Monday, October 17, 2011

கணையாழி கடைசிப் பக்கங்களும் தமிழ்ப் பதிவர்களும்

ஒரு சின்ன விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் வாசகர்களுடன் சுவாரசியமாகப் பகிர்ந்து கொள்வது சுஜாதாவுக்குக் கை வந்த கலை. ஆனால் அந்த விஷயம் ரொம்பச் சின்ன விஷயமாக இருந்தால் அதே போல பல விஷயங்களை ஒரே குடையின் கீழ் தொகுத்து எழுதி வந்தார். அதுதான் கணையாழி கடைசிப் பக்கங்கள். இதில் என்ன வசதி என்றால் இதுதான் எழுத வேண்டும் என்ற எந்த விதக் கட்டாயமும் இல்லாமல் மனதுக்குத் தோன்றிய விஷயங்களை எல்லாம் ஒரு கதம்பமாகத் தொகுத்து வழங்கலாம். ஒரு விஷயத்துக்கும் அடுத்த விஷயத்துக்கும் சம்பந்தம் இருக்கத் தேவையில்லை. சொல்லுவது மட்டும் சுவாரசியமாக இருக்க வேண்டும்.

இந்த 'கணையாழி கடைசிப் பக்கங்கள்' உத்தி வசதியாகத் தோன்றுவதாகத் தெரிவதால் தமிழ் வலைப்பதிவர்கள் பலரும் எழுத பெரிதாக ஏதும் இல்லாத் போது ஆனால் தங்களைப் பாதித்த விஷயங்கள சின்னதாக இருந்தாலும் ஒரு மெட்லியாக தொகுத்து இடுகிறார்கள். அவர்களில் ஒரு சிலரின் பதிவுகள் இங்கே:-

1. டோண்டு - நங்கநல்லூர் பஞ்சாமிர்தம்

2. கேபிள் சங்கர் - கொத்ட்து பரொட்டா

3. டி.வி.ராதாகிருஷ்ணன் - தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்

4. ஜாக்கி சேகர் - சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்

5. ஆர்.வி.எஸ் - திண்ணைக் கச்சேரி

6. சிமுலேஷன் - ஃபலூடா பக்கங்கள் ஹி..ஹி

இந்த மாதிரி கதம்பமாக எழுதும் வேறு ஏதேனும் பதிவர்களின் பெயர்கள் விடுபட்டுப் போயிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். அவற்றையும் இங்கு சேர்க்கின்றேன்.

- சிமுலேஷன்

4 comments:

RVS said...

சார் அடியேனும் அவ்வப்போது திண்ணைக் கச்சேரி என்று ஒன்று செய்கிறேன்.
http://www.rvsm.in/search/label/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF

Simulation said...

ஆர்விஎஸ் உங்களது பதிவையும் குறிப்பிட்டிருக்கின்றேன் இப்போது. நன்றி. - சிமுலேஷன்

BalHanuman said...

அன்புள்ள சிமுலேஷன்,

மேலும் சில பதிவர்களின் பெயர்கள் இங்கே...

மோகன் குமார் - வீடு திரும்பல்
http://veeduthirumbal.blogspot.com/

சி. சரவணகார்த்திகேயன் - கற்பதுவே கேட்பதுவே கருதுவதே
http://www.writercsk.com/2011/10/blog-post_16.html

BalHanuman said...

அன்புள்ள சிமுலேஷன்,

மேலும் ஒரு பதிவர் இங்கே...

SP.VR. Subbaiya - பாசந்தி, பக்கோடா மற்றும் ஃபில்ட்டர் காஃபி

http://classroom2007.blogspot.com/2011/10/blog-post_06.html