Saturday, April 12, 2008

ராகசிந்தாமணி கிளப் - ஹேமவதி - தர்மவதி - நீதிமதி

"எல்லோருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். கர்னாடிக் ம்யூசிலே ஒங்களுக்கெல்லாம் இருக்குற ஆர்வத்தைப் புரிஞ்சுண்டு, இன்னிக்கி "ராகசிந்தாமணி ம்யூசிக் க்ளப்"போட இந்த மொதல் மீட்டிங்குக்கு வந்திருக்கிற, ஒங்க எல்லாருக்கும் நன்றி. ஏற்கெனவே சொன்னபடி இந்த விவாதக் களம், ஒரு இன்ஃபார்மல் 'கெட்-டு-கெதர்'தான். அதனால, யார் வேணும்னாலும், எந்த ஆர்டர்ல வேணும்னாலும் பேசலாம்."

"ஆனா தலைப்பு மட்டும் என்னென்னு நாங்க ஏற்கெனவே முடிவு பண்ணிட்டோம்."

"ஹேமவதி-தர்மவதி-நீதிமதி". இதுதான் இன்னிக்கித் தலைப்பு."

"பாலா!, நீங்க வேணும்னா மொதல்ல ஆரம்பியுங்கோ"

"தேங்ஸ், சிமுலேஷன். இன்னிக்கி நான் ஹேமவதி ராகத்தைப்பத்திப் பேசப் போறேன். ஹேமவதி ராகம். இது 58ஆவது மேளகர்த்தா ராகம்."

"சாரி பாலா சார், இன்ட்ரப்ட் பண்றதுக்கு. இந்த ராகம்பத்தி அவ்வளவா கேள்விப்பட்டதேயில்ல. தியரியெல்லாம் சொல்றதுக்கு முன்னாடி கொஞ்சம் பாடித்தான் காட்டுங்களேன்."

"மொதல்லே நான் தியரியெல்லாம் எதுவும் சொல்லப் போறதிலே. இரண்டாவது நான் பாடவும் போறதில்லே. பேசத்தான் தெரியும். வேணும்னா, நம்ம நூக்கல சின்ன சத்யநாராயணாவைப் பாடச் சொல்லிக் கேட்போம். ஆரோகணம், அவரோகணம் எல்லாம் பாடி, ஒரு அஷ்டபதியும் பாடுவார். கேளுங்கோ."

"நல்ல இன்ட்ரொடக்ஷன். பாலா, ஹேமவதி ராகத்லே என்னென்ன பாட்டு இருக்குன்னு சொல்ல முடியுமா?"

"முத்துஸ்வாமி தீட்சிதரோட "ஸ்ரீகாந்திமதிம்" அப்படீங்கற பாட்டுத்தான் ரொம்பப் பாப்புலர். இப்ப கணேஷ் குமரேஷ் வயலின்லே இந்தப் பாட்டைக் கேப்போமா?"

"அட்டகாசம். அடுத்து வேறென்னென்ன பாட்டெல்லாம் இருக்கு?"

"பாபநாசம் சிவன் நெறையப் பண்ணியிருக்கார். "சிவனுக்கிளைய சேயே", "என்னைக் காத்தருள்" அப்படீன்னு"

"வெயிட்...வெயிட்...தமிழ்னாலே சிவன்தானா? "சிவனுக்கிளைய சேயே" அவரோட பாட்டா? கெடையவே கெடையாது."

"ஆஹா ருக்மிணி மாமி, கண்டு பிடிச்சிட்டேளா? சரி...சரி... அது யாரோட பாட்டுன்னு சொல்றவாளுக்கு, ஒரு பரிசு. (ஒங்களைத் தவிர)"

"XXXX XXXX XXXX தானே?"

"அடடா. சூரஜா கண்டுபிடிச்சது. இந்தாடா பிடி. ஒரு கேட்பரி சாக்லேட்"

"சிமுலேஷன் ஆன்ஸரை சத்தமாச் சொல்லதீங்கோ. இப்ப இந்த வலைப்பதிவர்களெல்லாம் கண்டுபிடிக்கறாங்களான்னு பாக்கலாம்."

"சரி, இப்ப அடுத்ததா, தர்மவதியப் பத்தி யார் பேசப் போறா?"

"தாமு மாமா. தர்மவதி ஒங்களோட ஃபேவரைட்டாச்சே. நாலு வார்த்தை சொல்லுங்கோ"

"ஆமாம். நாந்தான் தர்மவதியப்பத்திப் பேசப் போறேன். சூப்பரான ராகமாச்சே. இது மேளகர்த்தாவில் 59ஆவது ராகமாகும். இதனோட ஆரோகணம்: ஸ ரி2 க2 ம2 ப த2 நி3 ஸா, அவரோகணம்: ஸா நி3 த2 ப ம2 க2 ரி2 ஸ"

"பாடிக் காண்பியுங்கோ....பாடிக் காண்பியுங்கோ...."

"பாலா சார் மாதிரியே நானும் நூக்கல அண்ணாவக் கூப்பிட்டுடறேன். அவரே ஆரோகணம், அவரோகண்ம் எல்லாம் பாடிக் காண்பிப்பார். வாங்கோ. கேட்டுடலாமா?. "

"சிமுலேஷன். "இளஞ்சோலை பூத்ததா", தர்மவதி ராகம்தானே?"

"ஆமாமாம். கரெக்ட். என்ன படம்னு யாருக்காவது தெரியுமா?"

"ரொம்பவே அழகான பாட்டுத்தான். என்ன படம்னுதான் தெரியலே"

"உனக்காகவே வாழ்கிறேன்" இதுதான் படத்தோட பேரு. இந்தப் பாட்ட எஸ்.பி.பி, யாருக்காகப் பாடினாருன்னு தெரியாம நானும் இத்தன நாள் முழிச்சிட்டிருந்தேன். இப்பத்தான் தெரியும், சிவகுமாருக்காகவும், நதியாவுக்காகவும்தான் இந்தப் பாட்டுன்னு. சிவகுமார் நடிப்பையும், நதியா டான்சையும் கொஞ்சம் பொறுத்துண்டு இந்தப்பாட்டைக் கேட்டால் ரொம்பவுமே எஞ்ஜாய் பண்ணலாம்."

"ராமூ, அதே மாதிரி, "உத்தரவின்றி உள்ளே வா?" படத்லே ஒரு நல்ல பாட்டு வருமே அது என்னடா?"

"அதுவா? நம்ம ரவிச்சந்திரன் நடிச்ச படம்தானே?, "காதல், காதல் என்று பேச கண்ணன் வந்தானோ?"இந்தப் பாட்டைத்தானே சொல்றே?"

"கொஞ்சம் சைலன்ஸ் ப்ளீஸ். இந்தப் பாட்டையும் இப்பக் கேக்கப் போறோம்."

"மாமா, ரெண்டு தர்மவதியுமே சூப்பர். போறதுகுள்ளே, அந்த ரெண்டு பாட்டையும் என்னோட ஐ.பாட்லே காபி பண்ணிக் கொடுத்துடறீங்களா?"

"ஆஹா. கர்னாடிக்னா காத தூரம் ஓடறது. சினிமாப் பாட்டுன்னா என்னமா இன்ட்ரஸ்ட்?"

"மாமி. அதுனால ஒண்ணும் தப்பே இல்ல. அவங்களுக்காகத்தான் இந்த க்ளப்பே. சினிமாப் பாட்டைக் காம்பிச்சி, ஸ்லோவா, கர்னாடிக் ம்யூசிக்லே ஆர்வத்த உண்டுபண்றதுதான் நம்ம கோலே"

"ஆஹா. சிமுலேஷன், அப்படீன்னா, இன்னோரு சினிமாப் பாட்டுப் போடுங்கோ"

"ஜெண்டில் மேன்"ல் வர்ற "ஒட்டகத்தக் கட்டிக்கோ"கூட தர்மவதிதான். இன்னிக்கிப் போடலாம்னு நெனச்சுண்டிருந்தேன். ஆனா, You Tubeலேர்ந்து தூக்கிட்டாங்களே!"

"தாமு மாமா, கர்னாடிக் ம்யூசிக்லே என்னென்ன பாட்டுன்னு சொல்லுங்கோ"

"மைசூர் வாசுதேவாசாரியார் எழுதின "பஜனசேய ராதா", அப்புறம் முத்துசாமி தீட்சிதரின் "பரந்தாமவதீ" இதெல்லாமும்கூட தர்மவதியில இருக்ற பிரபலமான பாடல்களாகும். அப்புறம் பெரியசாமி தூரன் எழுதின "ஒரு நாள் வாழ்வே", கோடீஸ்வர ஐயர் எழுதின "கந்தா பக்த" இந்த கிருதிகளெல்லாம் கூட இந்த ராகத்திலேதான் இருக்கு."

"இப்ப நாம கேக்கப் போறது அம்புஜம் கிருஷ்ணா எழுதி, சுதா ரகுநாதன் பாடின "ஓடோடி வந்தேன் கண்ணா"

"ஏன்னா. ஒங்களைத்தான். அதுக்குள்ளே கொட்டாவியா? கோவிந்தான்னு சொன்னாப் போதுமே. முழிச்சுங்கோ. ஜூனியர் சிமுலேஷன் வேற வந்து போட்டோவெல்லம் எடுத்துண்ட்றக்கன்."

"இன்னிக்கிக் கடோசி ராகம் நீதிமதி. இதப்பத்திப் பேசப் போறது நீலா மாமி."

"இது 60ஆவது மேளகர்த்தான்னு உங்க எல்லார்க்கும் தெரிஞ்சுருக்கும். மொதல்லே கேக்கப் போறது, நூக்கல சின்னசத்யநாராயணாவோட, இன்ட்ரொடக்ஷன்."

"மாமி. இது ஒரு விவாதி ராகம்தானே?"

"கரெக்ட். செல்வன் எப்டிக் கண்டுபிடிச்சே? எப்டிடா முடியறது உன்னாலே?"

"மாமி, செல்வன் பயங்கரமாத் தேறிட்டான். எல்லாம் ஆர்வம்+உழைப்புதான். ஆனா, இன்னிக்கி விவாதி ராகத்தப்பத்திப் பேசத்தான் டைம் இல்லை. அடுத்த் க்ளப் மீட்டிங்லே, செல்வன் விவாதி ராகத்தப்பத்தி ஒரு தனி லெக்சரே கொடுக்கப் போறான்."

"சரி. நான் இப்ப வைரமங்கலம் லக்ஷ்மிநாராயணன் பாடின, "மோகனகர முத்துக்குமரா", இந்தப் பாட்டைப் போடறேன். கேளுங்கோ."

"கோடீஸ்வர ஐயர் கீர்த்தனைதானே. லிரிக்ஸ் கெடைக்குமா சிமுலேஷன்?"

"எஸ்.ராஜம் புக் போட்டுருக்காரே. இப்ப இம்மீடியட்டா வேணும்னா, இங்க போய்ப் பாக்கலாம்."

"ஆஹா. கிட்டதட்ட ஒண்ற மணி நேரம் போனதே தெரியல. அடுத்த க்ளப் மீட்டிங்க்காக ஆர்வமாக் காத்திண்ட்ருக்கோம்."

"மொதல் மீட்டிங்க நல்லபடியா நடத்திக் கொடுத்த எல்லார்க்கும் நன்றி. இதே மாதிரி எல்லா நிகழ்ச்சிகளையும் நடத்திக் கொடுக்கணும். இப்போ ஸ்வீட்ஸ், ஸ்நாக்ஸ், காபி வருது. மெதுவா சாப்பிட்டுட்டுப் போகணும். மறுபடியும் எல்லார்க்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!".

- சிமுலேஷன்

9 comments:

ஜீவா (Jeeva Venkataraman) said...

கணேஷ் குமரேஷ் வயலினில் ஹேமவதி அருமை!

"சிவனுக்கிளைய சேயே" - இதுவரை அந்தப் பாடலைக் கேட்டதில்லையே! - கூகிளாரைக் கேட்டதில் மாயூரத்தார் என்கிறார்! கிடைத்தது சுட்டி இங்கே!

ஓடோடி வந்தேன் கண்ணா - எனக்கு மிகவும் பிடித்த பாடல், அருமையான தர்மவதி!

கடைசியா, நீதிமதி உருப்படி - மோஹனகர முத்துக்குமரா - என்ன அருமையான பாட்டு! - வரிகளிலேயே - நீதிமதி தந்த நீ தயாநிதி அல்லவோ என்று வரும் - Hats off to தோடி கோடி சார்!

தொகுத்தமைக்கு நன்றிகள் சிமுலேஷன் சார்.

ஜீவா (Jeeva Venkataraman) said...

போனவாரம் பெங்களுரில் ஜேசுதாஸ் கச்சேரியில் இடம் பெற்றதொரு தர்மவதி - ஏனனைது

Simulation said...

வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றிகள் ஜீவா!

- சிமுலேஷன்

Radha Sriram said...

படித்தேன் தெளிந்தேன்.:):) நன்றி

Simulation said...

மதுவந்தி, ரஞ்சனி, ஹம்சநாதம் என்ற ஜன்ய ராகங்களெல்லாம், தர்மவதியிலிருந்து பிறந்தவையே.

Simulation said...

வருகைக்கு நன்றி ராதா ஸ்ரீராம்.

sury said...

//சிவனுக்கிளைய சேயே" - இதுவரை அந்தப் பாடலைக் கேட்டதில்லையே! - கூகிளாரைக் கேட்டதில் மாயூரத்தார் என்கிறார்! கிடைத்தது சுட்டி இங்கே!//

சிவனுக்கிளைய சேயே செவ்வே சிலம்பனே நீ வா எனும் ஹேமாவதி ராகத்தில் பாடல் சுமார் 50 ஆண்டுகளாக‌
தஞ்சை ஜில்லாவிலே மிகவும் பிரசித்தமானது. இது குறித்து இன்று நடந்த ஒரு ஹீடட் டிஸ்கஷனில்
நான் இந்த பாட்டிலே ஒரு இடத்திலே வாசஸ்பதி மாதிரி இருக்கிறதே என என் தங்கையிடம் சொல்லி விட்டேன்.
அதற்கப்புறம் ஒரு 30 நிமிடம், ஹேமாவதி வேறு வாசஸ்பதி வேறு , ஏன் அந்த இடத்தில் மட்டும் வாசஸ்பதி
மாதிரி இருக்கிறது என்று ஒரு தீஸிஸே படித்துவிட்டாள்.

இந்தப் பாடலைக் கேட்க எனை அழைத்துவந்த ஜீவாவுக்கு எனது நன்றி. பாடல் நல்ல பொருள் ஆழம்
நிறைந்ததாய் உள்ளது மனதிற்கு இதமாக இருந்தது. ஒரு பாடல் என்று எழுதினால் அது ஒரு வார்த்தை
ஜாலமாக இருக்கக் கூடாது. (A song should never be a verbal jugglery) அதில் ஒரு மையக்கருத்து இருக்கவேண்டும். மற்றும், கேட்பவர் முதற்கண் , அதில் உள்ள இசையினால் தான் ஈர்க்கப்படுகிறார் என்றாலும், இன்னும் ஒரு முறை கேட்கும்போது அவருக்கு அதில் ஒரு மெசேஜ் கிடைக்கவேண்டும். இப்போதைய நிலையிலிருந்து ரசிகர் மேற்படிக்கு செல்ல பாடலின்
கருத்து துணையாய் இருக்கவேண்டும். அப்படிப்பட்ட பாடல்கள் தான் காலத்தை வென்றனவாக இருக்கின்றன. This particular song is one example for that.

இதுபோன்ற பாடல்கள் எழுதப்படவேண்டும். பாடப்படவேண்டும். இசை ஆன்மீகத்தில் கலக்கும்போது
ஒரு இயல்பான சுகம் உணரப்படுகிறதே ! அது பற்றி பகவான் ரமணர் குறிப்பிட்டு இருக்கிறார்.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.3

ஜீவா (Jeeva Venkataraman) said...

இன்னமும் இந்தப் பாடல் என் TODO லிஸ்டில் இருக்கிறது, சீக்கிரம் படிக்க வேண்டும்!
அறிமுகத்திற்கு நன்றி சிமுலேஷன் சார். அதன் அருமையை எடுத்துரைத்தமைக்கு நன்றி சுப்புரத்தினம் சார்.

Simulation said...

சூரி அவர்களே!,

வருகைக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும் நன்றி.

- சிமுலேஷன்