முன்னொரு காலத்தில் விருப்பப்பட்ட திரைப்படங்களை மட்டும் தியேட்டரில் சென்று பார்ப்போம். ஆனால் தற்போது விரும்பியோ விரும்பாமலோ டிவி மூலம், திரைப்படங்கள்
வரவேற்பு அறைக்கு வந்து விடுகின்றது. சில பல வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி இது.
மும்பாயிலுள்ள எனது மாமா மாமிக்கு, கிரிஷ் என்று நாலு வயதில் பையன். மாமா மாமி டிவியில் சினிமா பார்க்கும்போது, கிரிஷ¤ம் கூட இருப்பான். படத்தில் கொஞ்சம் ஏடாகூடமாக சீன் வரும்போது, மாமி, பையனிடம், கிரிஷ் வா, சின்ன பாத்ரூம் போயிட்டு வந்துடலாம், என்று நைஸாக அவனை டிவி இருக்கும் இடத்திலிருந்து அப்புற்றப் படுத்துவது வழக்கம்.
ஒரு முறை டிவியில் சினிமா பார்த்துக் கொன்டி¢ருக்கும்போது, மாமியின் கஸின் வந்து விட்டாள். வெகு நாட்கள் கழித்து இருவரும் சந்திப்பதால் பேசிக்கொண்டேயிருந்தனர். டிவி? அது பாட்டுக்கு ஓடிக் கொண்டேயிருந்தது. கிரிஷ் பயல் மட்டும் சினிமா பார்த்துக் கொண்டிருக்கிறான். ஹீரோவும் ஹீரோயினும் நெருங்கி வரத் துடங்கினர். கிரிஷ் உடனே அம்மாவிடம் டிவியைக் காட்டி, "அம்மா, அம்மா, நான் வேண்டுமென்றால் சின்ன பாத்ரூம் போயிட்டு வந்து விடட்டுமா?" என்றான்.
Saturday, August 20, 2005
Embarrassment
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
தாவணிக் கனவுகள் படத்தில் பாக்கியராஜ் தன் தங்கைகளை சினிமா பார்க்க அழைத்து சென்று, பலான சீன்கள் வரும்போது சில்லறைகளை கீழே போட்டு அவர்களைத் தேடச் சொல்வது ஞாபகத்துக்கு வருகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வருக சிமுலேஷன் அவர்களே,
நீங்கள் செய்ய வேண்டியது இன்னும் ஒன்று பாக்கியிருக்கிறது. அதாவது தமிழ்மணத்தின் நட்சத்திர வோட்டிங்கையும் செயல்படுத்த வேண்டும். அதற்கான மீயுரையை உங்கள் டெம்ப்ளேட்டில் சேர்க்கவும். அப்போதுதான் உங்கள் பதிவுக்கு யார் பின்னூட்டமிட்டாலும் அது இற்றைப்படுத்தப்படும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment