Wednesday, February 24, 2010

தலைகீழ் சங்கீதமும் "Constantinople" RTPயும்


கடலூர் சுப்ரமணியம் என்ற இசைக்கலைஞர் ஒரு வாக்கேயக்காரரும் கூட. அதாவது பாடல்களெல்லாம் இயற்றி, அதனைக் கச்சேரியில் பாடுவதிலும் புலமை பெற்றவர். 72 மேளகர்த்தா ராகங்களிலும் பாடல்களை இயற்றிய ஒரு சிலரில் அவரும் ஒருவர். மோஹரஞ்சனி, ஹம்ஸவாகினி, த்வைத சிந்தாமணி, மனேஹம், மேச காந்தாரி, வர்ணப்ரியா, கதரமு போன்ற அபூர்வ ராகங்களிலும், மேலும் மற்றைய ராகங்களிலும் 500 பாடல்களுக்கு மேல் இயற்றியுள்ளார். பாடலீஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானின் பெயரைக் கொண்டு 'பாடலீச' என்ற முத்திரையை இவர்தம் கீர்த்தனைகளில் வைத்துள்ளார்.



கடலூர் சுப்ரமணியம் அவர்கள் எனது தந்தையாருடன் அண்ணமலைப் பல்கலைகழகத்தில் ஒன்றாகப் படித்தவர். இருவரும் சேர்ந்து ஒரு முறை "தலைகீழ் சங்கீதம்" என்ற புதுமையான நிகழ்ச்சி நடத்தினார்கள். பிறகு "Constantinople" என்ற பதத்தினை எடுத்துக் கொண்டு, அதனை RTP ஆகவும் பாடி கரகோஷம் வாங்கினார்களாம். இதனை அவரே தமது "இசைத் தென்றல்" என்ற புத்தகத்தில் எடுத்துக் குறியுள்ளார். கிட்டத்தட்ட 38 ஆண்டுகளுக்கும் மேலான அந்தப் புத்தகத்தினை பார்க்கும்போது அப்பாவின் நினைவு வருகின்றது.

 
- சிமுலேஷன்

11 comments:

Sethu Subramanian said...

Neat stuff! I was aware of CudalUr Subramaniam's famous song "rAgattil siranda" song popularized by Nityasri. I didn't know he composed over 500 songs in all mELakartha ragams. He needs more recognition.

Simulation said...

நாரதா,

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

- சிமுலேஷன்

Vasu said...

@narada

'ragattil siranda' was popularized by Dr. S. Ramanathan.

Vasu said...

@narada

'ragattil siranda' was popularized by Dr. S. Ramanathan.

தி. ரா. ச.(T.R.C.) said...

i had the oppotunity of hearing his music at Krishna gana sabha in 1970s thankyou for bringing to light

Ram said...

ஒரு கருத்தரங்கில் ஜி.என்.பி பற்றி பேசினேன். அங்கு கடலூர் சுப்ரமணியத்தைப் பற்றி பேச அவரது சிஷ்யை வந்திருந்தார். தோடியில் அவரது கிருதியைப் பாடினார். அபாரமாக இருந்தது.

இவரைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ல விருப்பம். நீங்கள் இட்டுள்ள புத்தகத்தின் மற்ற பக்கங்களையும் இட/அனுப்ப முடியுமா?

அல்லது புத்தகம் கிடைக்கும் இடத்தைச் சொல்ல முடியுமா?

Simulation said...

திராச அவர்களே,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

- சிமுலேஷன்

Simulation said...

ராம்,

நீங்கள் வருகின்ற ஞாயிறன்று சென்னை வந்து பெத்தாச்சி அரங்கினில் "தீக்ஷிதர் அகண்டம்" நிகழ்ச்சிக்கு வருவதாக உங்கள் வலைப்பதிவிலிருந்து தெரிந்து கொண்டேன். நானும் வர எண்ணியுள்ளேன்.

அப்போது இந்தப் புத்தகத்தை எடுத்து வருகின்றேன். பாருங்கள். உங்களுக்குத் தேவையான பக்கங்களை ஸ்கேன செய்து அனுப்புகிறேன் பிறகு.

- சிமுலேஷன்

Ram said...

சிமுலேஷன்,

நிச்சயம் ஞாயிறன்று சந்திக்கலாம்!

Ram said...

சிமுலேஷன்,

அகண்டத்துக்கு வந்திருந்தீர்களா?

Simulation said...

ஆமாம், ராம். காலை 8.45 மணிக்கே வந்த்துவிட்டேன். புத்தகமும் எடுத்து வந்திருந்தேன். உங்களைத் தேடிக் கொண்டிருந்தேன். 10.30 மணியளவில் லக்ஷ்மி ரங்கராஜன் கச்சேரி முடியும் தருவாயில் கிளம்பிவிட்டேன்.

உங்களுடைய மொபைல் நம்பர் இல்லாததால் தொடர்பு கொள்ளமுடியவில்லை. ஒரு வேளை உங்கள் நம்பர் ஜவர்லால் வைத்திருப்பாரோ என்றெண்ணி அவரைத் தொடர்பு கொள்ள முயன்றும் தோல்வி. உங்கள் தொடர்பு எண்ணை consultsimul@yahoo.com என்ற மெயில் ஐடிக்குத் தனிமடல் இடுங்கள்.

- சிமுலேஷன்