Saturday, November 06, 2010

பந்து விளையாட்டும், பஞ்சரத்ன கீர்த்தனையும்


சமீபத்தில் 'பெட்ரோடெக் 2010" மாநாட்டிற்காக புது டெல்லி சென்றிருந்தேன். நோய்டாவிலிருந்து வந்த டாக்சி டிரைவர் ராம்சிங்கிற்கு புது டில்லி அவ்வளவு பரிச்சயம் இல்லை போலும். ஆனால் எல்லாம் தெரிந்த மாதிரி வண்டியை ஓட்டிக்கொண்டு ராஜ்பாத், ஜனபாத், அக்பர் தெரு போன்ற முக்கிய தெருக்களிலெல்லாம் அழைத்துச் செல்கிறார். நானோ 'ஹிந்தி நஹி மாலும் ஹை' கேஸ். இருவரும் சேர்ந்து கொண்டு "விக்ஞான் பவனை" தேடிக்கொண்டு, இந்தியா கேட்டினை ஐந்து முறை வலம் வந்துவிட்டோம்.

திடீரென புதிதாக வாங்கிய நோக்கியா E71ல் GPS இருப்பது ஞாபகம் வந்தது. நேவிகேட்டர் துணை கொண்டு விக்ஞான் பவனைத் தேட அதுவோ, மீண்டும் மீண்டும் இந்தியா கேட்டையே சுற்றி வந்தது. வழியில் எங்கும் நிறு்த்த அனுமதி இல்லாத அதிகாரவர்க்கம் நிறைந்த மையப்பகுதி. டிரைவர் வண்டியை கூலாக நிறுத்தி வழி கேட்கப் போக, புது டில்லியில் ஏ.கே7 கையால்தான் இறுதி மூச்சோ என்று எனக்குப் பதைபதைப்பு. ஒருவழியாக வழி கண்டுபிடித்து, விக்ஞான்  பவனுக்கு என்னை கொண்டு சேர்த்தார்.

E71ல் GPS எனது கவனத்தை ஈர்த்த ஒரு இடம் த்யாகராஜ் ஸ்போர்ட்ஸ் காம்ப்ளெக்ஸ் (Thyagaraj Sports Complex). த்யாகராஜ் என்றால் தமிழ்ப் பெயர் போல இருக்கின்றதே என்று யோசித்தேன். ஹாக்கியில் தன்ராஜ் பிள்ளையின் பெயர் தெரியும். ஆனால் த்யாகராஜ் என்பது யார் என்று யோ்சித்தேன், யோசித்தேன். யார் அவர் என்று என் சிற்றறிவுக்குச் சிறிதும் எட்டவில்லை. சரி கூகுளார் உதவியை நாட விடை கிடத்துவிட்டது. விடை தெரிந்தவுடன் அப்படியே ஷாக் ஆயிட்டேன்!!!

இந்த ஸ்போர்ட்ஸ் காம்ப்ளெக்ஸ் சமீபத்தில்தான் காமன்வெல்த் கேம்ஸுக்காக கட்டப்படதாம். யார் பெயரில் கட்டப்பட்டது என்றால், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸத்குரு த்யாகராஜ ஸ்வாமிகளின் பெயரிலாம். அவருக்கும் விளையாட்டுத் துறைக்கும் என்னய்யா சம்பந்தம்? பந்துவராளியிலும், கௌளிபந்துவிலும் பாடினது தவிர. சரி பெயரை வைத்ததுதான் வைத்தார்கள். ஒரு அடைமொழி? வேண்டாம். த்யாகராஜர் என்ற முழுப் பெயரையாவது வைத்திருக்கலாமே? அதென்னெ ஸ்டைலாக சத்யராஜ், சிபிராஜ் மாதிரி த்யாகராஜ். யார் இப்படி ரூம் போட்டு யோசிச்சது?

உங்களில் யாருக்கேனும் காரணம் தெரிந்தால் சொல்லுங்களேன்.

- சிமுலேஷன்

6 comments:

மதுரை சரவணன் said...

:-(

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நல்ல தமாஷ்!

Unknown said...

ஹிஹி. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராக, அவர் செஞ்சுரிக்கும் மேலே பாட்டு அடிச்சு ஆ/பா/டினதால் இருக்குமோ?

வேறு உருப்படியான மறுமொழி வருமோ என்று, ஃபாலோஅப்புக்கு.

Simulation said...

மதுர சரவணன், யோகன், கெக்கே பிக்குணி,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

- சிமுலேஷன்

BalHanuman said...

>>அவருக்கும் விளையாட்டுத் துறைக்கும் என்னய்யா சம்பந்தம்? பந்துவராளியிலும், கௌளிபந்துவிலும் பாடினது தவிர.

Dear Simulation,

வழக்கம் போல் சிக்ஸர் அடித்து விட்டீர்கள் :-)

Simulation said...

'பால்'ஹனுமான், இந்தப் பதிவிற்குக் கட்டாயம் வருவீற்கள் என்று தெரியும். கருத்துக்கு நன்றி!

- சிமுலேஷன்