1. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்காட்லாண்டைச் சேர்ந்த இருவர், துவக்கி இன்றும் சென்னையில் வெற்றிகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற நிறுவனம் எது? (காலத்தை வென்று செயல்படுவதும் சாதனையல்லவா?)
2. 1914ல் மேக்ஸ் வான் லா மற்றும் ஜேம்ஸ் ப்ஃராங்க் என்ற இரு விஞ்ஞானிகள் எக்ஸ் கதிர்கள் குறித்த அவர்களது ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றார்கள். தங்க மெடல் பெற்ற இருவருக்கும் சில வருடங்கள் கழித்து, நோபல் சொசைட்டி தங்கப் பதக்கங்களை மீண்டும் வழங்கியது ஏன்? (கரையாத மனமும் உண்டோ?)
3. 1980ஆம் ஆண்டு கனடா நாட்டில் நடைபெற்ற 'நேஷனல் ஹாக்கி லீக்' போட்டிகளின் போது தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. 2000ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் 110,000 கலந்துகொண்டு ஒரு புதிய சாதனை செய்தார்கள். அது என்ன? (அலை பாயுதே கண்ணா)
4. சென்னை ம்யூசிக் அகாடெமி வழங்கும் 'சங்கீதக் கலாநிதி' விருதினை 1946 மற்றும் 1967 ஆண்டுகளில், பெற்றவர்களிடையே உள்ள ஒற்றுமை என்ன? (ஹேப்பி பர்த் டே தியாகு)
5. ரே ஹாருன் என்னும் கார் பந்தய வீரர், 1911ஆம் ஆண்டு தனது காரில் ஒரு சிறிய மாற்றம் செய்த காரணத்தினால், பந்தயத்தில் முதலாவதாக வர முடிந்தது. அதன்பின் எல்லாக் கார்களிலும் ஏற்பட்ட அந்த மாற்றம்தான் என்ன? (1953ல் சிவாஜியுடன் பண்டரி பாய்)
- சிமுலேஷன்
Saturday, January 27, 2007
ஒடிசி குவிஸ் 2007 (2)
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
1. அபத்தமான பதிலாக இருந்தால் பொறுத்துக் கொ'ல்ல'வும். சென்னை காவல் துறை? (அதுக்கு வயசு 150ன்னு படிச்ச ஞாபகமுங்கோ)
5. கார்புரேட்டர் (corburettor (spelling?))
1 அபத்தமான பதில் என்றெல்லாம் சொல்லி, கேலி செய்ய மாட்டேன். ஆனால் தவறான் விடை.
5. இதுவும் தவறான விடையே.
1. P.Orr and Sons
2. பதில் தெரியலைங்க. ஆனா கூகிளாண்டவர் உபயம்
When Germany invaded Denmark in World War II, the Hungarian chemist George de Hevesy dissolved the gold Nobel Prizes of Max von Laue and James Franck into aqua regia to prevent the Nazis from stealing them. He placed the resulting solution on a shelf in his laboratory at the Niels Bohr Institute. After the war, he returned to find the solution undisturbed and precipitated the gold out of the acid. The Nobel Society then recast the Nobel Prizes using the original gold.
3. மெக்சிக்கன் வேவ்
4. அவ்விரண்டு வருடங்களில் இவ்விருது வழங்கப்படவேயில்லை. (தியாகுக்கு பிறந்தநாள் ஏப்ரல் 1ஆ!)
5. Rear View Mirror உபயோகித்த முதல் கார் பந்தய ஓட்டுநர். நன்றி கூகிளாண்டவர்.(அந்த சிவாஜி படம் என்னங்க? கண்ணாடியா?)
இலவசக் கொத்தனார்,
எல்லாக் கேள்விகளுக்கும் சரியான விடை கொடுத்துள்ளீர்கள். அவற்றைப் பின்னர் வெளியிடுகின்றேன்.
அதுக்கு நடுவிலே, சிவாஜி நடித்த படத்தையும் கண்டுபிடியுங்கள்.
'திரும்பிப் பார்'த்துட்டேங்க!
முதல் கேள்விக்கு பதில்
பி.ஆர். & சன்ஸ்
என்ன சரியா ?
மெலட்டூர்.இரா.நடராஜன்
Post a Comment