Monday, December 28, 2009

எம் தமிழர் செய்த படம்

திரைப்பட வரலாறு, காட்டுயிர் போன்ற பல்வேறுபட்ட துறைகளில் பங்களித்தவர் தியோடர் பாஸ்கரன். இவர் தமிழ் சினிமா குறித்து எழுதிய ஒரு புத்தகம், "எம் தமிழர் செய்த படம்". தமிழ் சினிமாவின் தோற்றம், வளர்ச்சி, போக்கு ஆகியவற்றின் முக்கிய பரிணாமங்கள் சிலவற்றின் மீது கவனத்தைச் செலுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது இப்புத்தகம்.இது புத்தக வடிவம் என்று சொன்னாலும் கூட, குங்குமம், தீராநதி, மனோரமா இயர் புக், இந்தியா டுடே, தினமணி, காலச்சுவடு, புதிய பார்வை, கசடதபற ஆகிய இதழ்களில்,...

Wednesday, December 23, 2009

புகைப்படப் புதிர்-7

இந்த இரண்டு படங்களுக்கிடையேயான ஒற்றுமைகள் என்னென்ன?- சிமுலே...

Monday, December 21, 2009

சென்னை இசை விழா 2009-2010

முதலில் சென்னை இசை விழாவிற்கென ஒரு தனிப்பதிவு தொடங்கி, இசை விமர்சனங்கள் எழுதலாமென நினைத்தாலும், அதற்கென நேரம் கிடைக்கவில்லை. அதனால் ஒரு புகைப்படப் பதிவு மட்டுமே! புகைப்ப்டங்கள் மட்டும் அவ்வப்போது தரவேற்றம் செய்யும் எண்ணம். இந்த வருடத்திற்கான் நான் கேட்ட முதல் கச்சேரி சாகேத ராம். சிவகாமி பெத்தாச்சி அரங்கினில், ப்ரம்மகான சபா ஆதரவில். நாரதகான சபாவில் கலாக்ஷேத்ரா குழுவினரின் குழு நடனங்கள். குழு நடனத்தின் மற்றொரு காட்சி. குழு நடனத்தின் மற்றுமொரு...

Friday, December 18, 2009

ஒற்றன்-அசோகமித்திரன்

அசோகமித்திரன் என்ற ஆளுமையைப் பற்றிப் பேசும்போதெல்லாம், அவரது ஒற்றன் பற்றிப் பேசப்படுதல் கண்டுள்ளேன். ஒற்றன் என்ற தலைப்பினைக் கேட்டவுடன், ஒரு துப்பறியும் நாவலாக இருக்குமோ அல்லது ஒரு உளவாளியின் வாழ்க்கை வரலாறோ என்றெண்ணத் தோன்றினாலும், அசோகமித்திரன், இந்த மாதிரி வம்பு தும்புக்கெல்லாம் போகமாட்டரே என்று அழுத்தமாகப்பட்டது தவறாகவில்லை. (ஒரு முறை ஒரு கூட்டத்தில் சுந்தரராமசாமி பேசும் போது, "இவருடைய கதையில் வரும் அதிகபட்ச ஆயுதம் அரிவாள்மணைதான்" என்று சொன்னார்....

Thursday, December 17, 2009

அம்மையே அப்பா... ஒப்பிலா மணியே...

அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே! அன்பினில் விளைந்த ஆரமுதே! பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்குச் செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே! சிவபெருமானே! இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவதினியே! ராகம்: த...

Saturday, December 12, 2009

இசை விழாவில் திருடர்கள்

சமீப காலங்களில், இசை விழா நடை பெறும் அரங்குகளில், ரசிகர்கள் இசையிலோ அல்லது நாட்டிய நிகழ்ச்சிகளிலோ தன்னை மறந்து முழ்கி இருக்கும் போது, சில விஷமிகள் அரங்கினுள் நுழைந்து, ரசிகர்களின் கைப்பை, செல் போன், காமிரா ஆகியவற்றினை ஆட்டையப் போட்டுவிடுகின்றார்களாம்.எனவே நிகழ்ச்சி அமைப்பாளர்கள் அனுமதி சீட்டு, அழைப்பிதழ் ஆகியவற்றை அரங்கினுள் நுழையும் போது சோதனை செய்யக் கேட்டுக் கொண்டால், அதனை சங்கடமாக நினைக்காமல், அமைப்பாளர்களுடன் ஒத்துழைக்க வேண்டும். அதனைத் தங்களின் பாதுகாப்புக்காகவே செய்கிறார்கள் என்றும் புரிந்து கொள்ள வேண்டும்.சமீப காலங்களில், கலைஞர்கள், தங்களது...

சாகேதராமன் - சிவகாமி பெத்தாச்சி அரங்கம் - ப்ரம்மகான சபா

நேற்று ப்ரும்மகான சபாவின் ஆதரவில் சிவகாமி பெத்தாச்சி அரங்கில் நடைபெற்ற லால்குடியின் சிஷ்யரும், விசாகா ஹரியின் சகோதரருமான சாகேதராமன் கச்சேரி குறித்த எனது பதிவு இந்த தனி வலையில். - சிமுலே...

Tuesday, November 24, 2009

மறு ஒளிபரப்பு

ராகவனுக்கு படுக்க மணி பதினொன்று ஆகி விட்டது. மைதிலி நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தாள். தண்ணி குடித்து விட்டுப் படுக்கும் சமயம் செல் போன் அடித்தது. இந்த அகாலத்தில் யாராக இருக்கும் என்று பார்த்தார். விஜியிடமிருந்துதான் போன்."என்னம்மா? இந்த நேரத்திலே?""அப்பா; அம்மாவை ஒரு நிமிஷம் எழுப்புங்கோ.""எதுக்கும்மா?""அப்ப்பா. கொஞ்சம் எழுப்புங்கோளேன்.""மைதிலி; பாரு விஜி போன் பண்ணறா. எதோ ஒங்கிட்ட சொல்லணுமாம்""என்னடி விஜி; என்ன விஷயம்? எதுக்குப் போன் பண்னே?""அம்மா டி.வியை ஆன் பண்ணேன். தூர்தர்ஷ்ன் சானல் போடு""எதுக்கு?...""என்னடி இது? என்னோட டான்ஸ்...

வெக்கிலா...வெக்கிலா...கொஞ்சம் சிரி

அந்தக் காலத்தில் உடம்பு ஜுரமாக இருந்தால், டாக்டர் சாமிக்கண்ணுவிடம் போவது பழக்கம். அவரிடம் போய் உட்கார்ந்தவுடன், "வெளிக்கி எப்படிப் போச்சு?" என்றெல்லாம் விபரமாக கேட்டுவிட்டு, மெஜரால் போன்ற மாத்திரைகள் கொடுப்பார். அதனைப் பொடி செய்து தேனில் குழைத்துத் தருவார் அம்மா. ஒரிரு நாட்களில் ஜுரம் சரியாகிவிடும். அதுவரை சாத்துக்குடி, ப்ரெட் என்று சற்று விசேஷக் கவனிப்பு நடக்கும். அதனால அப்பப்ப ஜுரம் வந்தால் கூட நன்றாக இருக்குமே என்று ஒரு நப்பாசை வரும். சாமிக்கண்ணு டாக்டரின் பையன் ஜெயசீலனுக்கும் கிட்டத்தட்ட எங்கள் வயசுதான். ஒரு முறை டாக்டர் வீட்டுக்குப் போயிருக்கும்போது...

Sunday, November 22, 2009

எம்.எஸ்.உதயமூர்த்தியும் தம்பிதுரையும்

80கள். சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை. மேதினக் கூட்டம். சிறப்பு அழைப்பாளர்கள் எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்களும் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை அவர்களும். எம்.எஸ்.உதயமூர்த்தி தனது உரையில் வழக்கம் போல் வாழ்க்கையின் வெற்றிக்கு உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை ஆகியவை எப்படித் தேவை என்றும், எப்படி மக்கள் தங்களைத் தாங்களே மேம்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் ஊக்கம் தரும் உரை ஒன்றினை நிகழ்த்தினார்.அடுத்து பேச வந்த தம்பிதுரை அவர்கள், "ஐயா சொன்னதை அப்படியே நம்ப வேண்டாம். எல்லாத்துக்கும் மேல தேவையானது அதிர்ஷ்டம். அதிர்ஷ்டத்தை நம்பணும். எனக்கு அந்த அதிர்ஷடம்...

ஆதித்யா-அனிருத்

ஆதித்யா- அம்மா, இவனைப் பாருங்கோ! என் கண்ணைக் குத்திட்டான்.அம்மா - ஏண்டா அனிருத், அவன் கண்ணைக் குத்தினே?அனிருத் - இல்ல அம்மா, கன்னத்லே அறையத்தான் போனேன்; நகந்துன்ட்டான்; அதனாலதான் கண்ணுலெ விரல் பட்டுருத்து.--------------அம்மா - அனிருத், அவன் உனக்கு அண்ணா. இனி மேல பேர் சொல்லிக் கூப்பிடக் கூடாது. அண்ணான்னுதான் கூப்பிடணும், தெரியறதா?அனிருத் - சரிம்மா.ஆதித்யாவைத் தனியாகத் தள்ளிக் கொண்டு போய், "யேய். இனிமே நீயும் என்னைத் தம்பின்னுதான் கூப்பிடணும் தெரியு...

Saturday, November 21, 2009

பதிவர்களுக்கு மார்க் போட்டது யாரு?

க்ளாஸ்லே மொத்தம் நாப்பது பேரு! எல்லாரோட மார்க்கும் போட்டுருக்காங்க. நம்மளோட மதிப்பெண்கள் ஆங்கிலம் - 5 தமிழ் - 3 கணக்குக் - 0 விஞ்ஞானம் - 4 வரலாறு - 5 புவியியல் - 2 வணிகம் - 0 கணினி - 0 விளையாட்டு - 0 மொத்த மதிபெண்கள் - 19 ஒன்பது பேருக்கு மேல 54 மார்க் வாங்கி முதலிடம் பிடிக்கிறாங்க. ஆனா பத்து பேருக்கும் மேல ஒத்த இலக்க மதிபெண்கள்தான்தான். உங்களோட மார்க்கையும் பார்க்கணுமா? இங்கே போய்ப் பாருங்க. http://spreadsheets.google.com/pub?key=poYMG16Cp6GAN3WCTwl72TQ&output=html&gid=0&single=t...

Saturday, October 24, 2009

அக்கறை-100

தமிழ் வாசகர்களிடையே மிகவும் பிரபலமான "அப்புசாமியையும், சீதாப்பாட்டியையும்" வடிவமைத்தவரும், குமுதம் "அரசு" பதில்கள் தருபவரில் ஒருவருமான ஜ.ரா.சுந்தரேசன் என்ற பாக்யம் ராமஸ்வாமி "அக்கறை" என்ற குழுவினை நடத்தி வருகின்றார். ஒவ்வொரு மாதமும் மூன்றாம் ஞாயிற்றுக் கிழமை, தனது அலுவலகத்தில் ஒத்த கருத்துடைய பத்திரிகையாளர், இதழாளர்கள், எழுத்தாளர்கள், திரைக் கலைஞர்கள், நாடகக் கலைஞர்கள், ஆன்மிக அன்பர்கள், சமூக சேவர்கர்கள் என பல்தரப்பட்ட மனிதர்களும் அளவளாவ ஏற்பாடு...

Wednesday, October 21, 2009