ஸ்வராக்ஷரம் என்பது கர்நாடக இசையின் ஒரு படிமம். ஸ்வராக்ஷரம் என்ற வார்த்தையினைக் கூர்ந்து கவனித்தால் அது ஸ்வரம், அக்ஷரம் என்ற இரு வார்த்தைகளின் கலவை என்பது புரியும்.
ஸ, ரி, க, ம, ப, த, நி என்ற ஏழு ஸ்வரங்கள் இருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இந்த ஏழு ஸ்வரங்களே இராகங்களுக்கு ஆதாரமாகும். அக்ஷரம் என்றால், பாடலில் பொதியப்பட்டுள்ள வார்த்தைகளாகும்.
ஸ்வரங்களைக் கொண்டே அக்ஷரங்களைச் செய்தால் அதுவே ஸ்வராக்ஷரமாகும். இது ஒரு விதமான வார்த்தை விளையாட்டாகும்.
திருவாரூர் ராமசாமிப் பிள்ளை என்பார் எழுதிய மோஹன இராகத்தில் அமையப் பெற்ற "ஜகதீஸ்வரி... கிருபை புரி"...