சுஜாதா அவர்கள் விகடனில் "என்றான் முருகன்" என்ற தலைப்பில்
வாசகங்கள் எழுதக் கேட்டிருந்தார்.
வாத்யார் பிரசுரிக்காமல் விட்டு நான் எழுதிய வாசகங்கள் கீழே வருமாறு:-
1. அம்மா மாம்பழம் பிடிக்குமே உங்களுக்கு என்றான் முருகன் கனிவாக.
2. பாம்பைப் போன்ற தீவிரவதிகளை விஷம் வைத்துக் கொன்றால் கூடத் தவறில்லை என்றான் முருகன் நச்சென்று.
3. டிபன் பாக்ஸி¢ல் மிளகாய் பஜ்ஜியை வைத்தது யார் என்றான் முருகன் காரமாக.
4. உனக்காக ஸ்பெஷல் ஐஸ் க்ரீம் வாங்க வந்தி¢ருக்கேன் சாப்பிடு என்றான் முருகன் குழைவாக.
5. பில்டர் காபிதான் பெஸ்ட்; இல்லை இல்லை. இன்ஸ்டன்ட் காபிதான் பெஸ்ட் என்றான் முருகன் குழம்பியபடி.
6. ஸம்மர் வருது; வீடு முழுவதும் ஏ.ஸி பண்ண வேண்டும் என்றான் முருகன் கூலாக.
7. இந்த நாத்தம் பிடிச்ச ஊது பத்தியை யார் இங்கு வைச்சது என்றான் முருகன் காட்டமாக.
8. என்னமோ குடிக்கக் கொடுத்தான்; வயிற்று வலி தாங்க முடியிலை என்றான் முருகன் கடுப்பாக.
9. நாமே தோய்க்கறதை விட, வண்ணானுக்குப் போட்டால் துணிகள் நன்றாக வெளுக்குமே என்றான் முருகன் பளிச்சென்று.
10. உனக்கு எத்தனை சல்லடைதான் வாங்கித் தருவது என்றான் முருகன் சலிப்பாக.
Saturday, August 20, 2005
என்றான் முருகன்
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
ஓடும் நதியில் தவறி விழுந்தப் பெண்ணைக் காப்பாற்றியதற்காகத் தன்னைப் பாராட்டி பரிசு வழங்கிய கூட்டத்தில் "அதெல்லாம் இருக்கட்டும், என்னை நதியில் பிடித்துத் தள்ளி விட்டது யார் என்பது எனக்கு முதலில் தெரிந்தாக வேண்டும்" என்றான் முருகன் ஆவேசத்துடன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
excellent so informative and witty
ஆகா ஆகா - அத்தனையும் நகைச்சுவையுடன் கூடிய வரிகள். ஒவ்வொன்றின் இறுதிச் சொல்லும் தெர்ந்தெடுத்துப் போடப்ப்ட்ட சொல் . அழகாகப் பொருந்திய சொல்.
நல்வாழ்த்துகள் சிமுலேஷன்
நட்புடன் சீனா
சீனா,
முடிந்தால் ஓரிரு வரிகளை நீங்களும் முயற்சி செய்யுங்களேன்.
- சிமுலேஷன்
Post a Comment