Tuesday, March 30, 2010

சங்கம் என்பது தமிழ்ச் சொல்லா?

"சங்கம் என்பது தமிழ்ச் சொல்லா?" என்பது உள்ளிட்ட சில கேள்விகள் வைத்திருந்தேன் எனது பதிவில் முன்பொரு முறை. அதனை மீள் பதிவு செய்கின்றேன் இப்போது. எனது பழைய பதிவுகளிலிருந்தோ அல்லது கூகிளாண்டவர் துணைகொண்டோ பதில்களைக் கண்டுபிடித்து பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

- சிமுலேஷன்

1. "விடையவன் விடைகள்" என்ற தலைப்பில் கேள்விகளுக்குப் பதில் சொல்லி வந்தார் தமிழறிஞர் ஒருவர்; அவர் யார்? அவருக்கு வந்த சில கேள்விகளுக்கு உங்களுக்குப் பதில் தெரியுமா?;-

2. கொய்யாக் கனி என்ற பெயர் அக்கனிக்கு ஏன் எற்பட்டது?

3. அருணகிரி நாதர் முருகனை, "சூர்க்கொன்ற ராவுத்தனே" என்று சொல்கிறார். ராவுத்தர் என்ற சொல்லுக்குப் பொருள் என்ன?

4. பேட்டி என்பது தமிழ்ச் சொல்லா?

5. சீதக்காதி என்ற முஸ்லிம் வள்ளலுக்கு அதுவே இயற்பெயரா?

6. செங்கல்வராயன் என்ற பெயர் எந்தக் கடவுளைக் குறிப்பது?

7. உம்மாச்சி என்று குழந்தைப் பேச்சில் கடவுளைக் குறிக்கிறார்கள். அது எப்படி வந்தது?

8. தேவகுசுமம் என்பது என்ன?

9. சங்கம் என்பது தமிழ்ச் சொல்லா?

4 comments:

sury siva said...

சங்கம என்பது தமிழ்ச்சொல்லா ?

சங்கம் எனும் சொல் ஏறத்தாழ இதே பொருளில் வடமொழியிலும் உள்ளது.

சங் ( sangh ) எனும் சொல்லுக்கு, கூட, சேர்ந்து என்று பொருளும்,
கம் ( gam ) எனும் சொல்லுக்கு செல்வது, போவது என்ற பொருளும் உள்ளது.

ஆக, சங்கம் என்ற சொல்லுக்கு, சேர்ந்து செல்வது, ஒன்றாகச் செல்வது என்ற பொருளில் உள்ளது.

நிற்க. ஒரு சொல் ஏறத்தாழ அதே பொருளில் பிறிதொரு மொழியினில் இருப்பினும், அச்சொல்லினை
அம்மொழிச் சொல்தான் எனக்கூறிவிட இயலாது.

உறவினைக் குறிக்கும் சொற்கள், எண்களைக் குறிக்கும் சொற்கள், இயற்கையின் பல்வேறு அம்சங்களைக்
குறிக்கும் சொற்கள் பல மொழிகளில் ஒன்றாக இருக்கின்றன அல்லது ஒலிக்கின்றன.

சுப்பு ரத்தினம்.

sury siva said...

// . உம்மாச்சி என்று குழந்தைப் பேச்சில் கடவுளைக் குறிக்கிறார்கள். அது எப்படி வந்தது?
//
ஓமக்ஷி எனும் சொல் மறைகளில் உள்ளது.
ஓம் எனும் சொல் ப்ரணவத்தைக் குறிக்கும். ஆதி எனும் சொல் . ஆம்னி எனும் சொல்லும் கவனிக்கத்தக்கவை.
இச்சொற்களின் பொருள் ஓம் என்பதில் அடங்கும்.

அட்சி என்பது அக்ஷி என்பதன் திரிபு ஆம். அக்ஷி என்பது அக்ஷரத்தை உடையவர் என்பதாகும்.

ஆக, ஓமக்ஷி என்பது திரிந்து ஓமாட்சி என வந்து பிறகு ஒமாட்சி , உமாட்சி , உம்பாச்சி ஆகியிருக்க
கூடும்.
இது எனது
கணிப்பு அல்ல.
ஊகம்.
சுப்பு ரத்தினம்.

cheena (சீனா) said...

அன்பின் சிமுலேஷன் - இக்கேள்விகளுக்குப் பதில் வேறு எங்கேனும் கொடுக்கப்பட்டிருக்கிறதா

நல்வாழ்த்துகள் சிமுலேஷன்
நட்புடன் சீனா

Simulation said...

சீனா,

இந்தக் கேள்விகளுக்குப் பதில்கள் இங்கே உள்ளன.

http://simulationpadaippugal.blogspot.com/2006/02/blog-post_18.html

- சிமுலேஷன்