Friday, January 20, 2012

சென்னையில் தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பும் புதுமையான போட்டிகளும்

சென்னை நகரில் பலமுறை தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு நடந்துள்ளது. நானும் சில முறை கலந்து கொண்டுள்ளேன். பெரும்பாலான சமயங்களில் இந்தச் சந்திப்பின் போது என்ன பேசுவது, யார் வழி நடத்துவது என்று புரியாமல் ஒரு மொக்கையான நிகழ்வாக இருக்கும். அப்படியில்லாமல் ஒரு பதிவர்கள் சந்திப்பினை  சுவாரஸ்யமான நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்று வெகுநாட்களாக ஒரு ஆவல். அதன் விளைவே இந்தப் பதிவு. டோஸ்ட்மாஸ்டர்ஸ் இண்டர்நேஷனல் என்ற அமைப்பின் விதிமுறைகளைப் பின்பற்றி இந்த நிகழ்ச்சியினை நடத்தலாமாவெனவுள்ளோம். நாள் & நேரம்- இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால்...

Tuesday, January 17, 2012

வனவாசம் - கண்ணதாசன் - நூல் விமர்சனம்

"எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இது நூலல்ல; எப்படி வாழக் கூடாது என்பதற்கு இதுவே வழிகாட்டி" என்ற முன்னுரையுடன் துவங்குகின்றது கண்ணதாசனின் சுயவாழ்க்கை வரலாறான் "வனவாசம்". வாழ்க்கை வரலாறு என்பதனால், சிறுவயது பள்ளி அனுபங்கள் மற்றும் வீட்டை விட்டுப் பட்டினத்திற்கு ஓடி வந்த அனுபவங்கள் என்று பல அனுபவங்களைக் குறிப்பிட்டாலும், திராவிட முன்னேற்றக் கழகத்தில்     இரு(ண்ட)ந்த தன பத்தாண்டு அனுவங்களையே வனவாசம் என்று குறிப்பிடுகின்றார் கண்ணதாசன்....

Friday, January 13, 2012

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 09 - ஹமீர் கல்யாணி

சாரங்கா என்ற கர்நாடக ராகத்தினை போலவே இருக்கும் ஹிந்துஸ்தானி ராகம் ஹமீர் கல்யாணியாகும். இது கல்யாணி ராகத்தின் ஜன்ய ராகமாகும்.  மெல்லிய உணர்வுளை வெளிப்படுத்த அமைந்த அருமையான ராகம் இது. இந்த ராகத்தில் அமைந்த பாடல்களைக் கேட்டால் இது வெளிப்படையாகப் புலப்படும். ஆரோகணம்: ஸ் ப ம2 ப த2 நி3 ஸ் அவரோகணம்: ஸ் நி3 த2 ப ம2 ம1 க3 ப ம1 ரி2 ஸ் முதலில் நாம் கேட்க இருப்பாது "சந்திரோதயம்" என்ற படத்தில் அமைந்த "சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ" என்ற பாடல். சுத்தமான ஹமீர் கல்யாணியில்   துவங்கும் இந்தப் பாடலில், பின்னர் சில...