Wednesday, June 20, 2012

இதற்காகவெல்லாம் இவர்களைப் புகழுதல் சரிதானா? - 01

நம் நாட்டில் பலவேறு தலைவர்களும், பிரபலங்களும் இருந்தார்கள். அனவரிடம் உள்ள நிறைகளைப் போலவே,  மனிதர்களுக்கே உண்டான குறைகளும் இருந்தன. அவற்றைப் பெரிதுபடுத்தாமல் போவதில் தவறில்லை. ஆனால் ஹீரோ வொர்ஷிப் செய்தே பழக்கப்பட்ட நமக்கு இந்தப் பிரபலங்கள் செய்த எல்லா விஷயங்களையுமே தலையில் வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோமே! இது சரிதானா? இது குறித்து என்னுள் எப்போதுமே நெருடிக் கொண்டிருக்கும் சில கேள்விகள் இங்கே:-

 

ஒவ்வொரு முறையும் ரயில் விபத்துக்கள் நேரும்போதும் முன்னாள் பிரதமரும், முன்னாள் ரயில்வே அமைச்சருமான லால் பஹதூர் ஸாஸ்திரி அவர்களின் பெயரை யாரும் குறிப்பிட மறந்ததில்லை. 1956ல் முஜாபூரில் நடந்த விபத்தில் 112 பேர் உயிரிழந்த்த போது ராஜினாமா செய்கின்றார் ஸாஸ்திரி. ஆனால், பிரதமர் நேருவோ அவரது ராஜினாமவை ஒப்புக் கொள்ள மறுக்கின்றார். மீண்டும் 3 மாதங்கள் கழித்து அரியலூரில் நடந்த விபத்தில் 144 பேர் இறக்க, விபத்துக்குத் தார்மிகப் பொறுப்பேற்று ஸாஸ்திரி மீண்டும் ராஜினாமா செய்ய, இம்முறை பிரதமர் அதனை ஏற்றுக் கொள்கின்றார்.

லால் பஹதூர் ஸாஸ்திரியின் இந்த அரிய செயலை எல்லோரும் வியந்தோதும்போது, எனக்குள் தோன்றும் எண்ணம் என்னவேன்றால், "இந்த ராஜினாமாவால் யாருக்கு என்ன லாபம்? தனது ஒரு தவறான உத்தரவால் பெரும் இழப்பு ஏற்பட்டிருந்தால் ராஜினாமா செய்வது ஒரு வகையில் நியாயம். விபத்துக்கு தான் நேரடி காரணமாக இல்லாத போது ராஜினாமா செய்வது எதற்கு? அதுவும் ஒரு குழப்பமான, பிரச்னையான சூழ்நிலையில் "என்னை விட்டுவிடுங்கள். நான் போகிறேன்" என்று சொல்வது சரியா? இந்தச் சூழ்நிலையில் புதிதாகப் பொறுப்பேற்கின்றவரின் நிலைமையை எண்ணிப் பார்க்க வேண்டாமா? ஸாஸ்திரியின் செயல் சரியா? சரியோ, தவறோ, இதற்காகப் போய் அவரை நாம் பாராட்டுவதும் சரிதானா?


காமராஜர் இந்திய அரசியலில் ஒரு முன்னுதாரணமாக, எளிமையின் வடிவமாக வாழ்ந்தவர். கல்வித் துறையிலும், தொழிற்துறையிலும் உண்மையாகவே மாபெரும் சாதனைகள் படைத்தவர். எத்தனையோ காரணங்களுக்காக அவரிப் புகழ்ந்து கொண்டே போகலாம்.

இருந்த போதும், அவரை King Maker என்று புகழுவது சரிதானா? ஸாஸ்திரின் அமைச்சரவையில் எத்தனையோ ஜாம்பவான்கள் இருந்த போதும், சாஸ்திரியின் மறைவுக்குப் பின்னர், பிரதமர் பதவிக்கு காமராஜர் ஏன் இந்திரா காந்தியின் பெய்ரை முன்மொழிய வேண்டும்? இந்திரா காந்தி, சாஸ்திரியின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த போது ஏதேனும் பெரிய சாதனைகள் செய்தாரா? நேருவின் மகள் என்பதற்காக மட்டுமே அவரைப் பிரதமர் பதவிக்கு காமராஜர் பரிந்துரை செய்திருந்தால், அதற்காக காமராஜர் King Maker என்று புகழப்படத்தான் வேண்டுமா?


மது தண்டவதே சிறந்த பொருளாதார அறிஞர். மொரார்ஜி அமச்சரவையில் ரயில்வே அமைச்சராகவும், வி.பி.சிங் அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் இருந்தவர். ரயில்வே அமைச்சராக இருந்த போது நல்ல பல மாற்றங்கள் கொண்டு வந்தவர். வாழ்வின் இறுதி வரை எளிமையான வாழ்க்கையே வாழ்ந்தவர்.

மது தண்டவதேயைப் பற்றி ஊடகங்களில் எழுதும் போதெல்லாம், அவர் கலர் டி.வி.கூட வைத்துக் கொள்ளாதவர் என்று பெருமையாக எழுதுவார்கள். எளிமையாக இருப்பது நல்லதுதான். அதற்காக கலர் டி.வி தொழில் நுட்பம் வந்த பின்பு கூட 'கருப்பு-வெள்ளை' டி.வி.தான் பார்ப்ப்பேன் என்று சொன்னால் அதில் என்ன பெருமை? மது தண்டவதே கலர் டி.வி பார்க்காததால் நாட்டுக்குப் பெரிதும் நன்மை ஏற்பட்டதா? இந்த ஒரு விஷயத்திற்காக மது தண்டவதே அவர்களைப் போற்றிப் புகழ்வது சரிதானா?

 

ஈ.வெ.ரா அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்த போது கள்ளுக் கடை மறியல் போராட்டம் எற்பட்ட போது அவருக்குச் சொந்தமான தென்னந் தோப்பிலிருந்த அனைத்து தென்னை மரங்களையும் வெட்டி வீழ்த்தினார் என்று பெருமையாகச் சொல்வார்கள். கள் வேண்டாமென்றால் தென்னை மரத்திலிருந்து 'கள்' இறக்குவதனை நிறுத்தினால் போதுமே! எதற்காக காய்த்துக் குலுங்கும் மரங்களை வெட்ட வேண்டும். இந்த நிகழ்ச்சிக்காக ஈ.வெ.ரா அவர்களைப் புகவது சரிதானா?

மேலும் வரும்...

- சிமுலேஷன்

8 comments:

ஆட்டோமொபைல் said...

nice post

ஆட்டோமொபைல் said...

nice post

ஆட்டோமொபைல் said...

nice post

ஆட்டோமொபைல் said...

nice post

VajraSoft Inc said...

வித்தியாசமான சிந்தனை. மிகவும் ரசித்தேன்...

Jagannathan said...

I visited your site - thanks to Uppili Srinivasan. I agree with your thoughts in this post. But we have to remember that we live in India where hero-worship is the norm and people have to find one good thing however trivial it may be, and publicise it repeatedly.

I am against the resignation dramas as much as I disagree with wrong arrests after a disaster. When a school bus meets with an accident, the principal . correspondent are booked; when a child drowns in the school pool, the principal is booked; when a building or scaffolding collapses and death results, the contractor - who may not be in the site at all -is arrested even without any initial enquiry into the accident. The driver or the vehicle mechanic, pool safety in-charge, site safety supervisor are the people who should take the full responsibility. If a subsequent enquiry reveals the mishaps occurred due to specific instructions are given for non-conformance to safety standards by the higher level people.

-R. Jagannathan

கணேசன் இளங்கோவன் said...

இன்றைய தினத்தில் பழைய தலைவர்களை பற்றி ஏன் பேச வேண்டும். பெரும் தலைவர் போன்றோரை நாம் விமர்சனம் செய்யும் அளவிற்கு நமக்கு தகுதி இல்லை என்றே கூறுவேன். இணையம் வளர்ந்து விட்டது என்பதற்காக, எதை வேண்டுமானாலும் எழுதாலாம் என்பதில்லை கருத்து சுதந்திரம்.

சற்று கோபத்துடன்
கணேசன் இளங்கோவன்
குவளை இணையம்.

பாபு said...


ஹீரோ ஒர்ஷிப் நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அந்தக் கருத்தை வலியுறுத்தும் உங்களை மதிக்கிறேன்.

ஆனால், நீங்கள் குறிப்பிட்டுள்ளவற்றில் நாம் எடுக்கவேண்டிய பாடங்களும் உள.

1). தன்னால் விபத்து நிகழவில்லை என்று சாஸ்திரிக்குத் தெரியும். ஆனாலும் தான் எவ்வகையிலும் தார்மீகக் காரணமாகியிருப்போமோ என்கிற குற்ற உணர்ச்சி அரசியலுக்கும் அரசியலருக்கும் வேண்டும் என்பதை உணர்த்துவது.

2. நேருவின் மகளைக் கொண்டுவந்ததால் அல்ல காமராஜர் கிங் மேக்கரானது. கட்சி அச்சமயம் உடைபடாமல் காத்ததால்.

3. ஒரு நிதி அமைச்சராக இருந்தும் தன் தேவைகளைச் சுருக்கிக் கொண்டவர் என்பதில் 'சும்மாவாச்சும் சர்வதேச சுற்றுலா' செல்கிற இன்றைய அமைச்சர்கள், பிரதமர்கள், ஜனாதிபதிகளுக்கு ஒரு பாடம் இருக்கவே செய்கிறது.

4. கள் இறக்காமல் இருந்தாலும் போதும். ஆனால் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு செயலை மேற்கொள்வதன் உறுதியான நிலைப்பாடாக அதனைப் பார்க்கலாம். தனக்கு இழப்பே வந்தாலும் தன் கொள்கை உறுதியைப் பறைசாற்றும் நிலை அது.

ஆமாம், நீங்களும் ஜெமோ வகையறாக்கள் போல ஈவெரா என்று எழுதுகிறீர்கள்?