1) இந்த அம்மிணி யார்?2) இவர் ஏன் இப்படிப் பார்க்கின்றார்? இப்படிப் பார்ப்பதனை என்னவென்று சொல்லலாம்?
3) இவ்ன் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவன்?


விடைகளை உடனே பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். விடைகள் நாளை வெளியிடப்படும்.
- சிமுலேஷன்
A blog on my experiences with Carnatic Music, Quizzing, Book Review etc.
14 comments:
அந்த அம்மணி திருமதி லார்ட் மௌண்ட்பேட்டன்.
நேரு மாமா புகைப் பிடிக்கும் போது எடுத்த அரிய புகைப்படம்!
1. முதலில் லேடி மௌண்ட்பேட்டன் என்றுதான் தோன்றியது. அப்புறம்தான் கூகுளாண்டவர் Ms. Simon என்று சொன்னார். பிரிட்டிஷ் ஹை கமிஷனரின் மனைவி என்று தெரிகிறது.
2.
3. ராஜ் பட்டேல். ஆர்ச்சிஸ் காமிக்ஸில் வரும் பாத்திரம்.
5. பிறந்த நாள் அன்று கேமரா பார்த்து விநோதமான போஸ் கொடுக்க முயற்சிக்கின்றார் (அ) சிரிக்கின்றார் :-)
1. திருமதி மவுண்ட்பேட்டன்(ஒரு யூகம் தான்.
2. எதையோ பயந்து போய் பார்க்கிறார். போபியா
நானானி,
முதல் கேள்விக்கான உங்கள் விடை தவறு.
மீண்டும் முயற்சிக்கவும் மற்ற கேள்விக்கான விடைகளுக்கும்.
- சிமுலேஷன்
ஸ்ரீதர் நாராயணன்,
முதல் கேள்விக்கான உங்கள் விடை சரியே.
மூன்றாம் கேள்விக்கான விடையும் சரியே. மேலும் இவரது ஊர் போன்ற தவல்கள் தர முடியுமா?
ஐந்தாவுது கேள்விக்கான விடை முழுமையாக இல்லை. ஏன் அப்படி நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டுள்ளார்.
- சிமுலேஷன்
சின்ன அம்மிணி,
முதல் கேள்விக்கான உங்கள் விடை தவறு.
இரண்டாம் கேள்விக்கான உங்அள் விடை முழுமையாக இல்லை.
மீண்டும் முயற்சி செய்யுங்கள்
- சிமுலேஷன்
//மேலும் இவரது ஊர் போன்ற தவல்கள் தர முடியுமா?
//
ஆர்ச்சீஸ் காமிக்ஸ் படிச்சு நாளாச்சு. ராஜ் பட்டேல் ஒரு இந்திய வம்சாவளி அமெரிக்கர் என்ற வகையில் தெரியும். அமெரிக்க / ஆங்கிலேய எழுத்தாளர்களுக்கு இந்தியர் என்றாலே 'பட்டேல்' தானே :-)
ஹாரிபாட்டரிலும் 'பத்மா படேல் / பார்வதி படேல்' என்று இரண்டு பாத்திரங்கள். மூன்றாம் பாகத்தில் அறிமுகமான் இந்த பாத்திரங்கள் முதலில் ஒரு பாத்திரமாகத்தான் இருந்தது. பின்னர் பெயர் குழப்பத்தில் இரண்டு பாத்திரங்களாக மாறியது :-)
ஸ்ரீதர் நாராயணன், முன்றாம் கேள்விக்கான விளக்கம் சரியாகச் சொல்லிவிட்டீர்கள். பாராட்டுக்கள்.
- சிமுலேஷன்
1. Lady Mountbatten
2. Eye popping
3. Vasu/Malgudi?? If not, any clue?
4. :-(
5. Einstein showing his opinion on war.
6.?? CD Cover?
கெக்கே பிக்குணி,
உங்களின் முயற்சிக்குப் பாராட்டுக்கள். ஆனால் அனைத்து விடைகளுமே தவறு.
லேடி மவுண்ட்பேட்டன் என்று எல்லோரையும் போல எண்ணியுள்ளீர்கள்.
மூன்றாம் விடைக்கான க்ளூ - இவன் ஒரு குஜ்ஜூ.
ஐன்ஸ்டைன் கோபத்திதான் அப்படி நாக்கக் காட்டினார். ஆனால் அது எதற்காக?
மீண்டும் முயற்சி செய்யுங்களேன்.
- சிமுலேஷன்
//விடைகள் நாளை வெளியிடப்படும். //
எந்த 'நாளை'? :-)
ஸ்ரீதர்,
மன்னிக்கவும். விடைகளை இந்த வார இறுதியில் 24.05.2008 அன்று வெளியிடுகின்றேன்.
- சிமுலேஷன்
மன்னிக்கவும். 'விடைகள் மாத இறுதியில்', என்பதற்குப் பதிலாக, 'வார இறுதியில்' என்று எழுதிவிட்டேன் என்று நினைக்கிறேன்.
சரி. இப்போது சரியான விடைகள்:-
1. நேரு மாமா, சிகரெட் பற்றவைப்பது, அன்றைய இந்தியாவின் பிரிட்டிஷ் ஹை கமிஷனர், சைமன் அவர்களின் மனைவிக்கு. இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது ஒரு விமானத்திற்குள்.
2. போர்க்களத்தில் எதிர்பாராமல் விழும் குண்டினால் ஏற்பட்டுள்ள அதிர்ச்சிதான் இது. இதனை "ஷெல் ஷாக்" என்று கூறுவார்களாம்.
3. இவன் ஆர்ச்சீஸ் காமிக்ஸ்சில் வரும் "ராஜ் படேல்" என்ற கற்பனைக் கதாபாத்திரம். அமெரிக்காவில் வசிக்கும் இந்திய / குஜராத்தி வம்சாவளி மருத்துவர் ஒருவரது மகனாகச் சித்தரிக்கப்படிகின்றான்.
4. இந்த வியாதியின் பெயர், "ஆந்த்ராக்ஸ்". "ஆந்த்ரசைட்" எனப்படும் ஒருவகை நிலக்கரியினைப் போன்ற கொப்புளங்கள் உடலில் ஏற்படுவதால், இந்தப் பெயராம்.
5. ஐன்ஸ்டைன் ஒரு பிறந்த தினத்தன்று, பத்திரிகயாளர்கள் அவரைப் புகைப்படம் எடுத்துக் கொண்டேயிருந்தார்களாம். நிறுத்த மறுத்த, புகைப்படக்காரர்களைக் கடுப்படிக்க வேண்டித்தான், இப்படி நாக்கைக் காட்டிக் கேலி செய்கின்றார்.
6. நம்மில் பல பேர் பேக்கிங் செய்யப்படும் "பப்புள் பேக்" (bubble pack) கிடைத்தால் சும்மா இருக்காமல் அதன் பப்புள்களை படக் படகென்று உடைத்துக் கொண்டே இருப்பார்கள். ஜபானியரும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்த மாதிரி செய்வது மன அழுத்தத்தை சீராக்குகின்றது என்று கண்டுபிடித்து, இதனை மீண்டும் மீண்டும் செய்யும் வகையில், "புச்சி புச்சி" (Puchi Pucji) என்ற பெயரில் ஒரு பொழுது போக்கும் விளையாட்டுச் சாதனமாக்கி மார்க்கெட்டில் உலவ விட்டுள்ளனர் ஜப்பானியர்.
பெரும்பாலோனோர் சரியான விடைகளைச் சொல்ல முடியவில்லை. அடுத்த புதிரில் முயற்சிக்கின்றீர்களா?
- சிமுலேஷன்
Post a Comment