முன்னேற்பாடுகள் – வாங்க வேண்டியவை
நாம் கொலு வைக்க வேண்டும் என்று தீர்மானம் செய்த பிறகு அதற்குத் தேவையான ஏற்பாடுகளை எவ்வளவுக்கெவ்வளவு முன்னதாகக் செய்து கொள்கின்றோமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது. எந்த மாதிரி கொலு, எவ்வளவு பெரிய கொலு, எங்கே கொலு வைக்கப் பாகின்றோம் போன்ற விஷயங்களை முன்னதாகவே தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். இவற்றிக்குத் தேவையான பொருட்கள் என்னென்னவென்றும் பட்டியலிட்டுக் கொண்டு பத்துப் பதினைந்து நாட்கள் முன்பாகவே அவற்றை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். அல்லது நவராத்திரி துவங்குவதற்கு முந்தைய சனி அல்லது ஞாயிற்றுக் கிழமைகளைல் இவற்றை வாங்கி வைத்து கொள்வதும் மற்றைய ஏற்பாடுகளை செய்து வைத்துக் கொள்வதும் நல்லது.
கொலுப்படிகள்
பாரம்பரியமாகக் கொலு வப்பவர்கள் வீடுகளில் கொலுப்படிகள் இருக்கும். மரத்தினாலோ அல்லது இரும்பினாலோ இந்தப் படிகள் செய்யப்பட்டிருக்கும். இவை போன்ற படிகள் இல்லாதவர்கள் வீட்டில் உள்ள பலகைகள், பெஞ்சுக்கள், மேஜைகள், புத்தகங்கள் உதவி கொண்டு படி கட்டுவார்கள். புதிதாகக் கொலு வைக்க இருப்பவர்கள், இவ்வாறு கஷ்டப்படாமல், புதிதாகக் கொலுப்படிகள் வாங்கிக் கொள்வது நல்லது. மரத்தில் வேண்டுமென்றால் ஆசாரியிடம் ஆர்டர் கொடுத்து செய்யச் சொல்ல வேண்டும். ஆனால் மரப்படிகளைக் கையாள்வது கடினம். மேலும் விலையும் அதிகம்.
எனவே எளிதில் கழட்டி மாட்டக் கூடிய ஸ்டீல் ஸ்லாட்டட் ஆங்கிள்களால் அமைந்த இரும்ப்புப் படியே சிறந்தது. இவை ஹார்ட்வேர் கடைகளிலும், பாத்திரக் கடைகளிலும் கிடைக்கும். எண்ணிக்கை குறைந்த படிகள் வைப்பவர்களும், குறைவான பொம்மைகள் வைப்பவர்களும், மெல்லிய தகடுகள் கொண்ட் விலை குறைந்த படிகளை வாங்கிக் கொள்ளலாம். ஆனால் இந்த மெல்லிய தகடுகள் மூலம் அதிகப்படியான படிகள் வைத்தால் அவற்றின் மீது நாம் ஏறி பொம்மகளை வைக்கும் போது இந்த மெல்ல்லிய தகடுகள கண்டிப்பாக வளைந்து விடும். எனவே நிறைய கனமான பொம்மைகளை வைக்க எண்ணினாலோ, அல்லது அதிகப் படிகள் வைக்க எண்ணினாலோ, சற்றெ அதிக ‘கேஜ்’ உள்ள தடிமனான தகடுகள் கொண்ட ஸ்லாட்டட் ஆங்கிள் படிகள் வாங்குவது நல்லது. இஅவை சற்றே விலை கூட இருந்தாலும் நீண்ட காலப் பயன்பாட்டிற்கு நல்லது.
தற்போது ப்ளாஸ்ட்டிக்கிலும் கொலுப் படிகள் கிடைக்கின்றன. இவை எவ்வளவு வலுவானவை என்பது தெரியவில்லை. ஆனால், எளிதில் பூட்டி மாட்ட்டவும், கழட்டிக் கையாள்வதற்கும் வசதியானவையாக இருக்கலாம். அடிக்கடி வேலை மாற்றல் காரணமாக வீடு மாறுபவர்களுக்கு இவை தோதாக இருக்கும்.

பொம்மைகள்
புதிதாகக் கொலு வைப்பவர்கள் கண்டிப்பாக பொம்மைகள் வாங்க வேண்டும். ஏற்கெனவே கொலு வைப்பவர்கள் கூட வருடா வருடம் புதிது, புதிதாகப் பொம்மகள் வாங்க ஆசைப்படுவார்கள். இப்போது எந்த மாதிரி கொலு வைக்கப் போகின்றோம், அதற்கு எப்படிப்பட்ட பொம்மைகள் வேண்டுமென்றும் தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். ஒரு படியில் வைக்கப்படும் பொம்மைகள், ஏறுமாறான உயரங்களில் இல்லாமல் இருந்தால் பார்வைக்கு அழகாக இருக்காது. எனவே எந்த அளவில் பொம்மைகள் வாங்க வேண்டுமென்று நன்கு திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.
மற்ற பண்டிகைகள் போல மாவிலைத் தோரணம், பனையோலத் தோரணம் ஆகியவற்றிக் கட்டினாலும், கொலுவிற்கு மேலும் பல அலங்காரங்கள செய்ய வேண்டும். அதற்காக ப்ளாஸ்டிக் மாவிலைத் தோரணங்கள், வீட்டு வாசலில் கட்ட அலங்காரத் தோரணங்கள், கொலு இருக்கும் அறையை அலங்கரிக்க தொம்பைகள், கலர் காகிதத் தோரணங்கள, ஜரிகை, சமிக்கி வேலைப்பாடு கொண்ட தோரணங்கள் ஆகியவையும் தேவைப்படலாம். உங்கள் வீட்டிற்கு என்ன தேவையோ, உங்கள் கொலுவிற்கு எவை அழகாகப் பொருந்தி வருமோ அவற்றை மட்டும் வாங்கிக் கொள்ளலாம். அனாவசியமாக வாங்கிக் குவித்துக் குப்பை சேர்க்கக் கூடாது.
பரிசுப் பொருட்கள் மற்றும் இன்ன பிற
கொலுவிற்கு வரும் விருந்தினர்களுக்கு அந்தக் காலத்தில் வெத்தில, பாக்கு, தேங்காய், மஞ்சள் தவிர சோப்பு, சீப்பு, கண்ணாடி, ரவிக்கைத் துணி போன்ற பொருட்களைப் பரிசாகத் தருபது வழக்கம். ஆனால் இந்தக் காலத்தில் பெரும்பாலானோர்க்கு இவையெல்லாம் தேவைப்படாது. எனவே இப்போது பலரும் விருந்தினர்களுக்கு உபயோகமான பொருட்களை தருகின்றனர். இந்த வகையில் இன்றைய நாட்களில் ப்ளாஸ்டிக் டப்பா, தட்டு, கூடை, எவர்சில்வர் தட்டு, கிண்ணம், பூக்கூடை, கைப்பை, காதணிகள், வேலைப்பாடமைந்த பர்ஸ் எனப் பலவகை பொருட்களையும் பரிசாக அளிக்கின்றனர். எனவே என்ன பொருட்களை எவ்வளவு வாங்க வேண்டுமோ அவற்றைத் திட்டமிட்டுப் பட்டியலிட்டு முன்னதாகவே வாங்கி வைத்துக் கொண்டால் நேர விரயத்தினைத் தவிர்க்கலாம்.
பரிசுப் பொருட்கள தவிர, சுண்டல் முதலானவற்றைப் பேக் பண்ணிக் கொடுக்க பாலிதீன் பை (ஜிப்லாக்), அல்லது அலுமினியும் ஃபாயிலால் செய்யப்பட்ட டப்பாக்கள் இவையும் தேவையான அளவுக்கு வாங்கி வைத்துக் கொள்ள வேண்டியிருக்கும். நவராத்திரி சமயத்தில் வந்திருக்கும் ஸ்பெஷல் கடைகளிலோ அல்லது மயிலாப்பூர், பாரிமுனை பகுதிகளில் அமைந்துள்ள கடைகளிலோ இவற்றை வாங்கலாம்.
தொடரும்…
- சிமுலேஷன்
1 comments:
kolu parri arumaiyaana vivarippu .. nadai super...vaalththukkal
Post a Comment