ஜோக் என்ற ராகம் வட இந்திய இசையில் பெரிதும் பயன்படுத்தப்பட்டாலும், கர்நாடக இசையிலும், தமிழ்த் திரையிசையிலும் அபூர்வமாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ராகம் 34ஆவது மேளகர்த்தா ராகமான வாகதீஸ்வரியின் ஜன்ய ராகமாகும். இதன் ஆரோகணம், அவரோகணம் வருமாறு:-
ஆரோகணம்: S G3 M1 P N2 S
அவரோகணம்: S N2 P M1 G3 R3 S
இந்த ராகம் பிரிவுணர்ச்சியினைப் பிரதிபலிக்கும் ஒரு ராகமாகும். ஜோக் என்றால் மானுட சக்தி, தெய்வீக சக்தியுடன் இணையும் ஒரு கூடல் (யோக) என்றும் கூறலாம். காஷ்மீரத்து இசைக் கருவியான சந்தூர் எனப்படும் இசைகருவியில் இந்த ராகத்தினை வாசிக்கக் கேட்க, ஆனந்தப் பரவச நிலை ஏற்படும்.
ஜோக் ராகமானது சிதார் மேதை பண்டிட் ரவி சங்கரால் பெரிதும் பிரபலப்படுத்தப்பட்ட ராகமாகும். முதலில் பண்டிட் ரவிஷங்கரும் அவரது மகள் அனோஷ்காவும் சிதாரில் இந்த ராகத்தினை வாசிப்பதை கேட்போமே.
அடுத்தபடியாக எஸ்.காயத்ரி சதாசிவ ப்ருமேந்திராவின் "ஸ்மரவாரம் வாரம்’ என்ற பாடலைப் பாடுவதை இங்கே கேட்போம்.
இந்த உருப்படிகளையெல்லாம்விட, எனக்கு மிகவும் பிடித்தது, கடம் கார்த்திக் குழுவினரின் ஜோக்தான். எம்பார் கண்ணன், கீ போர்ட் சத்யா ஆகியோருடன் வாசிக்கும் ஜோக் ராக உருப்படியினை நேரிலும் கேட்டிருக்கின்றேன். நீங்களும் கேளுங்களேன்.
தமிழ்த் திரைப் பாடல்களில் ஜோக் ராகத்தில் அமைந்த பாடல்கள் என்னென்ன?
1. இசை பாடு நீ - இசை பாடும் தென்றல்
2. மெட்டி ஒலி காற்றோடு - மெட்டி
இந்தத் தமிழ்த் திரைப்பாடல்களின் சுட்டிகள் கிடைக்கவில்லை.
திரைப்பாடல்களில் என்னைக் கவர்ந்த பாடல் என்றால் அது ஒரு மலையாளப் படப்பாடலாகும். அது என்னெவென்று இந்நேரம் கண்டுபிடித்திருபீர்களே? ஆமாம். "ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா" என்ற அருமையான படம்தான் அது. "ப்ரம்மதவனம் வேண்டும்" என்ற அந்தப் பாடல் ஜேஸுதாஸின் ஒரு அழகிய படைப்பு. பாடுவதற்கு கடினமான பாடல். ஆனால் கேட்பதற்கு சுகமான பாடல். கேளுங்கள் இப்போது.
- சிமுலேஷன்
Friday, February 19, 2010
அபூர்வ ராகங்கள்-04-ஜோக் (Jog)
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
பண்டிட் ரவிஷங்கரும் அவரது மகள் அனோஷ்காவும் சிதாரில் வாசிக்கும் இசை அருமை.
ஜோக் கொஞ்சம் திலங் சாயல் வருமோ?
//1. இசை பாடு நீ - இசை பாடும் தென்றல்
2. மெட்டி ஒலி காற்றோடு - மெட்டி//
இங்கே பார்க்க:
http://www.thiraipaadal.com/albums/albumsM.html
அல்லது http://www.paadal.com/albums
spellingகைப் பார்த்து டைப் செய்யவும்.
மேலும் சில பாடல்கள் ஜோக் ராகத்தில்.
Holi Holi Holi.... Rasukutty
Kavidhai Kelungal...... Punnagai Mannan (Jog is one of the ragas)
Oh Kalai Kuyilgale..... Unnai Vaazhthi Padugiren
Oru Pattaampoochi Nenjukkulle .......Kaadhalukku Mariyaadhai
Paadhi Kallil Mayakkam.... Azhaghe Unnai Aaradhikiren
Peygala Nambaatha.... Mahanadhi
Raagam Azhaithu Vantha Geetham ......Kanmani Oru Kavithai (some dharbari touches)
Vanjikodi ......Kanna Unai Thedugiren
Vatta Pandhai Thottu.... Chinna Vaathiyaar
எனக்கு கேள்வி ஞானம்தான்.
மேலிருப்பவை நெட்டில் சுட்டது.
ரவி ஷங்கர்,
வருக்கைக்கும், தகவல்களுக்கும் நன்றி. நீங்கள் குறிப்பிட்ட சுட்டியையும், மற்ற பாடல்களையும் நேரம் கிடைக்கும்போது பார்க்கின்றேன்.
நீங்கள் சொல்வது சரிதான். ஜோக் ராகத்தில் திலங் ராகத்தின் சாயல் இருக்கும்.
- சிமுலேஷன்
பிரமதவனம் எனக்கும் ரொம்ப அபிமானப் பாடல். அது ஜோக் ராகமா! சலநாட்டை போல இருக்கிறதே, இல்லாமலும் இருக்கிறதே என்று குழப்பத்தில் இருந்தேன். நன்றி. எனக்கு மெயில் செய்ய முடியுமா? உங்களோடு நிறையப் பேச வேண்டும். நானும் ஒரு இசை ரசிகன். kgjawarlal@yahoo.com
http://kgjawarlal.wordpress.com
ஜவஹர்,
முதன்முதலாக எனது வலைப்பதிவுக்கு வந்துள்ளீர்கள். வருக வருக.
உங்களுக்கு தனி மடல் அனுப்புகின்றேன். பேசுவோம் நிறைய.
- சிமுலேஷன்
கவிதை கேளுங்கள் பாட்டை சாவித்ரி என்று போட்டிருந்தீர்கள். அப்போதே சொல்ல வேண்டும் என்று நினைத்தே அது ஜோக் என்று. ரவிஷங்கர் இப்போது பட்டியலில் சரியாகச் சேர்த்துவிட்டார்.
இசையைப் பக்கம் வாரும் வாரும்-னு நிறைய பேரை அழைக்கறீங்க. ஒத்துக்கறேன். அதுக்காக ‘ஸ்மரவாரம் வாரம்’ பாட்டை எல்லாம் கூட வாரும்
வாரும்-னு அடிக்கறீங்களே:-)
>>>>>இந்த ராகம் பிரிவுணர்ச்சியினைப் பிரதிபலிக்கும் ஒரு ராகமாகும். ஜோக் என்றால் மானுட சக்தி, தெய்வீக சக்தியுடன் இணையும் ஒரு கூடல் (யோக) என்றும் கூறலாம்.<<<<<<<
இதெல்லாம் எப்படிங்க தோணுது உங்களுக்கு:-)
ரவீந்திரன் மாஸ்டருக்கு ரெண்டு ஷொட்டை சேர்த்துச் சொல்லி இருந்திருக்கலாமோ-ன்னு பட்டுது.
லலிதா ராம்
ராம்,
"ஸ்மரவாரம் வாரம்" எழுதுப் பிழையை சரி செய்துவிட்டேன். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.
//இதெல்லாம் எப்படிங்க தோணுது உங்களுக்கு:-)//
இதெல்லாம் சொந்தக் கருத்து இல்லீங்க. எங்கேயோ எப்போதோ கேட்டது, படித்தது.
- சிமுலேஷன்
ThanQ for all of your conversations, really happy to know about the Raga and when I came to know that this raga was janyam of Vaagadeeswari, no doubt how it could not attract human with divinity. And enjoyed Daas ji malayalam song which heard in my young age.
Post a Comment