Thursday, August 31, 2006

சார் கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - தேன்கூடு போட்டி

"குட் மார்னிங் சார்""குட் மார்னிங்""எது வரைக்கும் சார் போறீங்க?""கிண்டி ஸ்டேஷன் வரைக்கும். என்ன விஷயம்?""சார் எனக்கு அலெக்சாண்டர் ஸ்கொயர் வரைக்கும் போகணும்""ஓ""அங்கே, இன்னிக்கி ஒரு இன்டெர்வியூ""ஒகே. ஆல் த பெஸ்ட்""சார்...""என்ன?..""கொஞ்சம் லிப்ட் கொடுக்க முடியுமா?. நானே நடந்து போகலாமுன்னுதான் பார்த்தேன். நேத்திக்கி கால்ல ஒரு சுளுக்கு ஆகி விட்டது. டாக்டர் ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்துக்கச் சொல்றாரு. ஆனா, இன்னிக்கின்னு பாத்து இந்த இன்டெர்வியூ. இது எனக்கு முக்கியமான இன்டெர்வியூ சார். ப்ளீஸ் லிப்ட் கொடுங்க சார்."!!! ??? @@@ ####""அட்லீஸ்ட், இந்த ரோடு எண்ட்...

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 03 - கீரவாணி

தமிழ்த் திரையிசையிலே அதிகம் பயன்படுத்தப்பட்ட இராகங்களில் கீரவாணியும் ஒன்று. கீரவாணி, திரைப்படத் இசையமைப்பாளர்கள் மட்டுமின்றி, எந்த ஒரு இசைக் கலைஞருக்கும் பிடித்த இராகமாகும். இதனை மேல் நாட்டு இசையிலே, "ஹார்மோனிக் மைனர் ஸ்கேல்" (Hamonic Minor Scale) என்று கூறுவார்கள். சிம்மேந்திர மத்தியம் என்ற இராகத்திற்கும், கீரவாணிக்கும், மத்தியமம் மட்டுமே வித்தியாசமாகும். கீரவாணியில் சுத்த மத்தியமும் (ம1), சிம்மேந்திர மத்திய இராகத்திற்கு பிரதி மத்யமும் (ம2) வரும். தமிழ்த் தியாகைய்யர் எனப்படும், பாபநாசம் சிவன் அவர்களின், "தேவி நீயே துணை" என்ற பிரபலமான கீர்த்தனை,...

Wednesday, August 30, 2006

சென்னை குவிஸ்

27.08.2006 ஞாயிறன்று மதியம், மயிலையில், "சென்னை தின விழா" கொண்டாட்டங்களின் நிறைவுப் பகுதியாக, "சென்னை குவிஸ்" ஒன்று பி.எஸ். மேல்நிலைப் பள்ளையில் நடைபெற்றது. இரண்டு பேர் கொண்ட குழு மட்டுமே கலந்து கொள்ள முடியும். தனியாகச் சென்ற நான், சுரேஷ் என்பரிடம், 'ஆன் த ஸ்பாட்' அறிமுகம் செய்து கொண்டு, குழுவாக கலந்து கொண்டேன். நடுநிலைப் பள்ளி மாணவர்களில் ஆரம்பித்து, சீனியர் சிட்டிசன்கள் வரை கலந்துகொண்ட இந்தக் குவிஸ்ஸில், ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி, திரு.இராமமூர்த்தி (முன்னாள் தமிழ் கிரிக்கெட் வர்ணணையாளர்) அவர்களும் குடும்பத்துடன், கலந்து கொண்டார். குவிஸ்ஸை நடத்தியவர்...

Thursday, August 24, 2006

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 02 - கல்யாணி

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 02 - கல்யாணி கல்யாணி, திரைப்படத் இசையமைப்பாளர்களுக்கு ஒரு விருப்பமான (Favourite) இராகமாகும். குறிப்பாக இளையராஜா, கல்ய¡ணி என்றால், ஒரு கலக்கு கலக்கி விடுவார். இந்த ஒரே இராகத்தில், பல வித்தியாசமான பாடல்களைத் தந்துள்ளவர் அவர். 'வெள்ளைபுறா ஒன்று', 'ஜனனீ, ஜனனீ', 'அம்மா என்றழைக்காத உயிரில்லையே', 'நிற்பதுவே நடப்பதுவே', 'காற்றில் வரும் கீதமே', என்று தொடரும் இந்த வித்தியாசமான பாடற் பட்டியலைப் பார்த்தால், கண்டிப்பாக நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள். பாடற் பட்டியலுக்குப் பே¡கு முன்பு சின்ன விளக்கங்கள். இராகம்: கல்யாணி65ஆவது...

Saturday, August 19, 2006

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 01 - கானடா

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 01 - கானடா நம்மில் பலருக்கும், நினைவில் இருக்கும் பல திரைப்படப் பாடல்களையும் கூர்ந்து கவனித்தால், அவை பெரும்பாலும், மனதிற்கு இனிமையான ஒரு கர்னாடக இராகங்களில் அமைந்திருப்பதனைக் கவனிக்கலாம். இப்படி இராகங்களின் அடிப்படையில் அமைந்த பாடல்களை ஒப்பு நோக்கும் முயற்சியாக, "தமிழ்த் திரையிசையில் இராகங்கள்" என்ற தலைப்பிலே, ஒரு தொடர் எழுத எண்ணியுள்ளேன். இராகங்களைப் பற்றிய புரிதல், எந்தவொரு இசையினையும் மேலும் இரசிக்கத் தூண்டுமென்பதே, இதன் நோக்கம். இராகம்: கானடா இது கரஹரப்ரியா என்ற மேளகர்த்தா (72 தாய் இராகங்களில் ஒன்று) இராகத்தின்...

தமிழ்த் திரைப்படங்களின் தலைப்பிலே உறவுகள்

எதற்கெடுத்தாலும், திரைப்படங்களை உதாரணம் காட்டுவதே நம் மக்களுக்கு வேலையாகி விட்டது. சரி. சரி. தமிழ்த் திரைப் படங்களின் தலைப்புகளில் வந்துள்ள உறவுகளைப் பார்ப்போம்.01. அன்னை02. அன்னை ஒர் ஆலயம்03. அன்னையின் ஆணை04. தாய்05. தெய்வத் தாய்06. தாயா தாரமா?07. தாயின் மடியில்08. தாய்க்குத் தலைமகன்09. தாய்க்குப் பின் தாரம்10. தாயைக் காத்த தனயன்11. தாய் மகளுக்குக் கட்டிய தாலி12. ஒரு தாய் மக்கள்13. சின்னத் தாயி14. மக்களைப் பெற்ற மகராசி15. என்னைப் பெத்த ராசா16. அன்புள்ள அப்பா17. உத்தம புத்திரன்18. அன்புச் சகோதரர்கள்19. அபூர்வ சகோதரர்கள்20. இரு சகோதரர்கள்21. கோவை...

Thursday, August 17, 2006

உறவுகள் நூறு - தேன்கூடு - உறவுகள் - போட்டி

உறவுகள் நூறு-------------------"உறவுகள் ஃபார் டம்மீஸ்" என்ற தலைப்புதான் முதலில் கொடுக்கலாம் என்று நினைத்தேன். நமது இந்தியக் குடும்பங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட உறவு முறைகள் இருக்கலாம் என்று எண்ணி, இதனை எழுத ஆரம்பித்த பின், அது நூறையும் தாண்டியது என்பது வியப்பிலாழ்த்தியது. எனக்குத் தெரிந்தபடி, நம்மிடையே காணப்படும் உறவு முறைகள் வருமாறு:-1. அம்மா, 2. அன்னை, 3. தாய், 4. ஆத்தா - நம்மை இவ்வுலகிற்கு ஈன்றவள்5. அப்பா, 6. தந்தை, 7. தகப்பன், 8.வாப்பா - நம்மை இவ்வுலகிற்கு ஈன்றவன்9. சகோதரி - தாயின் உதரத்தில் கூடப் பிறந்தவள்10. அக்கா, 11. தமக்கை - மூத்த சகோதரி12....

Friday, August 11, 2006

கிளைகளற்ற மரங்கள் - தேன் கூடு - உறவுகள் - கவிதைப் போட்டி

"அடுத்த வீட்டு ஆத்ரேயா,அத்தை, மாமாவுடன் அலைந்தானாம்;சின்னக் குட்டி ஷில்பாவோ,சித்தி, சித்தப்பாவுடன் சென்றாளாம்.எனக்கென்று அப்படியாருண்டு இன்றிங்கு?" என்று கேட்டபேரப் பிள்ளையிடம்,பேச்சை மாற்றும் வழி மறந்து,பேதலித்து நின்றாள்,முப்பது வருட முன்பாகமுதல் குழந்தையுடன் போதுமெனமுடிவெடுத்தமுத்துப் பாட்டி.- சிமுலே...

Sunday, August 06, 2006

பூனைக்குட்டிகள் - தேன்கூடு - உறவுகள் - சிறுகதை போட்டி

பூனைக்குட்டிகள் - தேன்கூடு - உறவுகள் - சிறுகதைப் போட்டி --------------------------------------------------------------------------------------------- அப்பா மத்தியானம் சாப்பிட்ட பின், ஈஸிசேரில் சிறிது நேரம் தலையைச் சாய்ப்பது வழக்கம். கால் மீது கால் போட்டுக் கொண்டு தூங்கும் அப்பாவின் கால் கட்டைவிரல் நகத்தில் வந்து உடம்பை வைத்து தேய்த்துக் கொண்டிருக்கும் அந்தப் பூனை. இது ஒரு நாள், இரண்டு நாளாக நடப்பதில்லை. கிட்டத்தட்ட இரண்டு வாரமாக நடந்தது கொண்டிருக்கிறது....