Sunday, February 07, 2010

அபூர்வ ராகங்கள்-01-ஸ்ரோதஸ்வனி

ஸ்ரோதஸ்வனி என்ற அபூர்வ ராகமானது, கீரவாணி என்ற மேளகர்த்தா ராகத்தின் ஜன்யமாகும். சரியான பெயர் ஸ்ரோதஸ்வனியா அல்லது ஸ்ரோதஸ்வினியா என்று தெரியவில்லை.


இதன் ஆரோகணம், அவரோகணம் வருமாறு:-

ஆரோகணம் - S G2 M1 P N3 S
அவரோகணம் - S N3 P M1 G2 S

இந்த அபூர்வ ராகம், கர்னாடக இசையிலும், இந்துஸ்தானி இசையிலும் பெரிதும் பயன்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. திரையிசையிலும் பெரிதும் பயன்படுத்தப்படாத இந்த ராகம், நினைவுக்குத் தெரிந்து இரண்டு பாடல்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

முதல் பாடல் "பூந்தோட்டக் காவல்காரன்" என்ற படத்தில் இடம் பெரும், "சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு" என்ற பாடல். ஜேசுதாஸ் மற்றும் சுசீலா குரலில் பாடப்பட்ட ஒரு இனிமையான பாடல்.




இரண்டாவது பாடல் "நீங்கள் கேட்டவை" என்ற படத்தில் இடம் பெற்ற "ஓ. வசந்த ராஜா" என்ற பாடலாகும். இதுவும் ஸ்ரோதஸ்வனியில் அமைந்த ஒரு இனிமையான பாடலாகும். இதன் சுட்டி கிடைக்கவில்லை.

கர்நாடக இசையில் இந்த ராகத்தைக் கேட்க வேண்டுமென்றால், வயலின் எம்பார் கண்ணனும், கீ போர்ட் சத்யநாராயணவும் சேர்ந்து வாசித்துள்ள ஒரு அருமையான ஆலாபனையைக் கேட்க வேண்டும். கடந்த வருடம் லாஸ் ஏஞ்கல்ஸ் நகரில் இதனை வாசித்துள்ளார்கள். இந்த ஆலாபனையைக் கேட்கும்போது யாராக இருந்தாலும் சில நிமிடங்களுக்காவது பரவச நிலை அடைவது நிச்சயம்.




இந்த ராகத்தில் மேலும் பாடல்கள் இருப்பதாகத் தெரிந்தால் தயவு செய்து தெரியப்படுத்துங்கள்.

- சிமுலேஷன்

7 comments:

Ram said...

சிமுலேஷன்,

ஓ வசந்த ராஜா பாடல் பெரும்பாலும் ஸ்ரோதஸ்வனியில் அமைந்துள்ளது.

“சுமம் பிரதி சுமம்” என்றொரு ராஜாவின் தெலுங்கு பாடல் இந்த ராகத்தில் அமைந்த அற்புதமான பாடல்.

Ram said...

மேல் சொன்ன பாடல்களைத் தவிர,

சந்திரமுகியின் உள்ள ‘ரா ரா’ பாடலிலும் ஸ்ரோதஸ்வினி எட்டிப் பார்க்கும்.

லலிதா ராம்

http://carnaticmusicreview.wordpress.com/

Simulation said...

ராம்,

முதன் முறையாக எனது வலைப்பதிவிற்கு வருகின்றீர்கள் என்று நினைக்கின்றேன். நன்றி. அடிக்கடி வருக,

தெலுங்குப் பாடல் முடிந்தால் சுட்டி கொடுங்கள்.

"ரா, ரா" பாடலை அடுத்த முறை கேட்கும்போது உன்னிப்பாகக் கேட்கின்றேன்.

- சிமுலேஷன்

Ram said...

http://www.youtube.com/watch?v=3ECVP9z0SNo

லலிதா ராம்

Kovai S Jayaraman said...

Dear Sir, There is a malayalam devotional song "Maha Prabho mama mahaa prabho" by K.J.Yesudoss in his Ayyappan Devotional tuned by Gangai Amaran. Very Very Beautiful Raga very mystic and catchy one

BalHanuman said...

அன்புள்ள சிமுலேஷன்,

இதோ நீங்கள் கேட்ட ஓ வசந்த ராஜா பாடலின் சுட்டி...

http://www.youtube.com/watch?v=SYXN_BBvVac

Ramasamy Murugan said...

வளமான பூமி....ஒரே வானம் ஒரே பூமி