்ட‌து. ஆனால் இஃது ஏனோதானோ என்று எழுத‌ப்பட்டிருக்கிற‌து.