புரிந்து கொள்வது என்பது வேறு. இரசிப்பது என்பது வேறு. புரிந்து கொண்டால் மேலும் இரசிக்க முடியும் என்பதும் உண்மை.
"கர்னாடக இசை எனக்குப் புரியவே மாட்டேன் என்கிறது. ஏன் பாமரனை அடையும் படியாக பாட யாரும் பாட முயற்சி செய்ய மாட்டேன் என்கிறார்கள்" என்று பலரும் அடிக்கடி கூறுகிறார்கள்.
எதற்காக இந்த உயர்ந்த கலை மட்டும் பாமரனைச் சென்றடைய வேண்டும், அந்தப் பாமரன் தனது அறிவையும், இரசனைத்தன்மையயும் உயர்த்திக் கொள்ள மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும் பட்சத்தில்.
னேர் நேர் தேமா; நிரை நேர் புளிமா; நேர் நிரை கூவிளம்; நிரை நி¨ரி கரு விளம் என்றெல்லாம் அலகிட்டு வாய்பாடு கூறி, குறட்பாக்களையும், வெண்பாக்களயும் இரசித்துக் கொண்டிருக்கும் புலவர்கள் கூட்டத்திலும், அவர்தம் பாக்களை இரசிக்கும் மக்களிடமும் சென்று, யாராவது, "தலிவா; "செல் அடிச்சா ரிங்கு; சிவாஜி அடிச்சா சங்கு'ன்னு புரியராமாறி சொல்லு; நேர் நேர் தேமா அப்படீ இப்படீன்ன்னு சொல்லிக் கிட்டேயிருந்தா, இந்த எலக்கியமெல்லம் அழிஞ்சிடும்" என்று சொன்னால் அவர்கள் என்ன சொல்லுவார்கள்.
மௌனியிடமோ, சு.ராவிடமோ, ஆதவனிடமோ சென்று, நீங்கள் எழுதுவது எனக்கு ஒன்றும் புரியவில்லை. பாமரனைச் சென்று அடையுமாறு, ராஜேஷ் குமார் போலவோ, பட்டுக் கோட்டை பிரபாகர் (no offence meant; they are for a diffrent audience) போலவோ ஏன் எழுத மாட்டேன் என்கிறீர்கள் என்று சொன்னால் அவர்கள் என்ன சொல்லக்கூடும்.
பரதத்திலும் கூடப் புதுமையாக என்று செய்தாலும், ஒரு சில கருத்துக்கள்தானே செய்ய முடியும். என்னுடையது மிகவும் புதுமையானது மற்றும் இளஞர்களுக்கானது என்று கூறி, ISO 9000, CMM LEVEL-5, BIO-DIESEL என்ற தலைப்புகளில் ஆட ஆரம்பித்தால் எப்படி இருக்கும்?
மாற்றங்கள் தேவைதான்; ஆனால் ஒரு எல்லைக் கோட்டுக்குள்ளேயே ஆட்டத்தை மாற்றி விளையாட முடியும். இவ்வாறும் புதுமைகள் செய்தவர்கள் பலர் உண்டு. உதாரணாம் வருமாறு:-
டி.வி.கோபாலகிருஷ்ணன அவர்கள் ஒரே கச்சேரியில் முதல் பாதியில் கர்னாடிக் கச்சேரியும், இடை வேளைக்குப் பிறகு ஹிந்துஸ்தானியும் செய்வார். இதில் இன்னுமோர் விஷெசமென்றால், முதல் பாதியில் சட்டை, வேஷ்டியுடன் வரும் அவர் அடுத்த பாதியில், பைஜாமா குர்தாவுடன் வருவார்.
சமீபத்தில் ஒரு வீணைக்கலஞர் சொன்னார். "புதுமையாக ஏதாவது பண்ணுங்கள்; புதுமையாக ஏதாவது பண்ணுங்கள்" என்று நச்செரிக்கிறார்கள். "வீணையைத் தலை கீழாக வேண்டுமென்றால் பிடித்துக் கொண்டு வாசிக்கலாமோ என்னவோ" என்றார். அவர் ஏற்கெனவே வீணையில் திரைப் பாடல்கள் வாசித்து வருபவர்தான். அதற்காக, கர்னாடக இசையில் அதை எதிர்பார்க்க முடியுமா? உன்னி, பாம்பே ஜெயஸ்ரீ, ஜேஸ¤தாஸ் போன்றோர் சினிமாவில் பாடுபவர்கள்தான். அதற்காக, கர்னாடக இசையில் சினிமாப் பாடலை எதிர்பார்க்க முடியுமா?
எனக்கு ஒரு கலை புரிவதில்லை என்று சொல்லுவது கலையின் குற்றமா? கலஞனின் குற்றமா? இரசிகனின் குற்றமா? "எனக்குப் புரியவில்லை; ஆகவே விடுகின்றேன் சாபம் ; உங்கள் கலை அழிந்து விடும்" என்பது னியாமா?
-சிமுலேஷன்
Sunday, December 25, 2005
பாமரனுக்கும் இசை சேர வேண்டுமா?
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
உங்கள் மையக் கருத்தோடு உடன்படுகிறேன். Theory of Relativity புரியவேண்டுமென்றால் அதற்குத் தேவையான அடிப்படை அறிவைக் கற்றிருந்தால்தான் அது சாத்தியப்படும். அது போலவே, கர்நாடக இசையை ரசிப்பதற்கும் அதற்குத் தேவையான அடிப்படைகள் புரிந்திருப்பது அவசியம் என்ற முன்நிபந்தனையை ஏற்றுக் கொள்ள முடிகிறது.
ஆனால் நீங்கள் புதுமைக்கு உதாரணமாக, ஒருவர் பாரம்பரிய முறையில் கர்நாடக இசையில் பாடிவிட்டு, பிறகு (ஜிப்பாவுக்கு மாறிக்கொண்டு) பாரம்பரிய முறையில் ஹிந்துஸ்தானி இசையைப் பாடியதை உதாரணமாக அளித்தது ஏமாற்றத்தை அளிக்கிறது. உண்மையிலேயே இதை விட குறிப்பிடும்படியான புதுமைகள் நிகழ்ந்ததில்லையா, அல்லது இதற்கு மேல் போனால் தாங்காதா? எனக்குத் தெரிந்து நம் இசையின் பரிணாம வளர்ச்சியென்று கருதக்கூடிய பல முயற்சிகள் (உ-ம், சக்தி, திரிலோக் குர்த்து போன்றவை) எவ்வளவு தூரம் நம் traditional music establishmentஇன் ஆதரவையும் அங்கீகாரத்தையும் பெற்றன என்பது கேள்விக்கிடமானது.
"ISO 9000 பற்றி பாடவா? வீணையைத் தலைகீழாக வைத்துக்கொண்டு வாசிக்கவா?" என்ற குதர்க்கங்களை என்னால் பழைமையைப் பாதுகாக்கும் முயற்சிகளாவே பார்க்க முடிகிறது. மாற்றங்களை வரவேற்கும் மனப்பான்மை அதில் தென்படவில்லை.
மொழியென்பதையும் சங்கீதத்தின் நுட்பத்தையும் சற்றே பிரித்து
வைத்துக்கொண்டால், நண்பர்கள் பிறர் சொல்லும் கருத்துக்களை
புரிந்துகொள்ளமுடியும் என நினைக்கிறேன்.
தமிழில் பாடுவது என்பது வளர்ந்திருக்கிறது. நித்யஸ்ரீ,சொளம்யா,பாம்பே
ஜெயஸ்ரீ ( அட நம்ம ஜெயஸ்ரீ இல்லைங்க),சுதாரகுநாதன் ,சஞ்சய் போன்றோரின்
சமீபத்திய கச்சேரிகளைக்கேட்டால் தெரியும். பாரதி பாடல்கள்,
பாபநாசம் சிவன் இயற்றியவை என பலவும் வருகின்றன.
மதுரை சோமு அவர்கள்,மஹாராஜபுரம் சந்தானம் அவர்கள் போன்றோர் பாடாத
தமிழ்ப்பண்களா?
நல்ல பாடல்கள் பாடப்பட்டு வருவதை ஆதரிப்போம். எந்த சங்கீத
வித்துவானும், தமிழ்ப்பாட்டு பாடமாட்டேன் என்றோ, அதில் பாட முடியாது
என்றோ சொல்லவில்லையே? கச்சேரியில் எதைக் கேட்கப்போகிறோம்
என்பதை ரசிகர் முதலில் தீர்மானிக்கட்டும். மொழியே பிரதானம் என்றால்
அவர் பல நிகழ்ச்சிகளுக்கும் போக வேண்டியிருக்கும். அதற்கு அவர் தயாராக
இருக்கவேண்டும். ஏனெனில், கச்சேரியில் சங்கீதமும் பிரதானம்.
'சங்கீதத்தில் என்ன எதிர்பார்க்கிறோம்?' என்பது முக்கியம். 'மொழி
புரிவதால் கவித்துவம் உணரப்படுமா? அல்லது சங்கீதத்தின் நுட்பத்தின் ஈர்ப்பு
கேட்பவனை இழுக்கிறதா?' என்றெல்லாம் பார்க்காமல் 'ரசியுங்கள்' என
விடுவதுதான் மேல். பாடுபவர் சங்கீத வித்துவானாக இருக்கமுடியுமே தவிர
மொழியாண்மை கொண்டு இருப்பதற்கு சாத்தியமில்லை. "பீமசேன மகராசா,
மரத்தைப் புடுங்கினானே" என்பதை பாட்டுக்காக பிய்த்துப் பிய்த்துப்பாடினால்
மொழிதெரிந்து மட்டும் கேட்பவன் அடிக்க வருவான். அவனுக்கு சங்கீதத்தின்
நுட்பம் பெரிதாகத் தெரியாது. உதாரணத்துக்குச் சொன்னேன்.
புதுமை என்பது யார் கேட்கிறார்களென்பதும் முக்கியம். சங்கீதம் தெரிந்தவர்
புதிதாய் எதாவது செய்யுங்களேன் எனக் கேட்டதோடு, என்ன புதுமை
வேண்டுமெனவும் சொன்னால், அதில் மேன்மைப்படுத்த கேட்கிறார் எனக்
கொள்ளலாம். அதைவிட்டுவிட்டு, சும்மா நானும் புரட்சியாக எதோ
கேட்கிறேன் எனச் சொன்னால், அதற்கு எத்தனை மரியாதை தரவேண்டுமோ
அத்தனையே தரவேண்டும். இதில் வருத்தப்படவேண்டிய அவசியமில்லை.
சங்கீதம் ,நாட்டியம் "ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர்" பழகியபின், அது
நாகரீகமானப் புழங்கிய ஆதிகாலத்தில், நாட்டிய மேதை பாலசரஸ்வதியிடம்
"இவர்கள் நாட்டியத்தை எடுத்துக்கொண்டுவிட்டனரே" என யாரோ ஒரு முறை
கேட்டார்களாம். அதற்கு அவர், " அவர்கள் எம் தொழிலைத்தான்
எடுத்திருக்கிறார்கள். கலையையல்ல" என்றாராம் சிரித்தபடி. சமூகத்தில்
கலையுணர்வு மேலும் சிதைக்கப்பட்டு,வெறும் பாண்டித்யமாக ஆக்கப்படுவதை உணர்ந்து
சொன்ன வார்த்தையிது. மொழியோ, சங்கீத நுட்பமோ கேட்கக் கேட்கத்தான்
வளரும். வளர்த்துக்கொள்பவர்கள் மற்றது குறித்து பெரிதாக
அலட்டிக்கொள்ளமாட்டார்கள். இது என் யூகம். தவறாக இருக்கலாம்.
சங்கீத அறிவு, அதன் வேட்கைக்குத் தக்கபடி வளரும். நான் அறிந்தவரை,
நல்ல குரல் வளம் என்பதைவிட, நல்ல சாகித்யம், உழைப்பு இவையே கர்நாடக
இசைக்கு முக்கியம். குரல்வளம் என்பதற்கு ஹிந்துஸ்தானி இசை முக்கிய்த்துவம்
கொடுக்கிறது.
எனவே, பலரும் சங்கீதத்தின் நுட்பங்களை எளிதாகப் புரிந்துகொள்ளச்
செய்துவிட்டு, இசையைக் கேட்டு ரசிக்கச் செய்வது நலம். "இறங்கிவருவது" "
ரசனையில் ஏறிப்போவது" எல்லாம் என்னைப்பொறுத்தவரை இயலாத ஒன்று. இசை
அதன் இடத்தில் இருக்கட்டும். கேட்பவர் அதனைக் குறித்து அறியட்டும். ரசிக்க
முயலட்டும். வேண்டியது பாலம் மட்டுமே.
அடடே, பதிவாவும் போட்டுட்டீங்களா? சரி, ராம் இட்ட பதிவில் உங்களுக்கு நான் இட்ட பின்னூட்டத்தை இங்கேயும் போட்டு விடுகிறேன்.
******************
புரிந்து கொண்டால் மேலும் ரசிக்க முடியும் என்பது உண்மை என்றால் முதலில் இருந்த ரசனையும் புரிதலுக்குப் பின்னால் வரும் ரசனையும் வேறுவேறு தானே?
புரியாமலே 'ரசிக்க' பாடலும் கேட்பவரும் மட்டும் போதும். புரிந்து கொள்ளுதலுக்குப் பின் 'மேலும் ரசிப்பது' அப்ரிசியேஷன், இல்லையா? எனவே அப்படிப்பட்ட ரசனை பாடல் மற்றும் பாடலைக் கேட்பவர் மட்டுமில்லாமல், பாடல் அமைப்பையும் பாடுபவரையும் சார்ந்தது.
ஒரு வேளை இந்த 'மேலும் ரசிக்கும்' தன்மை கிடைக்க இசை கற்றுக்கொண்டுதான் ஆகவேண்டுமா? ஹைப்பர்லிங்கை click பண்ணி இணையத்தில் உலாவ anchor tag பற்றி தெரிந்திருக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை. திரை இசைப் பாடல்களை ரசிக்கவும் இசை பற்றி தெரிந்திருக்க அவசியம் இல்லை. எனில், கர்நாடக இசையை ரசிக்க என்ன தெரிந்திருக்க வேண்டும்?
புலவர்கள் கூட்டத்தில் புளிமா, உப்புமா என்றேல்லாம் ஆராய்ச்சி நடந்தால் யார் எதிர்க்கப்போகிறார்கள்? ஆனால் புலவர்கள் வாசகர்களுக்காக எழுதுவது புரியும்படி இருக்கவேண்டும் என்று கேட்டுப்பார்க்கலாம் இல்லையா? குறைந்தபட்சம் நேர்நேர் சிம்ரன், நிரைநேர் சரோஜா என்றாவது சொல்லித்தரச் சொல்லலாம் இல்லையா?
தமிழ், ஆங்கிலம், இசை எல்லாவற்றிலும் எனக்கு ஒரே அளவு அறிவுதான். ஆனால், கீழ்க்கண்ட வெண்பாவைப் படித்தவுடன் ரசிக்க எனக்கு எந்த அறிவுப் பற்றாக்குறையும் தடையாக இருக்கவில்லை:
மாசிலா மாணவன் மாணிக்க மொத்தோனை
ஏசி யிழித்த எருமையே - பேசியே
வென்றிட வெண்ணாதே உன்தலையில் பௌதிகம்
என்றென்றும் ஏறாது காண்.
ஃப்சிக்ஸ் மாணவன் ஒருவன் தன் சகமாணவியைக் களாய்க்க எழுதிய வெண்பா என்ற தகவல் ஒன்றே போதுமானதாக இருந்தது.
அந்த வெண்பாவைப் படித்தவுடன் வெண்பாவைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆவல்(லாவது) ஏற்படுகிறதா இல்லையா?
'செல் அடிச்சா ரிங்கு' என்ற நிலைக்கு எல்லாம் இறங்கி வர வேண்டம்.
கைப்பேசி கத்தினால் கேட்டிடும் ரிங்டோன்
சிவாஜி அடித்தாலோ சங்கு
என்று சொன்னாலே போதும், 'பாமரன்' புரிந்துகொள்ள.
எனக்கு ஒரு கலை புரிவதில்லை என்று சொல்வது கலையின் குற்றமோ கலைஞனின் குற்றமோ இல்லை. இரசிகனின் குற்றம்தான். தன் சகமனிதனுக்கு தான் ரசித்ததை விளக்கிச் சொல்லாத ரசிகனின் குற்றம். :-)
க்ருபா
//நேர்நேர் சிம்ரன், நிரைநேர் சரோஜா என்றாவது சொல்லித்தரச் சொல்லலாம்//
(க்)கிருபா, அருமையான விளக்கம்.
ஆனால் சரோஜாவைச் சொல்வதைவிட, நிரைநேருக்கு சினேகா, நமீதா, அபர்ணா என்று போட்டிருக்கலாம்.
Simulation
I agree with your view that having more knowledge of carnatic music will help us understand it better.Before 2 years, i was also in the pamaran list.Now,i'm trying to increase my knowledge of carnatic music by listening to as much songs as possible.Language is no problem for me.I look for translations in the net for trinity songs and that is enough for me.
என்காலத்தில் உயர்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு சேர்ந்ததும், யார் யார் பாட்டுக் கற்றுக்கொள்கிறார்கள் என்று ம்யூசிக் டீச்சர் கேட்பார். பாட்டுக் கிளாசுக்குப் போகும் ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டுமே கைதூக்க-- இவர்களில் விரும்பி அல்லது விரும்பாவிட்டாலும், புரிந்து அல்லது புரியாவிட்டாலும் வீட்டில் அனுப்புகிறார்களே என்று பயில்பவர்கள் எல்லாம் கலந்திருக்கும்-- அவர்கள் மட்டுமே இசைக்கென பிறந்தவர்களாகக் கொள்ளப்படும்.
Whomever who attented classes without self interest but for their parent's sake will NEVER come to the top(whatever samookam they belong to).Those who are currently at the top are people who have deep committment to the art(again,whatever samookam they belong to).Others will fall by the wayside.
இவர்களைவிட அருமையான குரல்வளமும், சொல்லிக் கொடுத்திருந்தால் பிரகாசித்திருக்கக் கூடியவர்களும் அவர்கள் திறமை அல்லது கர்நாடக இசை பற்றி அவர்களின் பெற்றோருக்கும் தெரியாமல், தாங்களாகவே புரிந்து விருத்திசெய்து கொள்ளாமல் திரைப் பாடல்களைப் பாடியே காணாமல் போனவர்கள் என்காலங்களில் அநேகம்.
Sad.The music teacher must have attempted to find such persons with talent and try to teach them music.
But, these days, music teachers in schools have only one target.To show that her students get prizes and present them to pricipal.So, the aim of music teachers is not to teach students music but get as many prizes to school as possible.so, naturally,they try to get students who take coaching elsewhere and try to get prizes through them.
மற்ற மொழிகளில் பாடுகிற இசை வல்லுநர்கள் தமிழிலும் பாடல்களைப் பாடட்டுமே, என்ன பிரச்சனை அல்லது கௌரவக் குறைச்சல்? தமிழ் நன்கு தெரிந்தவர்கள், வாய்ப்புக் கிடைத்தால் தமிழில் பாடி சிடி வெளியிடுபவர்களே கூட ஏன் தயங்கவேண்டும் என்றுதான் தெரியவில்லை.
Sigh! It is a big mistake to expect others to do what we want.Instead of expecting others to change, we can change the system by making our kids learn the art and ***excel*** in it.
All we have to do is to instill same committment to the art in our kids.Let us not waste our time by cribbing and whining that others are not changing according to our views.As Ramki ayya said,waiting has proved futile for 3 generations.
//நேர்நேர் சிம்ரன், நிரைநேர் சரோஜா என்றாவது சொல்லித்தரச் சொல்லலாம்//
(க்)கிருபா, அருமையான விளக்கம்.
ஆனால் சரோஜாவைச் சொல்வதைவிட, நிரைநேருக்கு சினேகா, நமீதா, அபர்ணா என்று போட்டிருக்கலாம்.
ஆஹா, ஆஹா, ஆஹா. அனாநிமஸ், நல்ல அப்-டு-டேட்டா இருக்கீங்க போல. ;-)
சினேகா நிரைநேருக்கு யோசித்திருக்கிறேன். அபர்ணா நினைவுக்கு வராததாவது பரவாயில்லை. நமீதாவை மறந்தேனே! யானே கள்வன்!
Featured post of the day from archive!
One of the problems for beginner rasikas (I have been in the elemenatary school of Carnatic music for the last 20 years!) is that even many of the Lec-Dems and Hindu reviews of the concerts are tailored to appeal to those who speak the high-brow language of gamaka, brigha etc and there is no 'wikepedia' definitions for these terms !...We need a forum for educating "pamarar" to make them better rasikas
Swminathan
"One of the problems for beginner rasikas (I have been in the elemenatary school of Carnatic music for the last 20 years!) is that even many of the Lec-Dems and Hindu reviews of the concerts are tailored to appeal to those who speak the high-brow language of gamaka, brigha etc and there is no 'wikepedia' definitions for these terms !...We need a forum for educating "pamarar" to make them better rasikas
Swminathan
Post a Comment