Sunday, September 24, 2006

புகைப்படப் புதிர்-03

01. ஸத்குரு தியாகராஜ ஸ்வாமிகள் தனது பாடல்களில், இரண்டு ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார். அவை என்னென்ன? (லல்லுவின் சினனமொன்று உண்டிங்கு) 02. இந்தக் கலைஞர் யார்? இவரது சகோதரரும் ஒரு புகழ் பெற்ற பல்கலை வித்த்கர்? இவர் பெயர் தெரியாதென்றால், இவர் சகோதரர் பெயராவது என்ன?(இசைக் கலைஞனுக்கு ஏனோ திரையில் பாடல்கள் என்றால் அலர்ஜி) 03. இந்தப் புகழ் பெற்ற பாடகர் யார்? கச்சேரிகள் பல செய்திருந்தாலும், திரைப்படத்தின் மூலமே பெரிதும் புகழ் பெற்றார்? (மதுரை முதல்...

Saturday, September 23, 2006

புகைப்படப் புதிர்-02

அடுத்த புகைப்படப் புதிருக்குத் த்யாராக இருப்பீர்களென்று நினைக்கின்றேன்.01. ஒரு பிரபலத்தை மணந்த இந்தப் பிரபலம் யார்?02. கருப்புக் கண்ணாடி சகிதம் கலக்கும் இவர் யார்?03. எம்.கே.தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் இருவருக்கும் இடையில் நிற்பவர் யார்? அவ்ருக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு?04.இந்த இரண்டு பிரபல்ங்களுக்ளிடையே இருந்த உறவு முறை என்ன?05. ஆல்த்தூர் சகோதரர்கள் என்றழைக்கப்பட்ட இவர்களின் பெயர் தெரியுமா? பெயர் தெரியாதென்றால் இவர்களில் அண்ணா யார்?...

Friday, September 22, 2006

புகைப்படப் புதிர்-01

இந்தப் புகைப்படங்களைப் பார்த்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா என்று பாருங்கள்.01. இந்தப் பிரபலங்கள் யார் யார்?02. யாருடைய சிலை இது? எங்குள்ளது?03. இவர் யார்? என்ன செய்துகொண்டிருக்கின்றார் 04. இந்த நாதசுரக் கலைஞர் யார்? 05. பசுப் பையன் போலத் தோற்றமளிக்கும் இந்தக் கலைஞர் யா...

Sunday, September 17, 2006

போண்டா வடை போயாச்சு

நேற்றைய தினம் பூர்ணம் விசுவநாதன் நாடகக் குழுவில் பணியாற்றும், மெலட்டூர் நடராஜன் என்ற நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது, மயிலையில் படைப்பாளிகளின் ஒர் சந்திப்புக்குச் செல்வதாகக் கூறியவர், என்னையும் வரச் சொன்னார். அப்புசாமி, சீதப்பாட்டி புகழ் பாக்கியம் ராமஸ்வாமி அவர்கள் மயிலையில் உள்ள தனது அலுவலகத்தில் ஒவ்வொரு மாத்ம் மூன்றாம் சனிக்கிழமையன்று ஒத்த கருத்துடைய படைப்பாளிகளின் கூட்டத்துக்கு ஏர்பாடு செய்து வருகின்றார்.இந்தக் கூட்டத்தில் கிழக்குப் பதிப்பக பத்ரி த்ங்களது அப்புசாமி படைப்புகளை பற்றிப் பேசினார். இந்தச் சந்திப்பில் மற்ற பிரபலங்கள் சிலரையும் நான்...

Friday, September 15, 2006

ராக அறிவிப்பு: சிந்தனையும் சிரிப்புவெடிகளும்

இசைக் கச்சேரியில் எல்லாத் தகவலும் தருவது எப்படி? ஒரு யோசனை. சிந்தனை-- சிமுலேஷன் சில சபாக்களில், இசைக் கச்சேரிகளில் பாடப்படுவது என்ன பாடல் என்றும், யாரது பாடல் என்றும், முக்கியமாக என்ன ராகம் என்றும் 'பிட்" நோட்டீஸ் போட்டு எல்லாத் தகவல்களையும் தந்துவிடுகிறார்கள். சில பாடகர்களும், இந்தக் காலத்தில் தாம் பாடும் பாடல் பற்றிய விபரங்கள மைக்கில் அறிவிக்கிறார்கள். இந்த மாதிரி செய்வது பெரும்பாலான இரசிகர்களுக்ககுப் பிடித்திருக்கிறது. ஆனால், சில பாடகர்கள் இவ்வாறு அறிவிப்பு செய்வது, பாடல் பாடி வரும் ஓட்டத்திற்குத் (flow) தடையாக இருக்கும் என்று கருத்துத் தெரிவித்திருந்தார்கள்....

Sunday, September 10, 2006

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 04 - மோகனம்

இந்தியாவிற்கு மட்டும் உரித்தானதல்லாமல், ஜப்பான், சீனா போன்ற கீழை நாடுகளிலும், ஸ்வீடன் போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் 'மோகனம்' எனப்புடும் இராகம் பிரபலமானது. வளைகுடா நாடுகளிலும், இந்த இராகத்தைக் கேட்டிருக்கலாம். பாரம்பரிய முறையில், தாளமின்றி விருந்தாமாகப் பாடப்படும் திருவாசகத்திலும் மோகனம் பெரும்பங்கு வகிக்கின்றது. வட இந்தியாவில், மோகனம் 'பூப்' என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது. எனவேதான், மோகனம் பாடுவதில் வல்லவரான, மகாராஜபுரம் விஸ்வநாதய்யர், 'சங்கீத பூபதி' என்றழைக்கப்பட்டார். மோகன இராகம், ஹரிகாம்போதி என்ற மேளகர்த்தா (தாய்) இராகத்தின் ஜன்ய (சேய்) இராகமாகும்....

Thursday, September 07, 2006

புத்திசாலிப் பன்றிகளும்...பராமரிப்புப் பணிகளும்...

உங்களில் எத்தனை பேருக்கு இந்தப் பதிவு பிடிக்குமோ அல்லது புரியுமோ தெரியாது. விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேன் பேர்வழி என்ற பெயரில் கட்டுரை எழுத வேண்டுமென்ற அல்ப ஆசை ஏற்படுவது அனவருக்கும் இயற்கையே. அந்த வகையில் இதுவும் ஒரு பதிவுதான்.எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளின் முதலீட்டில் சுமார் 40-45% பங்கு, அங்குள்ள பைப்லைன் எனப்படும் குழாய்களிலேயெ செலவழிக்கப்படுகின்றது. இந்தக் குழாய்கள் அரை அங்குல விட்டத்திலிருந்து, ஐம்பது அங்குல விட்டம் (diameter) வரை இருக்கும். இவை திரவ மற்றும் வாயு நிலையிலுள்ள பெட்ரோலியப் பொருட்களை, ஆலையின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு...

Friday, September 01, 2006

சென்னையில் வலைப்பதிவர்கள் சந்திப்பு

மதுமிதா அவர்களின் புத்தகத்திற்கு ஒரு வலைபதிவர் என்ற முறையில் சுய அறிமுகம் செய்துகொண்ட போது "வலைப்பதிவர் சந்த்திப்புகள் மூலம் நண்பர்கள் சிலர், பலராகக் கூடும்" என்று எழுதியிருந்தேன். ஏற்கெனவே போண்டா புகழ் உட்லேண்ட்ஸ் சந்திப்புகளின் மூலம் டோண்டு ராகவன், ஜயராமன், டி.பி.ஆர்.ஜோசப், சிவஞானம்ஜி, மரபூர் சந்திரசேகரன், ஜி.ராகவன், மா.சிவகுமார், கிருஷ்ணா, ரவிச்சந்திரன், மதன், ஜயகமல், சரவணன் ஆகியோருடன் அறிமுகம் கிடைத்துள்ளது. நேற்றைய தினம், மயிலை நாகேஸ்வரராவ் பூங்காவில் மசால் வடையுடன் மற்றைய வலைப்பதிவர்களின் அறிமுகம் கிடைத்தது. அனைவருடனும், நேரம் செலவழிக்க முடியாவிடினும்,...