Wednesday, September 28, 2011

கொலு வைப்பது எப்படி? - 08

கொலுப் போட்டிகள்
தற்காலத்தில் கொலுப் போட்டிகள் நடப்பது சாதாரணமாகி விட்டது. இதற்கெல்லாமா போட்டிகள் என்று எண்ணினாலும், இந்தப் போட்டிகள் பரபரவென்று ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கையில் கொலு போன்ற விஷயங்களில் மேலும் ஆர்வம் கொண்டு பங்கெடுக்க செய்கின்றபடியால் இத்தகைய போட்டிகளை மனமார வரவேற்கலாம். கொலுப் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டுமென்றால் அதற்காக ஒரு சிறப்பான கொலு வைத்திருத்தல் அவசியம். தீமாட்டிக் கொலுவாக இருத்தல் இன்னமும் சிறப்பு.
கொலுப் போட்டிகள் பல வைகப்படும். பெரும்பாலான போட்டிகளில் கொலு தொடங்கிய ஓரிரு நாட்களிலேயே உங்கள் கொலுவை பற்றிய புகைப்படங்கள் எடுத்து விளக்கங்களும் எழுதிப் போட்டியாளர்களுக்குத் தபாலில் அனுப்ப வேண்டும். அவர்கள அவற்றில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்துப் பரிசுகள் அளிப்பார்கள். இது தவிர சில போட்டியாளர்கள் தங்களது நடுவர்களை தேர்ந்தெடுக்கப்ப்ட்ட ஒரு சில வீடுகளுக்கு அனுப்புவார்கள். நடுவர்கள் உங்கள் வீட்டுக்கு வரும் போது, அவர்கள் கொலு எப்படி பாரம்பரியமாக அமைக்கப்பட்டுள்ளதா, என்னென்னெ சிறப்பம்சங்கள் உள்ளன என்பவற்றைக் கவனிப்ப்பது மட்டுமல்லாத்து, விருந்தினர்களை நீங்கள் உபசரிக்கும் முறைகள், அவர்களுக்கு நீங்கள் விளக்கம் அளிக்கும் முறைகள் ஆகியவற்றிற்கும் மதிப்பெண்கள் அளிப்பர்கள். இவர்கள் முன்னறிவின்றி வரலாம். எனேவே வீட்டில் உள்ள எவரும் நடுவர்களை சந்த்திக்க தயார் நிலையில் இருத்தல் நல்லது.
இந்த வருடம் கொலுப் போட்டிகள் நடத்துவர்கள் பற்றி ஒரு சில குறிப்புகள் தருகின்றேன்.
வசந்த் & கோவும், தி ஹிண்டு நாளிதழும் சேர்ந்து நடத்தும் கொலுப் போட்டி குறித்த விபரங்கள் இங்கே:-
“ஸ்ரீ மயிலாப்பூர் ட்ரையோ”எனப்படும் சுமுகி ராஜசேகரன் மெமோரியல் ட்ரஸ்ட்ச் சேர்ந்த்தவர்கள் மயிலாப்பூர் டைம்ஸ் இதழுடன் சேர்ந்த்து கொலுப் போட்டிகள் நடத்துகிறார்கள். இது தவிர இவர்கள் ஒவ்வொரு வருடமும் “கொலு பத்ததி” என்ற தலைப்பில் கொலு வைப்பது எப்படி என்ற ஒரு பட்டறையையும் நடத்துகின்றார்கள். அதன் விபரம் இங்கே:-
விகடன் நிறுவனத்தினர் நடத்து போட்டி விவரம் இங்கே:-
சென்னை லைவ்நியூஸ் என்ற அமைப்பு நடத்தும் கொலுப் போட்டிகள் இங்கே:-
பார்லே நிறுவனம் நடத்துக் கொலு கலாட்டா போட்டி:-
மற்றொரு போட்டி இங்கே:-
ஏர்டெல் நிறுவன நடத்தும் போட்டி இங்கே:-
யூஏஈ தமிழ் சங்கம் நடத்தும் உலக அளவிலான நவராத்திரி கொலு போட்டி
மேற்கண்ட போட்டிகள் தவிர வேறு ஏதேனும் விடுபட்ட போட்டிகள் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.
தொடரும்

1 comments:

துளசி கோபால் said...

சென்னை வாழ்க்கையில் இப்படி 'பட்டறை' கிடைக்கலையேன்னு ..... ஏக்கம்.

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் நவராத்ரி பண்டிகைக்கான இனிய வாழ்த்து(க்)கள்.